Posts Tagged ‘ தமிழகத் தேர்தல் ’

அரசியல், சமூகம், தேசிய பிரச்சினைகள்

தமிழ்நாட்டைக் காப்பாற்ற பாஜகவுக்கு வாக்களியுங்கள் (தேர்தல் 2016: பகுதி 6)

தமிழ்நாட்டைக் காப்பாற்ற பாஜகவுக்கு வாக்களியுங்கள் (தேர்தல் 2016: பகுதி 6)

வெற்றி பெறும் கட்சிக்குத்தான் ஓட்டுப் போடுவேன் என்ற கேவலமான மனநிலையில் இருந்து வெளியே வாருங்கள். நீங்கள் உங்கள் எதிர்காலம் வெற்றி பெறுவதற்கான கட்சிக்கு வாக்களியுங்கள். அந்தக் கட்சி பாஜக, அதன் சின்னம் தாமரை... மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன் - தயவு செய்து தமிழ் நாட்டைக் கைவிட்டு விடாதீர்கள். மீண்டும் நரகத் தீக்குள் முழுகி விடாதீர்கள். தமிழ் நாட்டை நாசக்காரர்களிடமும் மோசடிப் பேர்வழிகளிடமும் ரவுடிகளிடமும் கொள்ளையர்களிடமும் அடமானம் வைத்து விடாதீர்கள். உங்கள் சந்ததியினருக்குப் பாவத்தை இழைத்து விடாதீர்கள். அவர்களின் எதிர்காலத்தைப் பாழடித்து விடாதீர்கள். உங்கள் பிள்ளைகளின் கல்வியைக் கேலிப் பொருளாக்கி அவர்களை எதற்கும் உபயோகமில்லாத வீணர்களாக மாற்றி விடாதீர்கள்.... [மேலும்..»]

அரசியல், சமூகம், தேசிய பிரச்சினைகள்

பா.ஜ.கவுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் (தமிழக தேர்தல் 2016: பகுதி 5)

பா.ஜ.கவுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் (தமிழக தேர்தல் 2016: பகுதி 5)

முதலில் பி ஜே பி அரசு தமிழ்நாட்டுக்காக என்ன செய்திருக்கிறது என்பதைப் பார்ப்போம். முல்லைப் பெரியாறு விஷயத்தில் கேரளத்தின் அடாவடியையும் மீறி தமிழ் நாட்டிற்கு அதிக நீர் வருவதற்காக அணையின் உயரத்தை உயர்த்த ஆட்சிக்கு வந்தவுடனேயே உத்தரவிட்டது. காங்கிரஸ் திமுக அரசாங்களினால் தடை செய்யப் பட்ட ஜல்லிக்கட்டை முறையாக நடத்த ஏற்பாடுகளை செய்தது. இன்று தமிழகத்தில் ஓரளவுக்கு மின் வெட்டு இல்லாமல் இருப்பதன் காரணம் அகந்தையும் மூர்க்கமும் நிறைந்த ஜெயலலிதா அரசு அல்ல. மத்திய அரசு கடந்த 2 ஆண்டுகளில் மத்திய மின் பகிர்மான கட்டுமானங்களை துரித கதியில் நிர்மாணித்து மத்திய தொகுப்பில்... [மேலும்..»]

அரசியல், சமூகம், தேசிய பிரச்சினைகள்

தமிழக தேர்தல் 2016: ஒரு வேண்டுகோள் – 4 (வேண்டும் பா.ஜ.க)

தமிழக தேர்தல் 2016: ஒரு வேண்டுகோள் – 4 (வேண்டும் பா.ஜ.க)

தமிழ் நாடு அழிவுப் பாதையில் இருந்தும், ஊழல்களின் பிடியில் இருந்தும், வன்முறைகள் பயங்கரவாதப் பிடிகளில் இருந்தும், அழிந்து கொண்டிருக்கும் கல்விகளில் இருந்தும், சூழல் அழிவுகளில் இருந்தும், கடன்களில் இருந்தும் விட்டு விடுதலையாகி வளர்ச்சிப் பாதையில் சென்று ஒளி மயமான ஒரு எதிர்காலத்தை நோக்கிச் செல்ல வேண்டும் என்றால் தமிழ் நாட்டு வாக்களர்களின் முன்னால் இருக்கும் ஒரே ஒரு தேர்வு பா ஜ க கட்சி மட்டுமே. பா ஜ க எந்த வகையில் முந்தைய நான்கு கட்சிகளை விட வேறு பட்டது? ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்... அவர்கள் இது வரை என்ன செய்திருக்கிறார்கள் என்று கேட்கலாம். தாங்கள் ஆளும்... [மேலும்..»]

அரசியல், சமூகம், தேசிய பிரச்சினைகள்

தமிழக தேர்தல் 2016: ஒரு வேண்டுகோள் – 3 (தீயசக்தி ம.ந.கூ)

தமிழக தேர்தல் 2016: ஒரு வேண்டுகோள் – 3 (தீயசக்தி ம.ந.கூ)

அதே ஊழல்கள், அதே ரவுடித்தனங்கள், அதே கொலை கொள்ளைகள், அதே செயல்பாட்டின்மை, அறிவின்மை, திறமையின்மை அதே மக்கள் விரோதப் போக்குகள் அதே ஜாதீய வெறித்தனங்கள் நிறைந்த ஒரு கூட்டணி. ம.ந.கூ என்ற அமைப்பில் இந்தியாவின் அனைத்து விதமான தேசத் துரோகிகளும் ஒன்று கூடியிருக்கிறார்கள். மக்களை பிச்சைக்காரர்களாக ஏழைகளாக வைத்திருப்பதன் மூலமாக மட்டுமே தங்களது அரசியல் அதிகாரத்தைத் தொடர முடியும் என்று நம்பும் நச்சுக் கிருமிகள், நாசகார ஏஜெண்டுகளான மார்க்சிஸ்டுகள் இந்தக் கூட்டணியில் இருப்பதினால் மட்டுமே கூட இது கண்டிப்பாக எதிர்க்கப் பட வேண்டும். இவர்களை ஆதரித்தால் ஒட்டு மொத்த இந்தியாவின் ஒற்றுமைக்கே அதன் இருப்புக்கே... [மேலும்..»]

அரசியல், சமூகம், தேசிய பிரச்சினைகள்

தமிழக தேர்தல் 2016: ஒரு வேண்டுகோள் – 2 (வேண்டாம் அ.தி.மு.க)

தமிழக தேர்தல் 2016: ஒரு வேண்டுகோள் – 2 (வேண்டாம் அ.தி.மு.க)

ஒரு உடல் நலன் இல்லாத அதிகார வெறி பிடித்த மர்மமான ஒரு பெண்மணிக்கு ஏன் தமிழ் நாடு வாக்களிக்க வேண்டும்? சிந்தியுங்கள். ஜெயலலிதாவுக்கு இன்றைய தேவை ஓய்வும், மருத்துவ சிகிச்சையும், பயிற்சிகளும், மருந்துகளுமே அன்றி நிச்சயமாக முதல்வர் பதவி கிடையாது. அதற்கான அருகதையுடையவர் அவர் கிடையாது என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார். அவருக்குத் தேவையான ஓய்வை அளியுங்கள்... தமிழ் நாட்டில் முக்கியமான இந்துத் தலைவர்கள் பலரும் கொடூரமான முறையில் வெட்டிக் கொல்லப் பட்டார்கள். ஆம்பூரில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் பெரும் கலவரம் நடத்தி போலீஸ்காரர்களைக் கடுமையாகத் தாக்கி பெண் போலீஸ்காரர்களை மான பங்கப்... [மேலும்..»]

அரசியல், சமூகம், தேசிய பிரச்சினைகள்

தமிழக தேர்தல் 2016: ஒரு வேண்டுகோள் – 1 (வேண்டாம் தி.மு.க)

தமிழக தேர்தல் 2016:  ஒரு வேண்டுகோள் – 1 (வேண்டாம் தி.மு.க)

இது வெறும் அரசியல் நிகழ்வு மட்டும் அல்ல. நம்மையும் நமது வாரிசுகளையும், நமது எதிர்கால சந்ததியினரையும் தனிப்பட்ட அளவிலும் பாதிக்கச் செய்யும் ஒரு முக்கியமான பொது நிகழ்வு ஆகும். எப்படி உங்கள் கல்வி, திருமணம், குழந்தைகள் நலன், வீடு கட்டுதல்/வாங்குதல், வேலை போன்றவற்றிற்கு எல்லாம் அதி முக்கியத்துவம் தருவீர்களோ அது போன்ற ஒரு முக்கியத்துவத்தைத் தயவு செய்து இந்தத் தேர்தல் குறித்தான எனது வேண்டுகோளுக்கும் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்... உலக வரலாற்றிலேயே மாபெரும் ஊழல்களை நிகழ்த்தியவை தி மு க வும் காங்கிரஸும். வேறு எந்த நாட்டிலும் இவர்கள் கைது செய்யப் பட்டு மரண தண்டனையோ அல்லது... [மேலும்..»]

அரசியல்

தமிழகம் ஊழலுக்குக் கொடுத்த சம்மட்டி அடி

தமிழகம் ஊழலுக்குக் கொடுத்த சம்மட்டி அடி

ஊழல் உறுத்து வந்து ஊட்டும்; அரசியல் பிழைத்தோர்க்கு தேர்தல் கூற்றாகும்...ஜாதி அரசியலால் வெற்றி பெற்றுவிடலாம் என்று கனவு கண்ட பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச்... நல்ல பாடம் கற்றிருக்கின்றன... இதன்மூலம், ஊழல் ஒரு பொருட்டல்ல என்று விதண்டாவாதம் பேசிய காங்கிரஸ் கட்சியின் முகத்திலும் கரியைப் பூசி இருக்கிறார்கள், விழிப்புணர்வுள்ள மக்கள்... நாட்டு மக்களை பொய்யான கருத்துக் கணிப்புகளால் குழப்பிவிட முடியாது என்பதும் இத்தேர்தலில் நிரூபணம் ஆகியிருக்கிறது. [மேலும்..»]

அரசியல், நிகழ்வுகள்

காகித ஓடம் – கார்ட்டூன்

May 14, 2011
-
காகித ஓடம் – கார்ட்டூன்

காகித ஓடம் .. கடலலை மேலே.. போவது போலே.. மூவரும் போவோம்.. [மேலும்..»]

அரசியல், நேர்காணல்

தேர்தல் களம்: பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பிரத்யேக பேட்டி

தேர்தல் களம்: பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பிரத்யேக பேட்டி

கருணாநிதிக்கு ஒரே மாற்று ஜெயலலிதா தான் என்ற சிந்தனை மக்களிடம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆனால், இந்தச் சித்திரத்தை ஊடகங்கள் உருவாக்குகின்றன... பாஜக சிறுபான்மையினரை வெறும் வாக்குவங்கியாகக் கருதவில்லை. பெரும்பான்மையினர் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று பாஜக கூறவில்லை; அதே சமயம் தாழ்வாக நடத்தப்படக் கூடாது என்றே கூறுகிறது...பாஜக, மீனை இலவசமாகக் கொடுக்குமாறு கூறுவதில்லை; மீன் பிடிக்க கற்றுத் தருவதையே பாஜக நோக்கமாகக் கொண்டுள்ளது. [மேலும்..»]

அரசியல், நிகழ்வுகள்

தேர்தல் களம்: சனிக்கிழமை 63ம் செவ்வாய்கிழமை 63ம்…

தேர்தல் களம்: சனிக்கிழமை 63ம் செவ்வாய்கிழமை 63ம்…

இதுவரை இருந்த மத்திய அரசுகளிலேயே மிக மோசமான, ஊழல்மயமான, கீழ்த்தரமான அரசு என்ற பெயரை ஏற்கனவே பெற்றுவிட்ட மன்மோகன் அரசுக்கு, இனிமேலும் தி.மு.க.வைக் காப்பது முடியாத காரியம் என்பது புரிந்துபோனது. ஐந்து மாநிலத் தேர்தலில் நான்கிலாவது காங்கிரஸ் வெல்ல வேண்டுமானால், ‘ஊழலை சகிக்க முடியாது’ என்பதை நாட்டு மக்களுக்கு தெளிவாக காங்கிரஸ் புரிய வைத்தாக வேண்டும் [மேலும்..»]