Posts Tagged ‘ தண்ணீர் ’

ஏன் இந்திய நகரங்கள் இப்படி இருக்கின்றன?

பத்திர பதிவு என போனால் அரசு காசு வாங்கிக்கொண்டு இன்னாருக்கும் இன்னாருக்கும் இடையே ஒரு பதிவு நடந்தது என்று மட்டும் தான் எழுதும். அதுவும் பொதுவான அல்லது இணைக்கப்பட்ட பதிவு ஆவணம் என ஒன்று இருக்காது. யாரேனும் ஆக்கிரமித்தால் கோர்ட்டுக்கு ஒரு 100 வருசம் நடக்கவேண்டும். இந்தியாவிலே 60 சதம் வழக்குகள் நிலத்தகராறு வழக்குகள் தான். இதனால் என்ன நடக்கிறது? புற்றீசல் போல இஷ்டத்துக்கும் எலிவளை, புறாக்கூண்டு போல ஆங்காங்கே கட்டிடம் கட்டிக்கொண்டே போகிறார்கள்...எல்லாவற்றிக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிமுறைகள் வரைமுறைகள் இருக்கவேண்டும். இல்லாவிடில் எப்படி 20,000 பேர் வேலைசெய்யும் நிறுவனத்தின் கழிவையும் 40 பேர் குடியிருக்கும் வீட்டின்... [மேலும்..»]

புதிய தேசிய நீர்க்கொள்கை – ஒரு பார்வை

குடிதண்ணீரோ, ஆற்று நீரோ, நிலத்தடி நீரோ, அதை ஒரு வரி விதிப்புக்குள்ளாகும் பொருளாக மட்டுமே பார்க்க வேண்டும் என்கிறது மத்திய அரசு... நீரை "வீணாக்கும்" விவசாயிக்கு அதிக வரியும், குறைவான நீரை உபயோகிக்கும் டாஸ்மாக் தரகருக்கும் சேல்ஸ்மேனுக்கும் குறைவான வரியும் விதிக்கப்பட வேண்டும் - இது காங்கிரஸ் நியாயம்... ஐ. நா வில், குடிக்கும் தண்ணீரை மானுடத்தின் அடிப்படை உரிமையாக்க கூடாது என்று தீர்மானம் கொண்டு வந்தன அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள். அவற்றுக்கு இணையாக, நதிகளைத் தாயாகவும் கடவுளாகவும் வழிபடும் பாரதப் பண்பாட்டில் வந்த நீங்கள் செயல்படலாமா மன் மோகன் சிங் அவர்களே?.... [மேலும்..»]

அகமதாபாதில் ஒரு நாள்

August 19, 2010
By

ஒரு கிணறு அதிகபட்சம் எவ்வளவு அழகாகவும்,கலைநயமிக்கதாகவும் இருக்கமுடியும்? இது பற்றிய கற்பனைகளை எல்லாம் விஞ்சுவதாக இருந்தது அது... முற்றிலும் கருங்கல் மற்றும் மஞ்சள் கற்களால் (yellow stone) கட்டப்பட்ட அவ்வளவு பெரிய மசூதிக்குள் யாருமே இல்லை. ஒரு அசாதாரணமான அமைதி நிலவியது.அப்படியே ஒரு தூணில் சாய்ந்து உட்கார்ந்து அந்த ஆழ்ந்த அமைதியை... சபர்மதிக்கு ஒருபுறம் சிறைச்சாலையும், மறுபுறம் மயானபூமியும் இருந்தன. ஒரு சத்யாகிரகி தன் வாழ்நாளில் கண்டிப்பாக இந்த இரண்டில் ஏதாவது ஒரு இடத்துக்குத் தான் போயாக வேண்டும் என்று காந்தி கருதினாராம்... [மேலும்..»]

ஒரு நதியின் நசிவு

மூன்று பெரும் அழிவுகள் இந்த ஆற்றின் வனப்பை, ஜீவனை இன்று அழித்து வருகின்றன. அவை அரசியல்வாதிகளின் பேராசையினால் விளைந்த மணல் கொள்ளையும் அரசாங்கத்தினரின் அலட்சியத்தினால் உருவான சீமக் கருவேல மரங்களின் வளர்ச்சியும் கட்டுப்பாடில்லாமல் ஆற்றினுள் விடப்படும் கழிவுநீர், தொழிற்சாலைக் கழிவு மற்றும் ப்ளாஸ்டிக், பாலித்தீன் குப்பைகளும் ஆகும்.... வழிபாட்டிற்குரிய ஒரு கடவுளாக நம்பி வணங்கப்பட்டவரை நதிகளின் இயற்கையான வனப்பும் அழகும் எழிலும் தூய்மையும் போற்றிப் பாதுகாக்கப்பட்டன. என்று அந்தக் கலாசாரம் அழிக்கப்பட ஆரம்பித்ததோ, என்று திராவிட இயக்கங்கள் மற்றும் மதமாற்ற விஷப் பிரசாரங்களினால் மக்களின் கடவுள் நம்பிக்கையும் இயற்கை வழிபடும் நம் தொன்மையான கலாசாரமும் மெதுவாக... [மேலும்..»]

கோவை புத்தகக் கண்காட்சி 2010

இப்படிப் பல விஷயங்களில் நன்றாகச் செயல்பட்டிருந்தாலும், பபாஸி கோட்டை விட்டது விளம்பர விஷயத்தில். கோவை தொடர்வண்டி நிலையத்தில் இருந்து, புத்தகக் கண்காட்சி நடக்கும் கொடீசியா அரங்கம் கிட்டத்தட்ட 12 கிமீ தொலைவில் உள்ளது. நான் பேருந்தில் சென்று வந்தேன். நான்கு முறை சென்று வந்தபோதும், ஒரு தடவைகூட புத்தகக் கண்காட்சி பற்றிய ஓர் அறிவிப்பைக் கூடப் பார்க்கவில்லை. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக் குதிரையிலேயே சவாரி செய்துவிடலாம் என நினைத்திருப்பார்கள் போல. நான் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு அரங்குக்குள் செல்லவில்லை. நான் கேள்விப்பட்டவரை, அங்கேயும் புத்தகக் கண்காட்சி பற்றிய அறிவிப்பு எங்கேயும் இல்லை. இதனால் நிறையப்... [மேலும்..»]