தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 1

இது பற்றியெல்லாம் சிந்தித்தவர்கள், சுய விமரிசனம் செய்தவர்கள், அவர்கள் செயல்படவும் செய்தார்கள் என்பதைத் தான், சிவனோ பெருமாளோ அவர்களுக்காக மனமிரங்கி அவர்களைக் காப்பாற்றியதாக இலக்கியங்களும் கலைகளும் சொல்கின்றன. அதைத் தான் அவர்கள் வரலாற்றிலும் இலக்கியத்திலும் எழுதி அவற்றிற்கு ஒரு அழியா வாழ்வு கொடுத்திருக்கின்றனர்… இவர்கள் பாதுகாத்தும் சிறப்பித்தும் வாழ்வு தந்ததால் தானே அவை இன்றைய பிரசாரகர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பிராமணர்களைப் பழிக்க ஏதுவாயிருக்கிறது!

View More தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 1

நீதிக்கட்சியின் மறுபக்கம் – 03

மக்களைச் சுரண்டிக் கொள்ளையடித்த கொள்ளைக் கும்பல்களின் மொத்தக் கூட்டமைப்புதான் நீதிக்கட்சி. அன்று கொத்தடிமைகளாக இருந்தவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் தான். அவர்களை முன்னேற விடாமல் அடிமைப்படுத்திச் சுரண்டியே வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தவர்கள் நீதிக் கட்சியினர் தான். இவர்களா தாழ்த்தப் பட்டவர்களின் முன்னேற்றத்திற்கு என்று நீதிக்கட்சியை ஆரம்பித்தனர் ?

View More நீதிக்கட்சியின் மறுபக்கம் – 03

நீதிக்கட்சியின் மறுபக்கம் – 01

உண்மையிலேயே நீதிக்கட்சி தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பாடுபடத்தான் தோன்றியதா?தாழ்த்தப்பட்டோரிடையே அரசியல் அனுபவம் உள்ளவர்கள் இல்லாது இருந்தார்களா? நீதிக்கட்சி தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்தும் பணியைத் தொடர்ந்து செய்து வந்ததா? நீதிக்கட்சி தாழ்த்தப்பட்டவர்களுக்கு செய்த சாதனைதான் என்ன?

View More நீதிக்கட்சியின் மறுபக்கம் – 01

பண்டைக்குலமும் தொண்டக்குலமும்

நந்தனாரைத் தங்கள் சமயத் தலைவராக, நாயனாராக ஏற்று வழிபடும் சைவர்கள் எப்படி நோக்குகின்றார்கள்? சூழ்நிலையை எதிர்த்து வாழ்ந்தால், அந்த வாழ்க்கை போராட்டமாகத்தான் ஆகும். அத்தகைய போராட்ட வாழ்வை விரும்பி நந்தனார் மேற்கொண்டார்… சைவ மரபில் நெருப்பு சிவனுக்கு ஒரு குறியீடு. நெருப்பு சிவனுக்கு வடிவம். வேள்வியில் மூட்டும் தீக்கு சிவாக்கினி என்று பெயர்… யாழ்ப்பாணர் சிவனடியவர்களாகிய அந்தணர் கூட்டத்திலேயே இருந்தமையால் அவருக்கு சாதி குலம் பற்றிய சிந்தனைக்கு வாய்ப்பிருக்கவில்லை போலும்!

View More பண்டைக்குலமும் தொண்டக்குலமும்

சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 4

ஒருநாள் ஐயன் காளி விளையாடிக் கொண்டிருந்த பந்து பக்கத்தில் இருந்த ஒரு நாயர் வீட்டில் விழுந்த போது அந்த நாயர் வந்து ஐயன் காளியை எச்சரித்தான். அன்று முதல் விளையாடுவதை விட்டுவிட்ட ஐயன் காளி ஆழமான மௌன சிந்தனையில் மூழ்கினார்… நினைவுகூர்ந்த ஐயன் காளி, ‘ஒரு புலையர் பெண் செய்த வேலையை, அட ஆறு நாயர் ஆண்கள் சேர்ந்து செய்ய முடியவில்லையே!’ என்றார்.

View More சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 4

பெரியாரின் மறுபக்கம் – பாகம் 15: தாழ்த்தப்பட்டோருக்குப் பாடுபட்டவரா ஈ.வே.ராமசாமி நாயக்கர்?

”தீண்டாமை விலக்கு என்பதும் கோவில் பிரவேசம் என்பதும் சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதுதானா? பறையன் கீழ்சாதி என்பது மாற்றப்படவில்லையானால் அதற்காக சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதா? இந்த அனுமதியானது இதுவரை நடுசாதியாக இருந்த சூத்திரர் என்பவர்கள் இப்போது கீழ்சாதியாகவே ஆக்கப்பட்டுவிட்டார்கள். ஆனதால் இதை நாம் அனுமதிக்கக்கூடாது” என்று ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார். (நூல்: வைக்கம்போராட்ட வரலாறு – வீரமணி)

“பிராமண கபே எழுத்துகளை அழிப்பதில் இருந்த நியாயமான முனைப்பு தலித்துகளுக்கு பிராமணரல்லாதார்களால் ஏற்பட்ட கொடுமைகளான பொது இடப் பயன் மறுப்பு, தனிக்குவளை என்பனவற்றை எதிர்த்துப் பேசவோ போராடவோ இல்லை.” — (கோ. கேசவன், தலித் அரசியல். நன்றி; புதிய கோடங்கி, ஜூலை – 2004.)

View More பெரியாரின் மறுபக்கம் – பாகம் 15: தாழ்த்தப்பட்டோருக்குப் பாடுபட்டவரா ஈ.வே.ராமசாமி நாயக்கர்?