
நரேந்திர மோடி ஒரு புரட்சியாளர். தொலைநோக்குப் பார்வை கொன்டவர். அடுத்த தேர்தலைக் குறித்து அல்லாமல், அடுத்த தலைமுறை குறித்து சிந்திப்பவர்… உங்களையும் என்னையும் போலவே, மிக எளிமையான சூழலில் ஒரு தேநீர்க் கடைக்காரரின் மகனாக அவர் பிறந்தார். பள்ளியில் படிக்கும் காலத்திலும் ரயில்வே பிளாட்பாரத்தில் வேலை செய்தார். நேர்மையின், மன உறுதியின், தேசபக்தியின் சின்னமாக அவர் திகழ்கிறார்… நமது சரியான தேர்வை எண்ணி நமது குழந்தைகள் பெருமைப் பட வேண்டும். மிகச் சிறந்த பிரதமரை அளித்தோம் என்று வரும் தலைமுறைகள் நன்றி கூறும் வகையில் நமது தேர்வு இருக்க வேண்டும். அதற்காகத் தான், நான் திரு நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று விரும்புகிறேன்….