அனைத்து சாதி அர்ச்சகர்கள்: கேரளம், பீகார், குஜராத்…. தமிழ்நாடு

பாஜகவும், ஐக்கிய ஜனதாதளமும் ஆண்ட பீகார் மாநிலத்தில் 2007ஆம் ஆண்டே பெருமை வாய்ந்த பல நூற்றாண்டுகள் பழமை மிக்க கோயில்களில் தாழ்த்தப்பட்ட பட்டியல் சாதியினர் பூசகர்களாக வந்து விட்டனர். இன்று இடதுசாரிகள் ஆளும் கேரளாவில் புதிதாக அதிசயம் ஒன்றும் நடக்கவில்லை. வட இந்தியாவின் சாதிய பிரிவினைமிக்க மாநிலங்களில் எல்லாம் தலித்துகள் முதல்வர்களாகவும், அமைச்சர்களாகவும், பூசகர்களாகவும் ஆகிவிட்டனர். தமிழ்நாட்டில் தான் கோயிலில் திருநீறு பெறவும் அவர்கள் கொடுத்தால் மற்றவர்கள் பெற்றுக்கொள்ளவும் உரிமை கேட்டு போராடுகிறார்கள்…. என் எண்ணம் என்னவென்றால் சோழ மண்டலத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை மிக்க பல கோயில்கள் ஒருகால பூஜைக்கும் வழி இல்லாமல் இருக்கிறது. அந்த கோயில்களுக்கு சென்று பூஜை செய்ய விருப்பமிருந்தால் அதற்கான சைவ வைணவ பூஜை முறைகளில் முறையான பயிற்சியை பெற்று அனைத்து சாதியினரும் பூசை செய்யலாம்….

View More அனைத்து சாதி அர்ச்சகர்கள்: கேரளம், பீகார், குஜராத்…. தமிழ்நாடு

இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள்

நேற்று (7-7-2014) இந்து சமுதாய சமத்துவப் போராளியும் தமிழக தலித் இயக்க முன்னோடியுமான…

View More இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள்

அம்பேத்கரின் “சாதி ஒழிப்பு”: ஓர் மீளாய்வு – 1

75 வருடங்களுக்கு முன்பு பாபாசாகிப் அம்பேத்கர் எழுதிய “சாதி ஒழிப்பு” (Annihilation of Caste) எனும் புத்தகத்தை இப்போது மீளாய்வு செய்ய வேண்டியது அவசியமாகிறது. முதலில் அம்பேத்கர் என்ன எழுதியிருக்கிறார் என பார்த்துவிட்டு அதற்கான விமர்சனத்தை பார்ப்போம்… இந்துக்கள் ஒரு சமூகமாக அல்லது தேசியமாக பரிணமிக்க சாதியே தடையாக இருக்கிறது. இந்துக்களுக்கு தாங்கள் ஒருவருக்கொருவர் உறவு கொண்டவர்கள் என்ற பிரக்ஞையே இல்லை. இந்துக்களுக்கு தங்களுடைய சாதியோடு மட்டும் உறவு இருக்கிறது, மற்றைய இந்துக்களுடன் கிடையாது…. சாதி என்ற அமைப்பு இந்துக்களிடையே பரஸ்பர நம்பிக்கை, உதவி, ஒருங்கிணைப்பை உண்டாக்கித் தருவது இல்லை. ஒரு சாதி இன்னோர் சாதிக்கு எதிராக இருக்கிறது. அதற்கு அடிப்படையாக நூல்கள் எழுகின்றன… சதுர்வர்ணம் சூத்திரர்களுக்கு மிகவும் கொடுமையான அமைப்பாக இருக்கும். சூத்திரர்கள் சதுர்வர்ண முறையின் கீழ் எல்லாவற்றிக்கும் மற்றவர்களை நம்பியே இருக்கவேண்டிய அவசியம் இருக்கும். மற்றவர்கள் சூத்திரர்களை கொடுமைப்படுத்த நினைத்தால் அதை யாரும் கேட்கமுடியாமல் போகும்…

View More அம்பேத்கரின் “சாதி ஒழிப்பு”: ஓர் மீளாய்வு – 1

குஜராத்தின் இந்துத்துவ மகாராஜா

உதாரணமாக மிகக் கொடுமையான சாதிய சூழ்நிலை தாண்டவமாடிய திருவிதாங்கூரை எடுத்து கொள்வோம். எல்லாவிதமான சாதிய வக்கிரங்களும் நிலவிய பிரதேசம் அது. சுரண்டல், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான சாதிய வன்கொடுமைகள் எல்லாம் நிலவியது மிக தெளிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் …

View More குஜராத்தின் இந்துத்துவ மகாராஜா