திருமுறை இசையில் அழகியல் மாற்றம்

சம்பந்தர் இசையில் புது மரபினைத் தோற்றுவித்ததைப் போலவே இசைப்பாடல்களின் வடிவத்திலும் புது மரபினைத் தோற்றுவித்தார்…. யாழின் கட்டிலிருந்து முதலில் இசை விடுதலை பெற்றது. பின் யாப்பின் கட்டினையும் உடைத்து விரிவடைந்தது. இது தென்னக இசை உருக்களில் நிகழந்த அழகியல் மாற்றம் …

View More திருமுறை இசையில் அழகியல் மாற்றம்

சம்ஸ்கிருதம் – சில கேள்விகள்

பகவத் கீதைக்கு உரை எழுதிய ஆதிசங்கரர் ‘நெருப்பு சுடாது என்று நூறு முறை வேதத்தில் சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டாம்; அனுபவம்தான் பிரமாணம்’ என்கிறார்… ”தமிழர்கள் சம்ஸ்க்ருத மொழியில் பெரும் புலமை பெற்று இந்தியாவிற்கே வழிகாட்டியிருக்கிறார்கள்” என்கிறார் ஜெயகாந்தன்.

View More சம்ஸ்கிருதம் – சில கேள்விகள்

மஹாகவி பாரதியாரின் கதைகள் – கடற்கரையாண்டி

காலை முதலாகவே வானத்தை மேகங்கள் மூடி மந்தாரமாக இருந்தபடியால் மணல் சுடவில்லை. உச்சிக்கு நேரே சூரியன். மேகப் படலத்துக்குட்பட்டு சந்தேகத்தால் மறைக்கப்பட்ட ஞானத்தைப்போல் ஒளி குன்றியிருந்தான்… குருட்டு வெயில் கடல்மீது படுவதனால், அலைகளைப் பார்க்கும்போது கொஞ்சம் கண் கூசிற்று. சிறிது தொலையில் ஒரு வெளிநாட்டு வியாபாரக் கப்பல் …

View More மஹாகவி பாரதியாரின் கதைகள் – கடற்கரையாண்டி

காலவெள்ளம் அலைமோதும் கந்தன் கோயில்: திருச்செந்தூர்

கோயிலைக் கொள்ளையடித்த டச்சுக் காரர்கள், கப்பல்களில் ஏறித் தப்புவதற்கு முன் அதனை பீரங்கிகளால் தகர்த்து அழிக்க முயன்றனர், அது முடியவில்லை… மன்னர்கள், துறவிகள், மடங்கள் மட்டுமல்லாது, எல்லா சமூகத்து மக்களும் இந்தக் கோவிலுடன் தொடர்பு கொண்டு முருகனை வழிபட்டு வந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.

View More காலவெள்ளம் அலைமோதும் கந்தன் கோயில்: திருச்செந்தூர்

வேதநெறியும் தமிழ்சைவத்துறையும் – 3

சிலப்பதிகாரம் வேதநெறியை எவ்வளவு உயர்வாகப் பேசிற்றோ அதற்கு மாறான நிலையில் மணிமேகலை வேதநெறியையும் வேதநெறியில் நிற்போரையும் பழிப்பதில் தலைநிற்கின்றது. மணிமேகலை பவுத்தமதப் பிரச்சார இலக்கியமாக இருப்பதே அதற்குக் காரணம்.

View More வேதநெறியும் தமிழ்சைவத்துறையும் – 3

வேதநெறியும் தமிழ்சைவத்துறையும் – 2

திருக்குறள் வேதநெறியினைத் தழுவிக்கொண்டு தமிழ்மரபின் தனித்தன்மையையும் நிலைநிறுத்தும் அறநூலாகும். பிறப்பால் மட்டுமே சாதியுயர்வைப் பேசுவாரை வேதமும் இழித்துரைக்கின்றது… ‘ஜன்ம பிராமணனை விடக் கன்ம பிராமணனுக்கே ஏற்றம்’ என்பதைத் திருவள்ளுவரும் எடுத்துக் காட்டியுள்ளார்.

View More வேதநெறியும் தமிழ்சைவத்துறையும் – 2

வேதநெறியும் தமிழ்சைவத்துறையும் – 1

கொற்றவை, பழையோள் ஆகிய தொல்குடிப் பெண் தெய்வங்கள், வைதிகக் கடவுளாகிய ‘மால்வரை மலைமகளு’டன் இணையப் பெறுகின்றனர். அந்த இணைப்பைச் செய்பவன் முருகன். இது தொல்பெரும் தமிழ் மரபும் வேத நெறியும் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னரேயே தம்முட் கலந்து இணங்கியமைக்குத் தக்க சான்றாகும்.

View More வேதநெறியும் தமிழ்சைவத்துறையும் – 1

உலகத் தமிழ்ச் சமயக் கோட்பாடுகள் கருத்தரங்கம்

மூவர் முதலிகள் முற்றம் சார்பில் ஜனவரி-24 (சனிக்கிழமை) அன்று உலகத் தமிழ்ச் சமயக் கோட்பாடுகள் கருத்தரங்கம் கும்பகோணம் நகரில் நடைபெறுகிறது. சைவ ஆதீனகர்த்தர்கள், வைணவ மடாதிபதிகள் உள்ளிட்ட ஆன்மீகப் பெரியோர்கள், தமிழறிஞர்கள் மற்றும் ஜெயமோகன், அரவிந்தன் நீலகண்டன் முதலிய பிரபல எழுத்தாளர்கள் கலந்து கொள்கின்றனர்…

View More உலகத் தமிழ்ச் சமயக் கோட்பாடுகள் கருத்தரங்கம்

ஏற்றுமதி/இறக்குமதி அல்லது அடிமைக்கிறிஸ்தவம்

போரை உருவாக்கி இறையாண்மை குறையும் போது திருச்சபையின் தூதர்கள் நற்சேதியுடன் போய் கதிகலங்கிப்போயிருக்கும் மக்களை மதம் மாற்றம் செய்வது ஒரு சர்வதேச தொழில்நுட்பமாக மாறிப்போயுள்ளது… வாத்திகனின் பணபலம், செல்வாக்கு இங்கு எல்லோரையும் விலைக்கு வாங்கிவிட்டது என்று தெரிகிறது…இதனுடைய ஒரு நீட்சியாகவேதான் தமிழ்ப்பாதிரிகளின் இச்செயல்களை நான் காண்கிறேன். உண்மையான தமிழ்ப்பிடிப்புள்ள ஒரு தமிழன், தமிழின் வேர்களை சொந்த மண்ணில் தேடுவானே தவிர வேற்று மண்ணில் தேடமாட்டான்.. ‘எந்நன்றி கொன்றார்க்கும் உய்யுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்றமகர்க்கு’ என்று எழுதிய வள்ளுவனை, செய்நன்றி மறந்த தோமையரின் சீடராக்க தமிழ் பற்றுள்ள ஒரு பாதிரியால் எப்படி முடிந்தது?

View More ஏற்றுமதி/இறக்குமதி அல்லது அடிமைக்கிறிஸ்தவம்

ஸ்ரீகுமரகுருபரர் சரித்திரச் சுருக்கம்: உ.வே.சா

[உ.வே.சாவின் கட்டுரை, படங்களுடன்] “குமரகுருபர முனிவரர் காசியில் தங்கியிருந்த மடத்திற்குக் குமாரசாமி மடமென்று பெயர். அங்கே இவர் சிவயோகம் செய்து கொண்டு வாழ்ந்துவந்தார். இவர் தாம் வாழ்ந்திருந்த மடாலயத்தில் புராணசாலை ஒன்று ஏற்படுத்தி அங்கே ஹிந்துஸ்தானி பாஷையிலும் தமிழிலும் புராணப் பிரசங்கமும் செய்ததுண்டு. சிறந்த இராம பக்தராகிய துளஸீதாசர் அந்தப் பிரசங்கங்களைக் கேட்டு உவந்தனரென்றும், கம்பராமாயணத்திலுள்ள கருத்துக்களைத் தாம் ஹிந்துஸ்தானியில் இயற்றிய இராமாயணத்தில் அமைத்துக் கொண்டன ரென்றும் கூறுவர்.”

View More ஸ்ரீகுமரகுருபரர் சரித்திரச் சுருக்கம்: உ.வே.சா