Posts Tagged ‘ தமிழ்நாட்டில் மோடி ’

2019 தேர்தல்: யாருக்கு வாக்களிப்பது?

கடந்த பல பத்தாண்டுகளாக தமிழ்நாட்டு அரசியலை வியாபித்திருக்கும் மொண்ணைத் தனத்தையும் தேக்கத்தையும் உடைத்தெறியக் கூடிய சாத்தியக் கூறுகளையும் இந்தத் தேர்தல் கொண்டிருக்கிறது... எந்த முறையும் இல்லாதவாறு இந்தத் தேர்ந்தலில் ஹிந்துக்களிடம் ஒரு கேள்வி எழுந்துள்ளது. ஏன் ஹிந்துக்களை மட்டும் மட்டம்தட்டிக் கேவலப்படுத்தும் ஒரு கட்சிக்கு ஹிந்துக்கள் வாக்களிக்கவேண்டும் என்பதே அது... திமுகவை தமிழக அரசியலில் அசைத்துப் பார்க்க கிடைத்திருக்கும் அரிய சந்தர்ப்பம் இது. கருணாநிதி இல்லாத நிலையில், ஸ்டாலின் மீது நடுநிலைப் பொதுமக்கள் எதிர்ப்புணர்வு கொண்டிருக்கும் நிலையில், திமுகவை ஆட்டம் காண வைப்பது எளிது... [மேலும்..»]

ஜெயலலிதா மோதி பதவியேற்பு விழாவைப் புறக்கணிப்பது சரியா?

May 26, 2014
By

தனது கடும்போக்கு மூலம் ஜெயலலிதா என்ன உணர்த்துகிறார்? "ராஜபக்சேவின் போர்க்குற்றங்கள்" என்ற ஒற்றை பிரசினையை மையமாக வைத்துத் தமிழகத்திற்கும் மத்திய அரசுக்கும் உள்ள உறவு நிர்ணயிக்கப் படும் என்கிறாரா? இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற தமிழ் மக்களுக்குக் கூட தங்களது அன்றாட வாழ்வாதார, சமூக, பொருளாதார பிரசினைகளைத் தாண்டி *மையமான* ஒற்றைப் பிரசினையாக இந்த விஷயம் இல்லை... தமிழகத்தின் மக்கள் மிகப் பெரும்பான்மையாக அதிமுகவுக்கு வாக்களித்தது ஜெயலலிதா ராஜபட்சேக்கு தண்டனை வாங்கித் தருவார் என்பதற்காகவா என்ன?... தனக்குக் கிடைத்திருக்கும் ஜனநாயக பூர்வமான அதிகாரத்தை ஜெயலலிதா துஷ்பிரயோகம் செய்கிறார்... [மேலும்..»]

திரு.மோதி – ஈழத்தமிழருக்கு விடிவெள்ளி

தமிழர்கள் சம உரிமையுடனும் பாதுகாப்புடனும் வாழும் இந்தியாவின் நட்புநாடாக இலங்கையை மோதி மாற்றுவார். அதற்கான நோக்கமும், திட்டமிடலும், செயல் வேகமும், தகுதியும் ,வாய்ப்பும், ஆர்வமும் இன்று மோதி அவர்களிடம் மட்டுமே உள்ளது. ஆனால் அவரைப் புரிந்துகொண்டு பாரதத்தின் புணர்நிர்மாணத்தில் தோள்கொடுக்க தமிழகம் தவறியது வேதனையான ஒன்று... மோதி அவர்கள் இலங்கை அதிபர் ராஜபச்சாவை பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததைக் காட்டமாக விமர்சிக்கும் தீவிர தமிழர் அமைப்புகள் ஈழத்தமிழருக்கு நன்மை செய்வதாகக் கூறிக்கொண்டு இந்தியத் தமிழர்களையும் தவறான பாதையில் திருப்புகிறவர்கள். இதில் பலரது நோக்கம் வயிற்றுப்பிழைப்பு, இவர்களால் ஈழத்தமிழர்கள் பெற்ற நன்மை என்ன? ஒன்றுமே இல்லை... [மேலும்..»]

தமிழகமும் 2014 தேர்தலும்: கருத்துக் கணைகள் – 1

தினமும் 10 மணி நேரம் மின் வெட்டை மாநிலம் முழுவதும் செய்து வரும் ஜெயலலிதாவுக்கு இந்த முறை மக்கள் தங்கள் கோபத்தைக் காட்டாவிட்டால் அவர் அவர்களை இலவசங்களை வாங்கிக் கொள்ளும் பிச்சைக்காரர்களாக மட்டுமே வருங்காலத்திலும் நடத்துவார்.... தமிழகத்தில் பாஜக அறிவித்துள்ள வேட்பாளர்களில் பெண் ஒருவர் கூட இல்லை என்பது ஒரு பெரும் குறை. வேலூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக தமிழிசை அல்லது வானதி இருவரில் ஒருவர் அறிவிக்கப் படுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இப்போது இருவரும் இல்லாமல் "கல்வித் தந்தை" ஏ.சி.சண்முகம் தாமரைச் சின்னத்தில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.... [மேலும்..»]

நரேந்திர மோடி: வாழ்வும் அரசியலும் – புதிய புத்தகம்

நரேந்திர மோடி: வாழ்வும் அரசியலும் – புதிய புத்தகம்

மோடியை நீங்கள் சந்திக்கச் சென்றீர்களானால் அவர் கவனம் முழுவதும் உங்களிடம் மட்டுமே தான் இருக்கும். உங்களிடம் பேசிக்கொண்டிருக்கும் போது எந்தவித இடையூறுக்கும் ஆட்பட மாட்டார். மோடி, மிகவும் வெளிப்படையாக நடந்து கொள்வார். மற்றவர்களை விட தான் தான் உயர்ந்தவன் என்று ஒருபோதும் காட்டிக்கொள்ள மாட்டார். மோடியுடன் உரையாடுவது ஒரு திறந்த புத்தகத்தைப் படிப்பது போன்றது.... எஸ்.பி.,சொக்கலிங்கம் எழுதியுள்ள இந்த நூல் 2002 குஜராத் கலவரத்தின் பின்னணி, அது தொடர்பான பல்வேறு விசாரணை கமிஷன்கள், நீதிமன்ற தீர்ப்புகள் குறித்தும் நூல் விலாவாரியான செய்திகளைத் தருகிறது. தொடர்ந்து மூன்று சட்டமன்றத் தேர்தல்களில் குஜராத்தில் மோடியின் தலைமையில் பா.ஜ.க. பெரும்... [மேலும்..»]

நரேந்திர மோடி: புதிய இரும்பு மனிதர் – புத்தக அறிமுகம்

January 16, 2014
By

மோதியின் அரசியல் வாழ்க்கையின் முக்கியப் புள்ளிகளை சுருக்கமாக ஆனால் முழுமையாகத் தொட்டுச் செல்கிறது அரவிந்தன் நீலகண்டன் எழுதியிருக்கும் இந்த நூல். "டீக்கடைப் பையன்" முதல் "பிரதம மந்திரி மோடி?" வரை பதினாறு அத்தியாயங்களில் மோடியின் தொடக்க காலம், ஆர் எஸ் எஸ் பிரசாரக்கிலிருந்து குஜராத் முதல்வர் வரை அவர் படிப்படியாக வளர்ந்து வந்த அரசியல் வரலாறு, அவரது சாதனைகள், மோடி எதிர்ப்பாளர்களின் குற்றச் சாட்டுகள், அதற்கான எதிர்வினைகள் என்று கச்சிதமாக அமைந்துள்ளது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் மோடியின் வாழ்க்கை... [மேலும்..»]

வீடு தோறும் மோடி, உள்ளம் தோறும் தாமரை

பாரதிய ஜனதா கட்சியின் புதிய முயற்சியாக மோடியை பற்றி தமிழகம் முழுக்க விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களுக்கு தமிழக மக்களின் மன நிலையை நேரில் அறியவும், சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் அணுகி அறிவதற்காகவும் இல்லம் தோறும் மோடி, உள்ளம் தோறும் தாமரை எனும் மாபெரும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்திருக்கிறது... தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களின் வேண்டுகோள் கீழே.. இதில் தன்னார்வலர்களாகப் பங்குபெற விரும்புபவர்கள் விண்ணப்பப் படிவத்தில் தங்கள் விவரங்களை அளித்து களப்பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம்.. [மேலும்..»]

திருச்சியில் மோதி திருவிழா – ஒரு நேரடி அனுபவம்

September 27, 2013
By

மோடியைக் கண்டவுடன் மக்கள் அடைந்த உற்சாகத்தை விவரிக்கவே முடியாது. இதுதான் உண்மையான எழுச்சி. தமிழர்கள் முகம் கோணாமல் அகம் நிறைந்து ஒரு ஹிந்தி சொற்பொழிவை ஒரு மணி நேரம் கேட்டார்கள். வாழ்க ஒழிக என்று கோஷம் போட்டே பழக்கப்பட்ட மக்கள் வந்தேமாதரம் என்று கோஷம் போட்டார்கள்... இந்த கும்பலெல்லாம் இதற்கு முன் மற்ற கட்சிகளுக்கு ஆதரவு செலுத்தியவர்களாகத்தான் இருப்பார்கள். இந்த கட்சி கூட்டத்திற்கு வரும் போது மட்டும் ஒழுங்கு எப்படி இயல்பாக வந்து விடுகிறது என்று யோசித்தால் ஒன்று புரியும். தலைவன் எவ்வழி மக்கள் அவ்வழி... பொதுவாக எல்லா கட்சி மாநாடுகளிலும் நிகழ்ச்சி நடந்து முடிந்த பின்... [மேலும்..»]

திருச்சியில் நரேந்திர மோதி உரை: ஒரு பார்வை

September 26, 2013
By

”தமிழ் மண்ணிற்கு வருகை தருவதை மதிப்புக்குரிய விஷயமாகக் கருதுகிறேன். தமிழ் மக்களிடம் மூன்று நல்ல குணங்கள் உண்டு - கடும் உழைப்பு, சிரத்தை, ராஜகம்பீரம் & விசுவாசம் (royal & loyal). தமிழகத்தின் பொருட்கள் தேசிய, உலக சந்தைகளில் தரம் வாய்ந்தவையாக உள்ளன. ... ” இது ஒரு சாதாரண அரசியல்வாதி பேசும் பேச்சல்ல. இந்த தேசத்தின் மீது, மண்ணின் மீது, காலகாலமாக இருந்து வரும் அதன் சமூக, கலாசார பந்தங்களின் மீது ஆழமான பிடிப்பும், அன்பும் கொண்ட ஒருவரின் பேச்சு. எண்ணமும், செயலும் எல்லாம் இந்த தேசத்தை ஒற்றுமைப் படுத்துவதற்காகவே, இந்த தேசமக்களின் நல்வாழ்விற்காகவே... [மேலும்..»]

நரேந்திர மோடி – நல்வரவு!

நரேந்திர மோடி – நல்வரவு!

பாரதத் தாயின் தவப்புதல்வரை,  நல்லாட்சி தரும் நாயகரை வாழ்த்தி வரவேற்கிறது தமிழகம் ! [மேலும்..»]