Posts Tagged ‘ தாழ்த்தப்பட்ட மக்கள் ’

பாஜக எஸ்சி அணி சமதர்ம எழுச்சி மாநாடு: மே 27, விழுப்புரம்

20.1% பட்டியலின மக்கள் வாழும் தமிழ்நாட்டில் 1% கூட அந்த மக்களின் வாக்குகளை பெற முடியாத பட்டியலின கட்சிகள்வரை பாஜகவிற்கு பட்டியலின மக்கள் வடமாநில பட்டியலின மக்கள்போல் ஆதவு அளித்துவிடக்கூடாது என்ற நோக்கத்துடன் பல்வேறு பொய் செய்திகளை பரப்பிவருகின்றனர். பட்டியலின மக்களின் விரோதி பாஜக என்று திட்டமிட்டு பிரசாரம் செய்து வருகின்றனர். இதையெல்லாம் முறியடிக்கும்விதமாக தமிழக பட்டியலின மக்கள் பாஜக பக்கம் இருக்கிறார்கள் என்பதை பறைசாற்றவும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்துகிற மாநாடாகவும் லட்சம்பேர் சங்கமிக்கிற மாநாடாகவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. என் சொந்தங்கள் அனைவரும் இந்த மாநாட்டில் பங்கு பெற அன்புடன் அழைக்கிறேன். உங்கள்... [மேலும்..»]

பசுவதைத்தடை – அருந்ததியர்: சிந்திக்கவேண்டிய ஒரு விஷயம்

மொகலாயர் காலம் தொட்டு பல நூற்றாண்டுகளாக , பல்வேறு சாதிய ஒடுக்குமுறைக்கு ஆளாகியும் ஹிந்துக்களாகவே நீடிப்பதுதான் மாபெரும் சாதனை. தங்கள் ஸ்வதர்மத்தின் மீதான அவர்களின் பற்று போற்றுதலுக்குரியது. அப்படிப்பட்ட சாதியினர்களில் மிக முக்கியமானவர்கள் அருந்ததியர்கள். வருடம் தோறும் கொடுமுடி சென்று தீர்த்தம் எடுத்து பழனி முருகனுக்கு அபிஷேகம் செய்கிறார்கள். எங்கள் ஊர் மாரியம்மன், மற்றும் பகவதியம்மன் திருவிழா நடைபெறும்போது தங்கள் தெருவில் இருந்து ஊர்வலமாக மாவிளக்கு எடுத்துவந்து வழிபடுவார்கள். அவர்கள் மாட்டுக்கறி சாப்பிடுவார்கள்.... [மேலும்..»]

புனா ஒப்பந்தத்தின்போது ஈவெரா அம்பேத்கருக்கு தந்தி அனுப்பினாரா?

புனா ஒப்பந்தத்தின்போது ஈவெரா அம்பேத்கருக்கு தந்தி அனுப்பினாரா?

 குடியரசு இதழில் இப்படி ஒரு செய்தி வந்தது. ‘அப்பொழுதே – புனா ஒப்பந்தக் காலகட்டத்தில் – தாழ்த்தப்பட்ட மக்கள் பிரதிநிதி அல்லது தலைவர்கள் என்பவர்களுக்கு எவ்வளவு புத்தி கூறியும், தோழர் ஈ.வே.ராமசாமி அவர்கள் ஐரோப்பாவில் இருந்து தோழர் அம்பேத்கருக்கு விஷயங்களை விளக்கி, ‘ஏமாந்து போகாதீர்கள்’ என்று அதாவது ஒரு காந்தியாரை விட 6 கோடி தாழ்த்தப்பட்ட மக்களின் உயிர் கேவலமானதல்ல என்றும்; 6 கோடி தாழ்த்தப்பட்ட மக்கள் உயிர் உமது கையில் சிக்கி இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள் என்றும் நீண்ட தந்தி கொடுத்திருந்தும்…’ –குடியரசு 9-5-1937   இந்த செய்தியை அடிப்படையாக வைத்து, சுப.வீரபாண்டியன் எழுதுகின்றார் :... [மேலும்..»]