Posts Tagged ‘ தலித் ஆன்மிகம் ’

அனைத்து சாதி அர்ச்சகர்கள்: கேரளம், பீகார், குஜராத்…. தமிழ்நாடு

பாஜகவும், ஐக்கிய ஜனதாதளமும் ஆண்ட பீகார் மாநிலத்தில் 2007ஆம் ஆண்டே பெருமை வாய்ந்த பல நூற்றாண்டுகள் பழமை மிக்க கோயில்களில் தாழ்த்தப்பட்ட பட்டியல் சாதியினர் பூசகர்களாக வந்து விட்டனர். இன்று இடதுசாரிகள் ஆளும் கேரளாவில் புதிதாக அதிசயம் ஒன்றும் நடக்கவில்லை. வட இந்தியாவின் சாதிய பிரிவினைமிக்க மாநிலங்களில் எல்லாம் தலித்துகள் முதல்வர்களாகவும், அமைச்சர்களாகவும், பூசகர்களாகவும் ஆகிவிட்டனர். தமிழ்நாட்டில் தான் கோயிலில் திருநீறு பெறவும் அவர்கள் கொடுத்தால் மற்றவர்கள் பெற்றுக்கொள்ளவும் உரிமை கேட்டு போராடுகிறார்கள்.... என் எண்ணம் என்னவென்றால் சோழ மண்டலத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை மிக்க பல கோயில்கள் ஒருகால பூஜைக்கும் வழி இல்லாமல் இருக்கிறது.... [மேலும்..»]

பிள்ளை கட்டிய பிள்ளையார் கோவில்

உலக சுற்றுப்பயணம் முடித்த பிறகு நாகையில் இந்து மனிதாபிமான சங்கத்தை ஏற்படுத்தினார். ஊர்மக்கள் வேண்டுக்கோளுக்கிணங்க நாகை இந்து போதனா பள்ளியை கட்டிக் கொடுத்தார். சைவ சித்தாந்தியான இவரின் இஷ்ட தெய்வம் விநாயகப் பெருமான். தம் வீட்டிலேயே மூன்றாம் மாடியை விநாயகர் ஆலயமாக்கி அனுதினம் பூஜைகள் செய்து வந்தார். பர்மா வரும் ஏழை எளிய இந்தியர்கள் தங்க பார்க் தெருவில் ‘ரெஸ்ட் ஹவுஸ்’ என்கிற சத்திரத்தை நிறுவினார். இங்கு பர்மாவுக்கு வேலை தேடி வரும் ஏழை இந்தியர் எவரும் சாதி மத மொழி பாகுபாடின்றி இலவசமாக தங்கிக் கொள்ளலாம். 1912 இல் இவர் ஒரு கப்பலை வாங்கி வியாபாரத்தில்... [மேலும்..»]

விழுப்புரம் சேஷசமுத்திரத்தில் சாதிய வன்கொடுமை சம்பவம்

கோவில் முன்பு தேரோட்டத்துக்காக அலங்கரித்து நிறுத்தப்பட்டிருந்த தேர் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் தேர் தீப்பற்றி எரிந்து முற்றிலும் சேதமானது. காலனி பகுதியில் உள்ள வீடுகள் மீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் 8 வீடுகள் தீப்பற்றி எரிந்தன... இந்த வன்கொடுமை சம்பவம் தமிழ் இந்துக்கள் அனைவருக்கும் தலைக்குனிவை ஏற்படுத்தும் ஒன்று. இது உருவாக்கியுள்ள காயங்களுக்கும் ரணங்களுக்கும் உடனடியாக நிவாரணம் அளிக்கப் பட வேண்டும். தற்போதைய சூழலில், அதற்கான பொறுப்பும் தார்மீக உரிமையும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத் தலைவர் தவத்திரு பங்காரு அடிகளாரைச் சேர்ந்தது... [மேலும்..»]

பாஜகவின் பாபாசாஹேப் அம்பேத்கர் பாசம் : உணர்வா? அரசியலா?

பாரதப் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையம் அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் அம்பேத்கர் இல்லையென்றால் நான் பிரதமராக ஆகியிருக்க முடியாது என்றும் டாக்டர் அம்பேத்கர் சாதித்த சாதனைகளையும் உணர்ச்சிப்பூர்வமாக கூறினார். இதை வைத்து ஒரு தொலைக்காட்சி விவாதத்தை வைத்தது. நேற்றுதான் அதை நான் காண நேர்ந்தது. அதில் பேசிய மூவர் (விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னிஅரசு, சுப.வீரபாண்டியன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர்) பாஜகவுக்கு எதிராகவே பொய்யையே பேசினர். பாஜக பீகார் தேர்தலை முன்னிட்டே பிரதமர் இப்படி பேசியிருக்கிறார். இந்துமதத்தை எதிர்த்த அம்பேத்கரை பாஜக எப்போதுமே ஏற்றுக்கொண்டது இல்லை, மராத்தா பல்கலைக்கழகத்திற்கு... [மேலும்..»]

புரட்சியாளர் அம்பேத்கரின் சமஸ்கிருத ஆதரவு

சமஸ்கிருதம் என்றாலே அது தீட்டுப்பட்ட மொழிபோலவே நாம் எண்ணிக் கொண்டு இருக்கிறோம். அது ஆரிய மொழி, பிராமணர்களின் மொழி, அது தமிழை அழிக்கும் மொழி என்றெல்லாம்கூட கருத்தை அள்ளிவீசிக் கொண்டிருக்கிறோம். தலித்துகளில்கூட அப்படியான ஒரு எண்ணத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் மனங்களில் இந்த எண்ணங்களைத்தான் பல நூறாண்டுகளாக வெள்ளைக்காரர்கள் செய்தார்கள், இப்போது திராவிட, கம்யூனிச, கிறிஸ்தவ, இஸ்லாமிய தேசவிரோத சக்திகள் இந்த எண்ணங்களைத்தான் தலித்துகளின் – மக்களின் மனங்களில் தொடர்ந்து விதைத்து வருகிறார்கள். ஆனால் உண்மையில் சமஸ்கிருதம் இந்த நாட்டின் மொழி. இம்மக்களின் மொழி. இன்று தலித்துகளின் பட்டியலில் உள்ள வள்ளுவர்களை எடுத்துக் கொள்வோம். அவர்கள் வானியல்,... [மேலும்..»]

சென்னையில் 7வது இந்து ஆன்மீக, சேவைக் கண்காட்சி: 3-9 பிப்ரவரி 2015

சென்னையில் 7வது ஹிந்து, ஆன்மீக சேவைக் கண்காட்சி நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. இடம்: ஏ.எம்.ஜெயின் கல்லூரி வளாகம், மீனம்பாக்கம், சென்னை.பிப்ரவரி 3ம் நாள் முதல் 9ம் நாள் வரை, தினந்தோறும் காலை 9.30 மணி முதல் இரவு 9 மணி வரை. நூற்றுக் கணக்கான ஆன்மீக, சமூகசேவை அமைப்புகள் பங்கேற்கின்றனர். தமிழ்ஹிந்து இணையதளத்தின் அரங்கும் உண்டு. அனைவரும் வருக ! [மேலும்..»]

தேவையா இந்த வடமொழி வாரம்?

அண்மையில் 'புதிய தலைமுறை’ இதழில் ஒரு கார்ட்டூன் வெளிவந்திருக்கிறது. பசியுடன் அமர்ந்திருக்கிறான் ஒரு இந்தியன். எதிரில் காலி வாழை இலை. நரேந்திர மோதியோ ஒரு பழைய புத்தகத்தை அவனிடம் நீட்டுகிறார். அதில் சமஸ்கிருதம் என எழுதியிருக்கிறது. ... பாரதீய கலாச்சாரப் பண்பாட்டிற்கு இருப்பிடமாக உள்ள சம்ஸ்கிருத மொழியை இந்நாட்டில் பிறந்த ஒவ்வொருவரும் கற்பது அவசியம் [மேலும்..»]