Posts Tagged ‘ தாய்மொழிக் கல்வி ’

திருவள்ளுவர் ஜெயந்தி [நாடகம்]

சிறுவன் அவர் முகத்தையே வைத்த கண் வாங்காமல் பார்க்கிறான். வகுப்பறையில் இருக்கும் அனைவருமே வள்ளுவரைக் கண்டு அதிசயித்து நிற்கிறார்கள். மடமடவென குழந்தைகளும் ஐயனை வணங்கி ஆசி பெறுகின்றன. ஒன்றிரண்டு பெரிய வகுப்பு மாணவர்கள் மட்டும் கைகளைக் கட்டியபடி தள்ளி நின்று பார்க்கிறார்கள்... இந்த முரண் என்பவை வாழ்க்கையின், உயிர்களின், உலகின் ஆதார அம்சம். மானுக்குப் புலி முரண்... பூவுக்கு முள் முரண்...நீருக்கு நெருப்பு முரண்... இரவுக்குப் பகல் முரண்... சூரியனுக்கு நிலவு முரண்... உலகம் பெரும் ஒத்திசைவால் ஆனது... அதுபோலவே முரண்களாலும் ஆனது... அறங்கள் முரண்படவில்லை... இரவையும் பகலையும் போல் இணை பாதையில் செல்கின்றன அருகருகே... [மேலும்..»]

போலி கோஷத்தின் பொல்லாத பின்னணி

போலி கோஷத்தின் பொல்லாத பின்னணி

  ‘ஆசை இருக்கிறது தாசில் செய்ய அதிர்ஷ்டம் இருக்கிறது கழுதை மேய்க்க’ என்ற பழமொழியைக் கேட்டிருப்பீர்கள். இது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, தமிழகத்தை ஆளும் கனவுடன் வலம் வந்துகொண்டிருக்கும் பாமகவுக்கு நிச்சயமாகப் பொருந்தும். பாமகவினர் அண்மைக்காலமாக செய்துவரும் அலப்பறைகளைக் கண்ணுறும் எவரும், சற்றே கதிகலங்கிப் போவார்கள். உண்மையிலேயே அன்புமணிக்கு முதல்வர் கனவு வந்துவிட்டதா? அல்லது, தந்தையின் இயக்கத்தில் முதல்வன் வேடத்தில் அன்புமணி நடிக்கும் ஏதாவது புதிய திரைப்படம் தயாரிக்கும் முஸ்தீபா? “அன்புமணியை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி” என்று எப்படித்தான் நெஞ்சு நிமிர்த்தி அறைகூவல் விடுக்கிறார் ராமதாஸ்? காண்க: அன்புமணியே முதல்வர் வேட்பாளர் பா.ஜ.,வுக்கு ராமதாஸ்... [மேலும்..»]