Posts Tagged ‘ திராவிட இயக்கப் பொய்கள் ’

அனுபவம், இலக்கியம், புத்தகம்

சென்னைப் புத்தகக் கண்காட்சி 2016: ஓர் அனுபவம்

June 13, 2016
-
சென்னைப் புத்தகக் கண்காட்சி 2016: ஓர் அனுபவம்

பகவத்கீதை ஏன் உலகிலேயே மோசமான புத்தகம், இந்துமதத்தை அழித்து ஒழிப்பதே நமது நோக்கம் போன்ற பிரசாரங்களை வேறுவேறு தலைப்புகளில் சொல்லும் விதவிதமான புத்தகங்கள் கணிசமான அரங்குகளில் இருந்தன. இதற்கு நடுவில், வாசிப்பின்பத்தையும் அறிவுத் தேடலையும் மையப் படுத்தி நல்ல புத்தகங்களை விற்கும் அரங்குகளும் ஆங்காங்கே தென்பட்டன.."புத்தகங்களில் நான் பொன்னியின் செல்வனாக இருக்கிறேன்" என்று மிஸ். தமிழ்த்தாயின் கீதை கட்டாயம் சொல்லக்கூடும். அந்த அளவுக்கு சின்னதும் பெரிசுமாக விதவிதமான அளவுகளில், விதவிதமான அட்டைப்படங்களுடன் பொ.செ. வீற்றிருந்தது... சென்னைப் புத்தகக் கண்காட்சி என்பது ஒரு மிக முக்கியமான பண்பாட்டு நிகழ்வு. அது தொடர்ந்து இவ்வளவு பெரிய அளவில் இத்தகைய வீச்சுடன்... [மேலும்..»]

அரசியல், புத்தகம், வரலாறு, விவாதம்

கொஞ்சம் தேநீர், கொஞ்சம் ஹிந்துத்துவம்: புத்தக அறிமுகம்

கொஞ்சம் தேநீர், கொஞ்சம் ஹிந்துத்துவம்: புத்தக அறிமுகம்

மாளவியா ஒரு மண்ணுருண்டை, திலகர் ஒரு கொலைகாரர், வீர சாவர்க்கர் ஒரு கோழை, பிரிட்டிஷார் வரவில்லை என்றால் நமக்குக் கல்வி அறிவே இருந்திருக்காது - தமிழ்நாட்டில் இப்படி ஒரு இந்துத்துவ எதிர்ப்பு பிரசாரம் நடந்து வருகிறது. இந்துத்துவ எதிர்ப்பு என்பது எப்போதுமே பாரதத்தின் தேசத் தலைவர்களையும், அதன் மகத்தான பண்பாட்டுக் கூறுகளையும் கொச்சைப்படுத்துவதில், இழிவுபடுத்துவதில் தான் முடிகிறது. ஆனால் உண்மை என்ன? இந்துத்துவத்தின் வரலாற்றுப் பார்வையை முன்வைக்கும் இந்தப் புத்தகம் ஒவ்வொரு தமிழனும் தெரிந்துகொள்ள வேண்டிய சொந்தப் பாரம்பரியம். பொய்யிலிருந்து மெய்மைக்கு அழைத்துச் செல்லும் அரவிந்தன் நீலகண்டன் எழுதியுள்ள இந்தப் புத்தகம், இன்றைய அறிவுச்சூழலில் ஒரு கட்டாயத்... [மேலும்..»]

அரசியல், இந்து மத விளக்கங்கள், சைவம், விவாதம்

சிவலிங்கம் இந்துமதம் இன்னபிற: பழ.கருப்பையாவுக்கு ஒரு எதிர்வினை

October 24, 2015
-
சிவலிங்கம் இந்துமதம் இன்னபிற: பழ.கருப்பையாவுக்கு ஒரு எதிர்வினை

பழ.கருப்பையாவின் அரசியல் அழுத்தங்கள் புரிந்து கொள்ளக் கூடியவையே. ஆனால் இந்தக் கட்டுரையில் சம்பந்தமே இல்லாமல் இந்துமதத்தையும், சிவலிங்க வழிபாட்டையும், ஆதி சங்கரரையும், வேதாந்தத்தையும், விவேகானந்தரையும் மிகக் கீழ்த்தரமாக அவதூறு செய்திருக்கிறார். அதனாலேயே இந்த எதிர்வினை... வேத இலக்கியத்தில் ஆண்குறியைக் குறிப்பதற்காக வரும் சிஷ்ணா (शिष्ण - shiSHNaa) என்ற சொல்லையும், அதனுடன் எந்த வகையிலும் தொடர்பில்லாத, குழந்தை என்ற பொருள் கொண்ட சிசு (शिशु - shishu) என்ற சொல்லையும் குழப்பியடிக்கிறார் இந்த பிரகஸ்பதி... பன்னிரு சைவத் திருமுறைகளிலும் ஆயிரக் கணக்கான இடங்களில் நான்மறைகளும், வேள்விகளும் மீண்டும் மீண்டும் போற்றப் பட்டுள்ளன என்பதை உண்மையான தமிழ்ச்... [மேலும்..»]

சமூகம், மகளிர், விவாதம்

தெய்வத்தின் குரலில் திராவிடர் கழகத்தின் திருமண மந்திர திரிபுவாதம்

தெய்வத்தின் குரலில் திராவிடர் கழகத்தின் திருமண மந்திர திரிபுவாதம்

இதே மந்திரத்தைத்தான் பிராமணர்களும் தங்கள் திருமணங்களில் பயன்படுத்துகிறார்கள் என்பதையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். சூத்திரனை கேவலப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் இருந்தால் அல்லது இந்த மந்திரம் கேவலமாக இருந்தால் பிராமணர்கள் தங்கள் திருமணங்களில் பயன்படுத்துவார்களா? சூத்திரனைக் கேவலப்படுத்த வேண்டும் என்று நினைத்திருந்தால் சூத்திரனுக்கு மட்டுமே அந்த மந்திரத்தை சொல்வார்கள். ஆனால் நடைமுறையில் எல்லோருக்கும் அதே மந்திரம்தான் பயன்படுத்தப்படுகிறது...காஞ்சி சங்கராச்சாரியார் சொல்லாத ஒன்றை காஞ்சி சங்கராச்சாரியார் சொல்லியிருக்கிறார் என்று சொல்வது கடைந்தெடுத்தப் பொய்தானே! இப்படி திரிபுவாதம் செய்பவர்கள்தான் திராவிட இயக்க எழுத்தாளர்கள்.... [மேலும்..»]

கோயில்கள், சமூகம், வரலாறு, விவாதம்

கோயில்நுழைவுப் போராட்டமும் திராவிட இயக்கமும் – 1

கோயில்நுழைவுப் போராட்டமும் திராவிட இயக்கமும் – 1

‘தாழ்த்தப்பட்டோர் கோயில் நுழைவுப் போராட்டத்தை பகிரங்கமாகவும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்புத் தொண்டர்களைத் திரட்டியும் தமிழகத்தில் முதலில் நடத்தியவை நீதிக்கட்சியும், சுயமரியாதை இயக்கமும்தான்’ – என்று தொடர்ந்து திராவிட இயக்க எழுத்தாளர்கள் மட்டுமல்லாமல் சில தலித் எழுத்தாளர்கள் கூட எழுதி வருகிறார்கள். இதற்கு முன்னே கோயில் நுழைவு போராட்டம் தமிழகத்தில் நடந்திருக்கிறது என்பதை இந்த திராவிட இயக்க எழுத்தாளர்கள் நமக்குச் சொல்வதில்லை. வரலாற்றை மறைப்பதிலும், திரிப்பதிலும் இவர்களை மிஞ்சக்கூடிய அளவுக்கு தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட்காரர்களும்கூட வளரவில்லை.  தமிழ்நாட்டில் நடந்த கோயில் நுழைவுப் போராட்டம் பற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம். தலித்துகளுக்காக கோயில் நுழைவு போராட்டத்தை முதன் முதலில் ஆரம்பித்தது திராவிட இயக்கம்தான்... [மேலும்..»]

அரசியல், வரலாறு, விவாதம்

திராவிட இயக்கங்களை ஏன் எதிர்க்க வேண்டும்.?

திராவிட இயக்கங்களை ஏன் எதிர்க்க வேண்டும்.?

அறிவு சார், வரலாற்று சார் பண்பாட்டு அறிவு ஓட்டத்தில் மிகப்பெரிய அகழியை வெட்டி தமிழ் மக்களை கலாச்சார, பண்பாட்டு அனாதைகளாக்கி இருக்கிறது திராவிட அரசியல்.தொட்டில் குழந்தை முதல் சுடுகாடு வரை அனைத்திலும் ஊழல் செய்தும் திருடியும் சொத்து சேர்ப்பது மட்டுமே பெருமை என மக்களை மழுங்கடித்தது, சொரணை என்பதும், வெட்கம் , மானம் என்பதெல்லாம் ஏதோ அயல் கிரக வாசிகளின் மொழி என்பதாக மக்களை நம்ப செய்தது... திராவிட இயக்கத்திற்கு ஆள் சேர்க்க அவர்கள் விரித்த தூண்டில் எதிர்கலாச்சாரம் எனும் கேடு. எந்த ஒழுக்க விதியையும் மீறலாம். யார் வேண்டுமானாலும் யாரோடு வேண்டுமானாலும் பாலுறவு கொள்ளலாம்.... [மேலும்..»]

அரசியல், வரலாறு

திராவிட இயக்க வரலாறும் தமிழ் நாடும்

திராவிட இயக்க வரலாறும் தமிழ் நாடும்

தத்தம் சாதி நலனுக்கு என்றே கட்சிகள் தொடங்கிய அனைத்துமே இதே திராவிட இயக்க சிந்தனையின் பாரம்பரியத்தில் வந்தன தான். தம் சாதி நலன், பதவி வேட்டை, பணத்தாசை இந்த மூன்றின் அடித்தளத்தில் இருப்பது ”பிராமணனை ஒதுக்கி வை” என்னும் மூல மந்திரம் தான்.. கட்சி மாறுவதற்குக்கூட வருஷக் கணக்கில் மாதக்கணக்கில் ஆகும். ஆனால் ஈ.வே.ராமசாமி நாயக்கர் திடீரென்று பகுத்தறிவுப் பகலவனாக, தந்தை பெரியாராக ஆகிவிடுகிறார். இத்தகைய மனமாற்றம், சிந்தனை மாற்றம் எப்படி நிகழ்ந்தது என்று அவரும் சொன்னதில்லை. யாரும் அவரைக் கேட்டதும் இல்லை... வடவர் சுரண்டலுக்கு எதிராகப் போராடிய கட்சி, இன்று தமிழ் நாட்டின் இயற்கை வளங்கள்... [மேலும்..»]

அரசியல், சமூகம்

பெட்ரோவ்னா பாட்டி சுட்ட திராவிட வடை

பெட்ரோவ்னா பாட்டி சுட்ட திராவிட வடை

பகுத்தறிவைக் குத்தகைக்கு வாங்கிய திராவிட தலைவர்கள் உடையும் இந்தியா? என்ற நூலை பற்றி விமர்சனம் செய்கிறேன் என்ற பேரில் திராவிட தலைவர்கள் செய்த 'வடிவேலு காமெடி'யை பற்றி என்னால் எழுதாமல் இருக்க முடியவில்லை. ஒரு நிலப்பகுதியை இனமாக மாற்றிய இவர்களுக்கு ஒரு வார்த்தை கண்டமாக மாற்றுவதா கஷ்டம்? குமரி கண்டம் என்பது வரலாற்று திரிப்பு என்று சொன்னவுடன் காலில் வெந்நீர் கொட்டியது போல் அலறுவது ஏன் என்பது எனக்கு புரியவில்லை. தமிழ் மொழியின் எந்த இடத்திலும் குமரி கண்டம் என்ற வார்த்தை இருந்ததாக தெரியவில்லை... [மேலும்..»]

நிகழ்வுகள், புத்தகம்

உடையும் இந்தியா? குறித்து வீரமணியின் வசையரங்கு

உடையும் இந்தியா? குறித்து வீரமணியின் வசையரங்கு

அறியாமையை இந்த அளவு அப்பட்டமாக அவர்கள் வெளிச்சம் போட்டு காட்டியிருந்திருக்க வேண்டாம் என தோன்றியது.. ‘குமரி கண்டம்’ எனும் கோட்பாட்டை மிகக் கடுமையாக கேள்விக்கு உள்ளாக்கியவர் இவர்கள் ‘ஆரியர்’ என முத்திரையிடும் சமுதாயத்தைச் சேர்ந்தவரல்லர்... இந்த நூலை எரிக்க வேண்டுமென்று சொன்னது புத்தகங்களை எரிக்கும் புத்தி கில்ஜிக்கு மட்டுமில்லை ஈவெராவின் சீடகோடிகளுக்கும் உண்டு என்பதை நிரூபித்தது... ‘திராவிட’ என்பது மிகத் தெளிவாக பிராந்தியம் சார்ந்த பதமாகவும், ‘ஆரிய’ என்பது சமூக அந்தஸ்து சார்ந்த பதமாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது... [மேலும்..»]

இலக்கியம், வரலாறு

ஆயுத பூசை – ஆய்வுகளும் வக்கிரங்களும்

November 17, 2011
-
ஆயுத பூசை – ஆய்வுகளும் வக்கிரங்களும்

ஆயுத பூசையும் அறிவாலய மடாதிபதியும்! என்ற கட்டுரையை தினமணியில் பால.கௌதமன் எழுதினார்.. அதற்கு வந்தது திராவிட இயக்க எதிர்வினை.. ஆயுதங்களில் தேவதை குடியிருப்பதாகக் கருதுவது தமிழர் மரபு. சிலப்பதிகாரம் வேட்டுவவரியில், ’வில்லுக்கு முன் கொற்றவை செல்வாள்’ என்ற குறிப்பு... மகாநவமி, விஜயதசமி விழா 5-ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது... [மேலும்..»]