Posts Tagged ‘ தமிழருவி மணியன் ’

ஒரு மரணமும், மதுவுக்கு எதிரான எழுச்சியும்…

மதுவிலக்கை நீக்கியதுடன், மது விற்பனையை நிறுவனமயமாக்கியதும் திமுக தான். அக்கட்சியே மதுவிலக்குக்கு ஆதரவாக கருத்துக் கூறியவுடன், பல கட்சிகளும் இப்போது இக்கோரிக்கையை ஆதரிக்கத் துவங்கி உள்ளன. அதை சசிபெருமாளின் மரணம் தீவிரப்படுத்தி உள்ளது... இக்கட்சிகள் சுயலாப நோக்குடன் மதுவிலக்கை ஆதரித்தாலும், வரவேற்கத் தக்கதே. ஆனால், இந்த மது எதிர்ப்புணர்வு உண்மையானதாக இருக்க வேண்டும். வாய்ச்சொல்லில் வீர்ர்களாக, மதுவை எதிர்ப்பதாக நடித்துக்கொண்டே தனது தொண்டர்கள் மதுவில் கும்மாளமிடுவதைத் தடுக்க இயலாதவர்களாக அரசியல் கட்சித் தலைவர்கள் இருப்பது தான் உண்மையான வேதனை.... [மேலும்..»]

மதுவை எதிர்ப்பது நமது உரிமை!

மதுவை எதிர்ப்பது நமது உரிமை!

காந்தி ஜெயந்தி சிறப்புக் கட்டுரை “கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால் கைகொட்டிச் சிரியாரோ?” -என்று பாடுவார் மகாகவி பாரதி,  ‘சுதந்திரப் பெருமை’ என்ற பாடலில். சுதந்திரத்தின் மகிமையை விளக்க அவர் எழுதிய இவ்வரிகள், மதுபோதையில் தள்ளாடும் தற்போதைய தமிழகத்தின் அவலநிலைக்கும் பொருந்துவதாக உள்ளன. நாட்டிலேயே தமிழகத்தில் தான் மாநில அரசே மதுவிற்பனையை ஊக்குவித்து மக்களைக் கொன்று குவிக்கிறது. குஜராத் தவிர வேறெந்த மாநிலத்திலும் மதுவிலக்கு இல்லாதபோதும், பிற மாநிலங்களில் தமிழகம் போல மதுவிற்பனைக்கென்றே  ‘டாஸ்மாக்’ (TASMAC) போன்ற அரசு நிறுவனம் இயங்குவதாகத் தெரியவில்லை. தமிழகத்தில் மட்டுமே மது விற்பனையை அதிகரிக்க அரசே இலக்கும் நிர்ணயிக்கிறது. இதில் நகைமுரண்... [மேலும்..»]

மாற்றம் கொண்டுவரும் மாற்று அணி!

“பாஜக கூட்டணி காலத்தின் கட்டாயம் சார். பொன்.ராதாகிருஷ்ணன் தனது தலைமையை நிரூபித்திருக்கிறார். இந்தக் கூட்டணி குறைந்தபட்சம் 10 முதல் 15 தொகுதிகளில் வென்றே தீரும்” என்றும் கூறினார் அந்த நடத்துனர். இந்த வார்த்தைகளில் ஒரு சதவிகிதம் கூட கலப்பில்லை. மிகத் தெளிவான, ஊரகப் பகுதி மனிதர் ஒருவரின் வாக்குமூலமாக இதை உணர முடிந்தது. அதன்பிறகு, எங்கள் பேச்சு, தொகுதிப் பங்கீடுகள், வேட்பாளர்கள் தேர்வு குறித்தெல்லாம் சென்றது. நடத்துனரின் அரசியல் அறிவு அதில் பளிச்சிட்டபடியே இருந்தது.... வெற்றி- தோல்விகள் அனைவருக்கும் பொதுவானவை. ஆனால், மகத்தான மாற்றங்களுக்கு முயற்சிப்பதே ஒரு பெரும் சாகசம். அந்த சாகசத்தில் தமிழக பாஜக வெற்றி... [மேலும்..»]

தமிழகத்தில் அமைந்தது மாற்று அணி!

எண்ணியிருந்தது ஈடேறுகிறது! தமிழகத்தில் இரு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்றாக பாஜக தலைமையில் புதிய மாற்று அணி உருவாக வேண்டும் என்று தமிழ்ஹிந்து இணையதளம் கடந்த செப்டம்பர் மாதமே வலியுறுத்தியது. அநேகமாக, இந்தக் கண்ணோட்டம் அப்போது புதிய சிந்தனையாகவே இருந்தது. காண்க: தமிழகத்தில் மாற்று அணி அமையுமா?-1 பாஜகவின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படும் நரேந்திர மோடிக்கு மக்களிடம் பெருகிவரும் செல்வாக்கைப் பயன்படுத்தி தமிழ்கத்தில் தேமுதிக,  மதிமுக, பாமக கட்சிகளை ஒருங்கிணைத்து பாஜக தனி அணி அமைக்க வேண்டும் என்று நாம் வலியுறுத்தினோம். காண்க: தமிழகத்தில் மாற்று அணி அமையுமா?-2 இன்று நாம் எதிர்பார்த்த கூட்டணி அற்புதமாக அமைந்துவிட்டது. சில... [மேலும்..»]

தமிழகத்தில் மாற்று அணி அமையுமா? – 1

September 19, 2013
By

  “தமிழகத்தில் விஷக் கிருமிகள் நுழைந்துவிட்டன’’ என்று கூறினார் முன்னாள் முதல்வர் பக்தவத்சலம். திமுக-விடம் காங்கிரஸ் தோற்று ஆட்சிப்பொறுப்பை ஒப்படைத்தபோது அவர் கூறியது உண்மை என்பது தற்போது நிருபிக்கப்பட்டுவிட்டது. நிரூபித்தவர்கள் கழகக் கண்மணிகளே தான். திமுக-விலிருந்து பிரிந்து உருவான அதிமுக-வும் தன் பங்கிற்கு தமிழக அரசியலை நாசம் செய்திருக்கிறது. இவ்விரு கட்சிகள் இடையிலான துவம்ச யுத்தமாக தமிழக அரசியல் களம் மாறியபோதே, தமிழகத்திற்கு மீட்பு இல்லை என்றாகிவிட்டது. பரம்பரை விரோதிகள் போல இவ்விரு கட்சியினரும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை சுமத்துவதுடன், பொதுவான அரசியல் நாகரிகத்தைத் தூர எறிந்து, இரு தனிநபர்களின் பந்தாட்டமாக தமிழக அரசியலை மாற்றி இருக்கின்றனர். அதிமுக... [மேலும்..»]