Posts Tagged ‘ தமிழ் இலக்கியம் ’

‘திராவிட இயக்கத்தின் இந்துமத வெறுப்பு’ கருத்தரங்கம்: வீடியோ

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் 2017 டிசம்பரில் சுதேசிய இந்தியவியல் - 3 (Swadeshi Indology - 3) மாநாடு சிறப்பாக நடைபெற்றது.  அதன் ஒரு பகுதியாக நிகழ்ந்த 'திராவிட இயக்கத்தின் இந்துமத வெறுப்பு' குறித்த கருத்தரங்கத்திற்கு டாக்டர். பேராசிரியர் கனகராஜ் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். ம.வெங்கடேசன், பத்மன், ஜடாயு, தேவப்ரியா ஆகியோர் உரையாற்றினர். ஈ.வெ.ராவின்  சமூக அழிப்புக் கொள்கைகள், தமிழ் ஊடகங்களின் இந்து எதிர்ப்பு மனநிலை, தமிழ் இலக்கியங்களைத் திரித்தும் அவற்றின் இந்துக்கூறுகளை இருட்டடித்தும் திராவிட இயக்கத்தினர் செய்த பிரசாரம், கிறிஸ்தவ மிஷநரிகளின் பொய்கள் ஆகியவை குறித்து இந்த உரைகள் அமைந்தன. பார்வையாளர்களுடனான கேள்வி... [மேலும்..»]

தமிழன்னையின் அணிகலன்கள்

தமிழன்னையின் காதினில் குண்டலங்களாக, குண்டலகேசி ஒளிர்கின்றது. கைகளில் அணிந்த வளைகளாக வளையாபதி திகழ்கின்றது. கருணை பொருந்திய அத்தமிழன்னையின் மார்பில் (சீவக)சிந்தாமணி எனும் ஆரம் ஒளிவீசுகின்றது. அன்னையின் மெல்லிய இடையில் (மணி)மேகலை அணியப்பட்டுள்ளது. அவளுடைய திருவடிகள் சிலம்பார் இன்பப் போதொளிர்பவை- அதாவது சிலம்புகளை (சிலப்பதிகாரம்) அணிந்த திருப்பாதங்கள். நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத் தாங்குகிறாள் இவள். அத்தகைய தமிழ் நீடுவாழ்க!’ என உளங்கனிந்து பெருமிதத்தில் விம்மி வாழ்த்தும் புலவர் யார்?.... [மேலும்..»]

ஜடாயு உரை: இளங்கோ முதல் தாயுமானவர் வரை

கடந்த ஜூன்-4, 2017 ஞாயிறு அன்று அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தின் வளைகுடாப் பகுதியிலுள்ள பாரதி தமிழ்ச்சங்கம் என்ற அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் ‘இளங்கோ முதல் தாயுமானவர் வரை: தமிழ் இலக்கியச் சுடர்கள்‘ என்ற தலைப்பில் உரையாற்றினார் ஜடாயு. அதன் ஆடியோ, வீடியோ பதிவுகள் கீழே... அவரது உரையை கிட்டத்தட்ட இரண்டாம்/மூன்றாம் நூற்றாண்டிலிருந்து பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதி வரையான தமிழ் இலக்கியத்தின் சிறந்த படைப்புகள்/படைப்பாளிகள் பற்றிய ஒரு கழுகுப் பார்வை (Bird’s eye view) என்று சொல்லலாம். உரையின் அடிநாதமாக இருந்தது தமிழ் இலக்கியம்,... [மேலும்..»]

பெங்களூர் அசோகமித்திரன் நினைவுக் கூட்டம்: பதிவுகள்

April 5, 2017
By

கடந்த மார்ச்-23, 2017 அன்று மாபெரும் நவீனத் தமிழிலக்கிய எழுத்தாளரான அசோகமித்திரன் மறைந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக பெங்களூர் வாசக வட்டம் சார்பாக, ஏப்ரல் 2, ஞாயிறு ஒரு நினைவுக் கூட்டம் நிகழ்ந்தது. அக்கூட்டத்தில் ஆற்றப்பட்ட உரைகளும், கலந்துரையாடலும் இலக்கியத் தரத்துடன் சிறப்பாக அமைந்தன. அவற்றின் வீடியோ பதிவுகள் கீழே... டாக்டர் ப.கிருஷ்ணசாமி அசோகமித்திரனுடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நெருங்கிய தொடர்பில் இருந்தவர். சிறந்த இலக்கிய விமர்சகர், ஆய்வாளர். அசோகமித்திரனின் தனித்துவம் மிக்க இலக்கிய ஆளுமை குறித்து சிறப்பாகவும் உள்ளத்தைத் தொடும் வகையிலும் தனது உரையில் எடுத்துரைத்தார்.... [மேலும்..»]

அறிவனும் தாபதரும் தமிழ் யோக மரபும்

October 24, 2016
By

தொல்காப்பியம் ஓரிடத்தில் பார்ப்பார், அரசர், ஏனோர் (வணிகர், வேளாளர்), அறிவர், தாபதர் (தவம் செய்வோர்), பொருநர் (போர் செய்வோர்) என்பவர்களை ஒரே சூத்திரத்தில் பட்டியலிட்டுப் பேசுகிறது. வெற்றிக்கு உரியதான வாகைத்திணையை விளக்கும் சூத்திரம் இது. முதற்பார்வையில் இந்தப்பட்டியல் தொடர்பற்றவற்றை ஒன்று சேர்த்து ஏதோ கலந்து கட்டியது போலத் தோற்றமளிக்கிறது. ஆனால் உரைகளின் துணைகொண்டு கற்கும் போது தமிழ் இலக்கண மரபின் ஆழமும் மேதமையும் புலனாகிறது... பதஞ்சலி யோக சூத்திரத்தின் மொழிபெயர்ப்புப் போலவே அமைந்துள்ள இவற்றைக் கொண்ட நூல் எதுவென்று தெரியவில்லை. தமிழ்நாட்டுப் பதஞ்சலி யோக மரபில் சூத்திரங்களாகவே அந்த நூல் பயிலப் பட்டிருக்க வேண்டும். அந்த நூல்... [மேலும்..»]

தமிழ் இலக்கிய வாசிப்பை எங்கிருந்து தொடங்குவது

June 6, 2016
By

தமிழ் இலக்கிய வாசிப்பை எங்கிருந்து தொடங்குவது என்று கேட்டுவரும் சில நண்பர்களுக்கு எனது பரிந்துரை (நூலகத்தில் போய் புத்தகம் படிப்பதெல்லாம் ruled out, வாங்கித் தான் வாசிக்க வேண்டும் என்பதால், 'வாங்கி' படிக்கும் வகையில் இருக்கவேண்டும் என்பதையும் கணக்கில் கொண்டு)... உங்கள் ஒட்டுமொத்த தமிழ் நவீன இலக்கிய வாசிப்புக்கு இந்த நூலை ஒரு வழிகாட்டியாகக் கொள்ளலாம். நூலின் கடைசியில் தமிழின் மிகச்சிறந்த நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், வணிக இலக்கியம் எனப் பட்டியல்கள் உள்ளன.. திரும்பத் திரும்ப வாசித்துத் தீரவேண்டிய, பல எழுத்தாளர்களின் கதைகள் ஒரே புத்தகத்தில் அடங்கிய தொகுப்பு இது... கவிதைகளில் உங்களுக்கு ஆர்வம் உண்டா... [மேலும்..»]

ஆறுமுகநாவலரின் தமிழ் நடை

நாவலரும் அவர் வழி வந்த நல்லறிஞரும் திருத்தி வளர்த்த நம் தமிழ்மொழி இப்போது சிதைக்கப்பட்டு வருவது கொடுமையானது. பத்திரிகைகள் முதலிய ஊடகங்களிலேயே பல எழுத்துப்பிழைகளும் சொற்பிழைகளும் மிக அதிகளவில் காணப்படுகின்றன. சிலரது எழுத்துக்களில் ஆங்கிலத்தில் வேற்றுமையுருபுகளை பெயருடன் சேர்க்காமற் பிரித்தெழுதுவது போல, தமிழில் எழுத முயல்வது தெரிகின்றது. புதிது புதிதாக பல மரபுகள் உருவாகின்றனவா? என்று ஐயமுண்டாக்குவதுபோல பலரது எழுத்துநடை உள்ளது. [மேலும்..»]

கம்பராமாயணம் – 66 : பகுதி 3

July 4, 2015
By

மத்தால் கடையப்படும் தயிர் போல, உடலுக்குள் வந்தும் வெளியே சென்றும் தத்தளிக்கிறது அவனது உயிர். அந்த உயிருடனே, ஐந்து புலன்களையும் வீழ்த்துகின்ற பித்து நிலையும், நின் பிரிவாலே தோன்றிய வேதனையும் எவ்வளவு? அதை அளவிட்டுச் சொல்ல முடியுமோ?.... இராவணனுடைய மூன்று கோடி ஆயுளையும், முயன்று பெற்றிருந்த பெரிய தவப் பயனையும், வரத்தையும், மற்றும் திசைகளையும், உலகங்கள் எவற்றையும் போரால் வென்ற தோள் ஆற்றலையும் உண்டு விட்டு, அவனுடைய மார்பில் நுழைந்து, உடல் எங்கும் சுழன்று ஓடி, உயிரைப் பருகிவிட்டு வெளியே சென்றது இராகவன் செலுத்திய புனிதம் நிறைந்த அம்பு... [மேலும்..»]

கம்பராமாயணம் – 66 : பகுதி 2

July 3, 2015
By

இனிமேல் வேறு என்ன சொல்ல வேண்டும்? பிரமனை முதலாகக் கொண்டு உயர்ந்தவை தாழ்ந்தவை என்று எடுத்துக் காட்டப் பட்ட எல்லா உயிரினங்களும் (இராமன் சடாயுவுக்குக் கொடுத்த நீர்க்கடனை) அருந்தி மகிழ்ந்தவை போலாயின.... எந்தக் குலத்தில் பிறந்தவராயினும், அவர்கள் எல்லோர்க்கும், மேன்மையும் கீழ்மையும் அவரவர் செய்யும் செயல்களாலேயே வரும். (வானர குலத்தில் பிறந்திருந்தாலும், உனது பெரும் அறிவால்) அதை நீ நன்கு உணர்ந்திருந்தும், பிறன் மனைவியின் கற்பு மாண்பினை அழித்தாய்” என்று உரைத்தான், மனு நீதியில் தவறாதவனாகிய இராமன்.... [மேலும்..»]

கம்பராமாயணம் – 66 : பகுதி 1

July 1, 2015
By

இந்த 66 பாடல்களின் தொகுப்பு, கதைப் போக்கின் தொடர்ச்சியையும், முக்கியமான கட்டங்களையும் பாடல்கள் தரும் உணர்வெழுச்சியையும் கருத்தில் கொண்டு, இராமகாதையின் அமுதச் சுவையை முதல்கட்டமாக அறிமுகப் படுத்தும் நோக்கில் செய்யப் பட்டுள்ளது... "சபையோர் யாவரும் கண் கொட்டுவதைக் கூட தவிர்த்து, இமைக்காதபடி, நிகழ்வதைப் பார்த்து நின்றனர். இராமன் தன் திருவடியால் அந்த வில்லின் முனையை மிதித்ததையும், அதை வளைத்து மற்ற முனையில் நாண் ஏற்றியதையும், அந்தச் செயல் நிகழ்ந்த வேகத்தால் அவர்களால் காண முடியவில்லை. மனத்தாலும் இன்னது தான் நிகழ்ந்தது என்று அவர்களால் அறிய முடியவில்லை..." [மேலும்..»]

Josh Oliver Authentic Jersey