மகாபாரத ஆக்கங்கள் – ஒரு பட்டியல்

உண்மையை ஒத்துக் கொள்வதென்றால் மகாபாரதம் எனக்கு உலகத்தின் தலை சிறந்த இலக்கியம். தர்க்கபூர்வமான, அறிவுபூர்வமான அணுகுமுறைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது அந்த உணர்வு. ஆழ்ந்த பித்து என்றே சொல்லலாம்…மகாபாரதத்தை மூலமாக வைத்து எழுதப்பட்ட புனைவுகள், எடுக்கப்பட்ட திரைப்படங்கள் மீது எனக்கு எப்போதும் ஒரு soft corner உண்டு. அப்படிப்பட்ட எல்லா இலக்கிய/கலை முயற்சிகளையும் ஒரு பட்டியல் போட வேண்டும் என்று எனக்கு ஒரு நீண்ட நாள் ஆசையும் உண்டு. இவை சுருக்கங்களாக இருக்கலாம், இந்திய மொழிகளில் பாரதத்தைக் கொண்டு போகச் செய்த முயற்சிகளாக இருக்கலாம், மறுவாசிப்புகளாக இருக்கலாம், எதுவாக இருந்தாலும் அவற்றை ஒரு பட்டியல் போடும் முயற்சியே இந்தக் கட்டுரை…

View More மகாபாரத ஆக்கங்கள் – ஒரு பட்டியல்

வியாசன் எனும் வானுயர் இமயம்

வரலாற்றுக் கண்ணோட்டத்தில், இந்த நான்கு “வியாசர்களும்” ஒருவராக இருப்பது என்பது முற்றிலுமாக சாத்தியமில்லாதது. கிருஷ்ண துவைபாயன வியாசர் என்பவர் முழுமையான ஒரு தனித்த வரலாற்று ஆளுமை என்பது மகாபாரதத்தை ஆழ்ந்து வாசிக்கும் எவருக்கும் கிடைக்கும் சித்திரம். வேதகால கருத்தாக்கங்களின் மிக இயல்பான நீட்சியாகவே மகாபாரதம் உள்ளது… “கைகளைத் தூக்கிக் கொண்டு கதறுகிறேன். ஆனால் கேட்பார் ஒருவருமில்லை. அறத்திலிருந்து தான் பொருளும், இன்பமும் எல்லாம். ஆனால் அதை ஏன் மனிதர் பின்பற்றுவதில்லை? காமத்தாலோ பயத்தாலோ பொறாமையாலோ உயிர் போகும் என்ற நிலையிலோ கூட தர்மத்தை விட்டு விடாதீர்! தர்மம் என்றும் உள்ளது. இன்ப துன்பங்கள் அநித்தியமானவை…

View More வியாசன் எனும் வானுயர் இமயம்

திரௌபதியின் கேள்வி

அநியாயம் எனும் நெருப்பால் சுடப் பட்டு, துயரம் இழைக்கப் பட்டு, நீதிமான்களின் சபையில் வந்து தங்கள் உரிமைகளைக் கேட்டு முறையிடுகிறார்கள் பாதிக்கப் பட்டவர்கள். அந்த முறையீட்டுக்கு பதிலளிக்காமல் இருப்பதோ, பொய்யாக பதிலுரைப்பதோ இரண்டுமே தரும துரோகம்…. எது தர்மம், எது அதர்மம் என்று முடிவு செய்யும் அதிகாரம் யாருக்கு உள்ளது? அரசாட்சியின் மூலமாக, சாஸ்திரங்களின் மூலமாக அந்த அதிகாரம் வழங்கப் பட்டவர்கள் முறை தவறும் போது, அநீதி இழைக்கும் போது, ஒரு சாமானியன் என்ன செய்வது?…. உலகமயமாக்கல் என்னும் பகடையாட்டத்தில் நாமே தேர்ந்தெடுத்த நமது அரசாங்கம், நம் ஒவ்வொருவரையும் பணயப் பொருளாக வைக்கும் போதெல்லாம் அந்தக் கேள்வி நம் முன் வந்து நிற்கிறது…

View More திரௌபதியின் கேள்வி

நமக்கு ஏன் இல்லை பகுத்தறிவு?

மேம்போக்காக பார்க்க இந்திய அமெரிக்க சட்டங்களின் அறிமுக பிரகடனங்கள் (preamble) ஒன்று போல இருப்பது போல தோன்றும் . ஆனால் அதில் நுண்ணிய வேறுபாடு இருக்கிறது என்கிறார் சட்ட வல்லுநர், ஆர்.ஜி.சதுர்வேதி . அமெரிக்க பிரகடனம் ‘establish justice’ என சொல்கிறது. ஆனால் பாரதமோ ‘secure justice’ என சொல்கிறது. அமெரிக்க பிரகடனத்தில் நீதி என்பது சட்டம் எதை சொல்கிறதோ அதுதான். சட்டத்திலிருந்து நீதி முகிழ்கிறது – அது ஒரு emergent property. ஆனால் பாரதத்தில் அவ்வாறு அல்ல. நீதியை நோக்கி சட்டம் தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும். இங்கு அது ஒரு primordial reality. சட்டம் அந்த நீதியை மக்கள் அனைவருக்கும் அளிக்கும் ஒரு கருவி…

View More நமக்கு ஏன் இல்லை பகுத்தறிவு?

இன்று போய் நாளை வா – எதற்கு?

“என்னைப் பொறுத்த அளவில், நான் விரும்புவது சிறை வைத்துள்ள சீதையை என்னிடம் ஒப்படைத்து, உன் கட்டுப்பாட்டில் உள்ள தேவர்களை அவர்களுக்கு உரிய மரியாதையை அளித்து அவர்களை முறையில் வைக்க வேண்டிய தகுதியில் வைத்து, உன் தம்பி வீடணனை இலங்கைக்கு அரசனாக்கி நீ அவனுக்குச் சேவகம் செய்து வாழவேண்டும். இவ்விதம் செய்வதால் நீ உயிர் பிழைக்க வாய்ப்புண்டு. ”அல்லையாம் எனின்” போரை மேற்கொள்” –என்பது தான் இராமன் இக்கட்டத்தில் இராவணனுக்குக் கூறும் அறிவுரை . இராமன் கூற்றாகக் கம்பன் வடித்துள்ள பாடல்களின் சாரம் இது தான்.

இராவணனிடம், அங்கதனைத் தூது அனுப்பிய போது என்ன சொல்லி அனுப்பினானோ ,அதே செய்தியைத்தான் இப்போதும் இராமன் சொல்கிறான்.அங்கதனிடம் சொல்லி அனுப்பியது இதுதான்.

”என்அவற்குஉரைப்பது?என்ன, ”ஏந்திழையாளைவிட்டுத்தன்னுயிர்பெறுதல்நன்றோஅன்றுஎனின்தலைகள்பத்தும்சின்னபின்னங்கள்செய்ய,செருக்களம்சேர்தல்நன்றோ? சொன்னவைஇரண்டின்ஒன்றேதுணிக! “எனச்சொல்லிடுஎன்றான்.

அந்த சந்தர்ப்பத்தில் சொன்ன “ அன்று எனின்” என்பது தான் இப்பொழுது இராவணனிடம் நேர்க்கு நேர் சொன்ன ”அல்லையாம் எனின்” என்பது.

View More இன்று போய் நாளை வா – எதற்கு?

இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 28

நிம்மதியாக வாழவேண்டும் என்றால் கையில் சுற்றிய பாம்பைத் தூக்கி எறியவேண்டும். அதுபோல தர்மத்தின் பாதையில் செல்லாது, பாவம் சேர்க்கும் கொடிய வழிகளையே விரும்பும் தலைவனை அப்புறப்படுத்தவேண்டும்…. மனைவியோ, உறவினர் வேறெவரோ இறந்தால் அவர்களுக்குப் பதில் வேறு எவரையாவது, ஏதோ ஒரு இடத்திலாவது கண்டுபிடிக்க முடியும். ஆனால் சகோதரன் இறந்துவிட்டால் அவனுக்குப் பதிலாக வேறெவரும் இருக்க முடியாது… தன்னைச் சார்ந்தவர்களைத் துறந்துவிட்டு, அவர்களை எதிரியிடம் காட்டிக்கொடுப்பதால் தனக்கு நன்மை உண்டு என்று ஒருவன் நினைப்பது தவறானது. எதிரிகள் முதலில் மற்றவர்களை அழித்துவிட்டு, கடைசியில் யார் காட்டிக் கொடுத்தானோ அவனையும் ஒழித்துவிடுவார்கள்….

View More இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 28

இராமாயண அறம் – ஜடாயுவின் உரை

தர்மம் என்றால் என்ன என்ற அறிமுகத்துடன் ஜடாயு தனது உரையைத் தொடங்கினார். பிறகு இராமாயணம், மகாபாரதம் ஆகிய இரு பெரும் இதிகாசங்களின் அறம் குறித்த பார்வைகள் எப்படி இணைந்தும் வேறுபட்டும் உள்ளன என்பது பற்றிக் குறிப்பிட்டார். வாலி வதம், குல தர்மம் – ஸ்வதர்மம் – உலக தர்மம், சீதையின் அறம் ஆகிய புள்ளிகளைத் தொட்டுச் சென்றது அவரது உரை. சுலோகங்களையும், கம்பராமாயணப் பாடல்களையும் இடையிடையே மேற்கோள் இட்டுப் பேசினார். உரையின் வீடியோ பதிவு கீழே..

View More இராமாயண அறம் – ஜடாயுவின் உரை

இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 7

பெண்கள் என்று இங்கு சொல்லப் பட்டிருந்தாலும் இது ஆண்களுக்கும் பொருந்தும். ஆணோ, பெண்ணோ எவருக்குமே கஷ்டமான, துக்கமான வாழ்க்கை என்றால் அது ஒத்துக்கொள்வதில்லை. தனக்கு அறிமுகமாயிருந்த வசதிகள் எதுவும் தன் வசமின்றி கைவிட்டுப் போவதை எவருமே விரும்புவதில்லை. அப்படி ஒரு நிலை உருவானால், கூட உள்ள துணையைக் கைவிடவும் பெரும்பாலோர் தயங்குவதில்லை. பணம் பத்தையும் செய்வதால், எவருக்கும் ஏழ்மை நிலை பிடிப்பதில்லை. தானே விரும்பி இராமருடன் காட்டுக்குச் செல்வதால், சீதைக்கு இந்த அறிவுரை தேவையே இல்லை. ஆனாலும் பொதுவாக மக்களுக்குச் சரியான சந்தர்ப்பத்தில் இது போன்ற செய்திகளைக் கொண்டுபோய் சேர்க்கவேண்டும் என்பதால், வால்மீகி இடத்திற்குப் பொருத்தமான இதை எழுதியிருக்கிறார்.

View More இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 7

இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 6

புருஷர்களில் உத்தமரே, ஒரு மனைவி தன் கணவனின் விதிப்படி தானும் நடக்கவேண்டும். ஆதலால், தாங்கள் காட்டுக்குப் போகவேண்டும் என்ற உத்திரவு இருந்தால் அது எனக்கும் இடப்பட்ட உத்திரவே… நல்ல யானைகளை எல்லாம் தானமாகக் கொடுத்துவிட்டவனுக்கு, யானையைத் தூணில் கட்ட உதவும் அதன் இடுப்புக் கயிறை மட்டும் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற விருப்பம் எப்படி இருக்கும்?… தர்மத்தின் பாதையிலிருந்து சிறிதும் தவறாது சென்று, மேலும் ஒரு தவறும் செய்யாமல் இருக்கும் ஒருவனை தண்டிப்பது மிகவும் அதர்மமானது…

View More இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 6

இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 5

தேவி, செல்வத்திற்காக இந்த உலகில் வாழவேண்டும் என்ற விருப்பம் எனக்குக் கிடையாது. தர்ம சிந்தனை ஒன்றே குறிக்கோளாக வாழும் தவச் சீலர்களுக்கு ஒப்பானவன் நான், இதைத் தெரிந்து கொள்…. கோழைகளும், பயத்தால் முடியாதவர்களுமே விதி என்று சொல்லி செயல்களைத் தவிர்ப்பார்கள். தனது உரிமையை நிலை நாட்டக்கூடிய வலிமை கொண்டோர் விதியை எதிர்த்துப் போராடுவார்கள்.. வேதங்களோ, சாஸ்திரங்களோ ஆணையும் பெண்ணையும் பிரித்துப் பார்ப்பதே இல்லை. அந்தந்தச் சூழ்நிலையைத்தான் கவனிக்கவேண்டும். மனைவிக்கு இந்த மாதிரி துயரம் வந்திருக்குமானால் இதேபோல் சேவை செய்யவேண்டும் என்று கணவனது கடமையாகச் சொல்லப்பட்டிருக்கும்..

View More இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 5