Posts Tagged ‘ திராவிடக் கட்சிகள் ’

திராவிட அரசியலின் மூன்று பரிமாணங்கள்

பா.ரஞ்சித்திடம் பெரியார் முகமூடியை போடு இல்லையென்றால் நீ ஜாதி வெறியன் என்ற லாவணியை பாட ஆரம்பித்திருக்கிறார்கள். இது மெல்ல விவாதமாவது தமிழகத்தின் தலையாய தேவை. இன்றும் பெரியாரியம் யாருக்கு ஒரு முகமூடி என்பதை அரசியல் எதார்த்தம் சொல்லும். பிற்படுத்தப்பட்ட எழுச்சியும், அதிகாரமும் பட்டியல் ஜாதிகளுக்கு உறுத்தக்கூடாது என்ற ஏற்பாடு மட்டுமே பிராமண வெறுப்பு பேசுகிற திராவிடத்தின் மைய நோக்கம்... நீதிக்கட்சி இந்து மதத்திற்கு விரோதமாக இல்லை, ஆனால் தி.க/திமுகவின் இந்து மத விரோத கருத்துகள் மிஷனரி, இஸ்லாமிய மதமாற்றும் அரசியலுக்கு பயன்பட்டன. பிற்படுத்தப்பட்ட அதிகார எழுச்சி, ஆபிரஹாமிய மதமாற்ற குழுக்கள் மட்டுமே இன்றும் பெரியார் என்கிற முகமூடியை... [மேலும்..»]

தமிழ் மரபின் தலைமைப் பண்புகளும் திராவிடக் கட்சிகளும்

February 4, 2019
By

தலைமைத்துவம் தமிழ் மரபில் நான்கு குணங்களைக் கொண்டது - அஞ்சாமை, ஈகை, விவேகம், செயலூக்கம். திராவிட இயக்க அரசியல் இந்த நான்கையும் எப்படி சித்தரிக்கிறது என பார்க்கலாம்... யார் ஒன்றுமே செய்ய மாட்டார்களோ அவர்களுக்கு நேராக செய்வது நல்லது என்ற நோக்கில் திராவிடம் மத்திய அரசை நோக்கி புஜம் மடிப்பது மோஸ்தரானது. பொதுவாக திருப்பி்அடிக்கும் தரப்புகளிடம் குனிந்தும், ஒன்றும் செய்யாதென உறுதி படுத்தப்பட்ட தரப்பிடம் கொந்தளிப்பதும் திராவிட மரபு... [மேலும்..»]

காவிரி மேலாண்மை வாரியமும் மத்திய பாஜக அரசும்

ஆறு வாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது என்பதே தவறு. இது முழுக்க முழுக்க தமிழ் மீடியாக்களின் புரிதலில் ஏற்பட்ட கோளாறு அல்லது விஷமப்பிரச்சாரம். உச்சநீதிமன்றம் ஆறுவார காலத்தில் ஒரு செயல்திட்டத்தை உருவாக்கச்சொன்னது. அவ்வளவுதான். இதை ஆரம்பம் முதலே மக்களிடமும் மீடியாக்களிடமும் தெளிவாக விளக்காதது தமிழக பாஜகவின் தவறு.. அதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட மாநிலங்கள் தங்கள் வசம் உள்ள அணைகளின் கட்டுப்பாட்டை நதிநீர் ஆணையத்தின் வசம் ஒப்படைக்க ஒத்துக்கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட எந்த மாநிலமும் இதற்குத் தயாராக இல்லை. கர்நாடகம் , ஆந்திரம் , கேரளம் மட்டுமல்ல,... [மேலும்..»]

ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்பு: ஒரு பார்வை

ரஜினி காந்த் இந்திய தேசியவாதத்துக்கு இணக்கமானவராகவே இதுவரை இருந்துவந்துள்ளார். அவர் பி.ஜே.பி.யின் ஆசியுடன் களத்தில் குதித்திருக்கிறார் என்று நம்ப அனைத்து வாய்ப்புகளும் இருக்கின்றன. தமிழ் தேசியப் பிரிவினைவாத சக்திகள் அவரைக் கட்டம் கட்டி எதிர்க்கத் தொடங்கியிருப்பதிலும் பாஜக அவருடைய வருகையை வரவேற்று அறிக்கைகள் விட்டிருப்பதிலும் இருந்து இந்த யூகமே உண்மையாக இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதுபோல் தெரிகிறது. ஆனால், தமிழக, இந்திய அரசியலை தமிழக இந்திய சக்திகள் தீர்மானிக்கவில்லை என்று நம்ப நூற்றுக்கணக்கான நிகழ்வுகள் நடந்தவண்ணம் இருக்கின்றனவே... ரஜினியின் அரசியல் பிரவேசம் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பது அவரைப் பின்னின்று இயக்குபவர்கள் யார் என்பதைப் பொறுத்தே... [மேலும்..»]

சிவலிங்கம் இந்துமதம் இன்னபிற: பழ.கருப்பையாவுக்கு ஒரு எதிர்வினை

October 24, 2015
By

பழ.கருப்பையாவின் அரசியல் அழுத்தங்கள் புரிந்து கொள்ளக் கூடியவையே. ஆனால் இந்தக் கட்டுரையில் சம்பந்தமே இல்லாமல் இந்துமதத்தையும், சிவலிங்க வழிபாட்டையும், ஆதி சங்கரரையும், வேதாந்தத்தையும், விவேகானந்தரையும் மிகக் கீழ்த்தரமாக அவதூறு செய்திருக்கிறார். அதனாலேயே இந்த எதிர்வினை... வேத இலக்கியத்தில் ஆண்குறியைக் குறிப்பதற்காக வரும் சிஷ்ணா (शिष्ण - shiSHNaa) என்ற சொல்லையும், அதனுடன் எந்த வகையிலும் தொடர்பில்லாத, குழந்தை என்ற பொருள் கொண்ட சிசு (शिशु - shishu) என்ற சொல்லையும் குழப்பியடிக்கிறார் இந்த பிரகஸ்பதி... பன்னிரு சைவத் திருமுறைகளிலும் ஆயிரக் கணக்கான இடங்களில் நான்மறைகளும், வேள்விகளும் மீண்டும் மீண்டும் போற்றப் பட்டுள்ளன என்பதை உண்மையான தமிழ்ச்... [மேலும்..»]

தமிழகத்தில் பிஜேபி வளர என்ன செய்ய வேண்டும்?

தமிழகத்திலுள்ள அனைத்து மாநிலக் கட்சிகளுமே ஒரு" தலைமை அடிமை"யாகவே உள்ளன. அவ்வாறு இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் மாநில ஆட்சியைக் கைப்பிடிக்க பிஜேபி தகுதியான ஒரேயொரு தலைவரைக் குறைந்த பட்சம் பத்து வருடங்களுக்காகவாவது வைத்துக் கொள்ளாத வரை தமிழகத்தில் பிஜேபி வளராது. தலைவரை அடிக்கடி மாற்றுவது என்பது மாநிலத்தில் நான் உன்னை விடப் பெரியவன் என்ற மனோவியாதியை மட்டுமே தலைவர்களுக்குள்ளாக உருவாக்கும்.... கொள்கை, கட்சி அனைத்தையும் தாண்டி தனி நபர் துதிதான் மிக முக்கியமானது என்ற அடிப்படையில் தான் தமிழ்ச்சமூகம் இருக்கிறது. மக்களின் உணர்ச்சியைப் பெருக்குகிற, ஹீரோயிச பாணியிலான ஒரு தலைவரை பிஜேபியினர்... [மேலும்..»]

மூன்றாவது அணி முரண்பாடுகளின் அணி

மூன்றாவது அணி என்பது முரண்பாடுகளின் மொத்த உருவம், ஆட்சிக்கு வரமுடியாது என்பது நன்கு தெரிந்தும், தேர்தல் களத்தில் நாங்களும் இருக்கிறோம் என்பதை காட்டுவதற்காகவே அரிதாரம் பூசிக் கொண்டு மேடையில் தோன்றும் பப்பூன்கள்... 80 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட உத்திர பிரதேசத்தில் இரு துருவங்களாக உள்ள முலாயமும், மாயவதியும் இணைந்து செயல்படுவார்களா என்பது சந்தேகம். இருவருக்குமே பிரதமர் பதவியின் மீது ஆசை, இருவருமே குறிப்பிட்ட பிரிவு மக்களின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக கூறிக் கொண்டு இருக்கிறார்கள்....தங்களுக்கு தொகுதி வேண்டுமானலும், எந்த தொகுதி என்று முடிவு செய்வதானாலும், ஜெயலலிதாவின் முடிவில் உள்ளது என்ற வாய் மூடி மௌனியாக... [மேலும்..»]

திராவிட இயக்கங்களை ஏன் எதிர்க்க வேண்டும்.?

அறிவு சார், வரலாற்று சார் பண்பாட்டு அறிவு ஓட்டத்தில் மிகப்பெரிய அகழியை வெட்டி தமிழ் மக்களை கலாச்சார, பண்பாட்டு அனாதைகளாக்கி இருக்கிறது திராவிட அரசியல்.தொட்டில் குழந்தை முதல் சுடுகாடு வரை அனைத்திலும் ஊழல் செய்தும் திருடியும் சொத்து சேர்ப்பது மட்டுமே பெருமை என மக்களை மழுங்கடித்தது, சொரணை என்பதும், வெட்கம் , மானம் என்பதெல்லாம் ஏதோ அயல் கிரக வாசிகளின் மொழி என்பதாக மக்களை நம்ப செய்தது... திராவிட இயக்கத்திற்கு ஆள் சேர்க்க அவர்கள் விரித்த தூண்டில் எதிர்கலாச்சாரம் எனும் கேடு. எந்த ஒழுக்க விதியையும் மீறலாம். யார் வேண்டுமானாலும் யாரோடு வேண்டுமானாலும் பாலுறவு கொள்ளலாம்.... [மேலும்..»]

விதியே விதியே… [நாடகம்] – 6

ஒருவர் நிதானமாக நடந்து வந்து மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொள்கிறார். இன்னொருவர் வந்து அந்தத் தீயில் சிகரெட் பற்ற வைத்துக் கொள்கிறார். இன்னொருவர் அடிக்கடி துண்டுகளை மாற்றிக் கொண்டிருக்கிறார்... குழந்தை : நாம சரியான இடத்துக்குத்தான் வந்திருக்கோமா. இல்லைன்னா ஏதாவது பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு வந்துவிட்டோமா?..... ஒரு தலைவன் என்பவன் தன் பின்னால் நடுநிலையாளர்களும் இன்ன பிறரும் ஏன் எதிரணியினரும் அணிவகுத்து நிற்க போதிய நியாயங்களை ஏற்படுத்திக் கொடுப்பவனாக இருக்க வேண்டும். விமர்சன மழைத்தூறல்கள் இடைவிடாமல் பொழியும்போது தாங்கிக் கொள்ளவொரு தார்மிகக் குடையைக் கொடுக்க வேண்டும். ஆனால், எங்களை முடிவற்றுப் பெய்யும் மழையில் நனையவிட்டார்கள். அடுத்தவருக்காக... [மேலும்..»]

விதியே விதியே… [நாடகம்] – 5

பிரதமர்: உண்மையில் இந்தப் போர் தமிழ் மக்களின் சம்மதத்துடன் நடந்த ஒன்றே அல்ல. ஆயுதம் ஏந்திய ஒரு சிலரால் முன்னெடுக்கப்பட்ட ஒன்று அவ்வளவுதான். இன்னும் சரியாகச் சொல்வதானால், ஒரு சர்வதேசக் கடத்தல்காரன், விடுதலைப் போராளி என்ற போர்வையில் ஊரை ஏமாற்றி உலையில் போட்டிருக்கிறார். இதுதான் உண்மை. அதனால்தான் தனி நாடு கேட்ட வடக்கு கிழக்கு பகுதியில் எவ்வளவு தமிழர்கள் இருந்தார்களோ அதே அளவுக்கு தமிழர்கள், சிங்களர்கள் பெரும்பான்மையாக இருக்கும் தெற்குப் பகுதியில் இதே போர்க் காலகட்டம் முழுவதிலும் சந்தோஷமாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள்... குழந்தை: விடுதலைப் புலிகள் செய்த தவறுக்காக அப்பாவிகள் கொல்லப்பட வேண்டுமா..? ஒரு... [மேலும்..»]

Josh Oliver Authentic Jersey