Posts Tagged ‘ தமிழறிஞர் ’

சமணர் கழுவேற்றம்: புத்தக விமரிசனம்

December 4, 2017
By

சமணர் கழுவேற்றம் ஒரு வரலாற்று நிகழ்வு என்பதற்கு சிறிதும் ஆதாரமில்லை என்பதே உண்மை. வரலாற்றாசிரியர்களும் தமிழறிஞர்களும் பெரியபுராணமும் திருவிளையாடற்புராணமும் கூறும் செய்திகள் இலக்கிய மிகைக் கூற்றுகள் மட்டுமே என்று தங்கள் நிலைப்பாட்டைத் தெளிவாகப் பதிவு செய்துள்ளனர். இதற்கு மாறாக, சைவ பாரம்பரியவாதிகள் முற்றிலும் உண்மையாக நடந்த சம்பவமே என்று வாதிட்டிருக்கின்றனர். சமணர் தரப்பில் இந்த நிகழ்வு எங்கும் பதிவுசெய்யப் படவில்லை என்பது ஏற்கனவே சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. இது தொடர்பான ஒட்டுமொத்த விவாதங்களையும் கோர்வையாக சான்றுகளுடன் இந்த நூலாசிரியர் எடுத்துக் காட்டுகிறார்..... [மேலும்..»]

பாரதமாதாவைப் பாடிய தமிழறிஞர்கள்

பாரத அன்னையை ‘உலகிற்கோர் விளக்கனையாய் எம்முயிர்கோர் உயிரனையாய்’ என பாடியிருக்கிறார் மறைமலையடிகள். அவரை ஆர்.எஸ்.எஸ் கும்பல் தமிழன் என்று சொல்லிவிட்டது. பார்ப்பன பாசிசம் :) ... பாரத நாட்டைப் பாடுவமே - பரமா னந்தங் கூடுவமே - முனிவர்கள் தேசம் பாரதமே - முழங்கும் வீரர் மாரதமே - பாரத தேசம் பேரின்பம் - பார்க்கப் பார்க்கப் போந்துன்பம் - வந்தே மாதர மந்திரமே - வாழ்த்த வாழ்த்த சுதந்திரமே... வந்தே மாதரத்தையும் மதத்தையும் தமிழ்நாட்டுக்குள் கொண்டு வந்துவிட்ட ஆரிய அடிவருடி தெலுங்கர்தான் திருவிக.... [மேலும்..»]

பெரியசாமி தூரன்: தமிழகத்தின் உண்மையான பெரியார்

தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் அறிவியக்கத்திற்கு இவர் ஆற்றியுள்ள பங்கு ஒப்பிடலுக்கு அப்பாற்பட்டது... பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்தபோது, செட்டியார் மனமுவந்து அளித்த முப்பது ரூபாய் மாதச் சம்பளத்தை அதிகம் என்று மறுத்து வெரும் பதினைந்து ரூபாய் மட்டுமே பெற்றுக் கொண்டு பணியாற்றினார். தூரன் என்ற பெயர் சொன்னாலே அது “கலைக்களஞ்சியம்” என்று சொல்லப்பட்ட “தமிழ் அபிதான சிந்தாமணி”யைத்தான் (தமிழ் என்ஸைக்ளோபீடியா) குறிக்கும். ஏனென்றால், கடுமையாக உழைத்து அதைப் பத்து தொகுதிகளாக தமிழுலகிற்கு அளித்த கொடை வள்ளல் அல்லவா அவர்? [மேலும்..»]