காமராஜர் என்கிற தேசியவாதி

கொள்கையில் மாறுபாடுள்ள அரசியல் கட்சிகள், மக்கள் நலனுக்காகத் தமக்குள் ஓரளவு சமரசம் செய்துகொண்டு, குறைந்தபட்ச செயல்திட்டத்தை வகுத்துக்கொண்டு இயங்குவதைத்தான் கூட்டணி என்று குறிப்பிட வேண்டும்…. அண்ணாவின் வியூகம் காங்கிரசுக்குப் பெருத்த சேதம் விளைவிக்கக்கூடும் என்கிற உளவுத்துறையின் முன்னெச்சரிக்கை உரிய தருணத்தில் வந்தும் காமராஜர் அதைப் பொருட்படுத்தவில்லை… தட்சிணப் பிரதேசம் அமைந்தால் தம்மைப் போன்றவர்களுக்கு அரசியலில் முக்கியத்துவம் குறைந்துவிடும் என்று அரசியல்வாதி காமராஜர் கருதியிருக்கக் கூடும்.

View More காமராஜர் என்கிற தேசியவாதி

இந்துக் கடவுளர்கள் கேலிக்குரியவர்களா?

இந்த ஆண்டு விநாயகரின் பிறப்பைப் பற்றியும் பிள்ளையார் வழிபாடு பற்றியும் திண்டுக்கல், கோவை போன்ற சில ஊர்களில் துண்டுப் பிரசுரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. […]மக்கள் அவர்களைச் சற்றும் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. ஏனென்றால், ஆண்டுக்கு ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா எல்லா ஊர்களிலும் சந்து பொந்துகளில் உள்ள சின்னஞ்சிறு பிள்ளையார் கோயில்களிலும்கூட மிக விமரிசையாகக் கொண்டாடப் பட்டு வருகின்றது.

View More இந்துக் கடவுளர்கள் கேலிக்குரியவர்களா?

மையொற்றி மகானுபாவர்களின் மயக்கப் புலம்பல்

கூத்துகளையும் கேளிக்கைகளையும் அரங்கேற்றி 400 கோடி ரூபாய்கள் செலவழித்துச் செம்மொழி மாநாடு நடத்த முடிகிறது. தமிழக முதல்வர், ராஜராஜன் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை (பள்ளிப்படையை) மட்டும் கண்டறிவதற்கு என்ன நடவடிக்கை இதுவரை எடுத்துள்ளார்?.. சோழர்கள் தங்களைச் சூரிய குலச் சத்திரியர்கள் என்று சொல்லிகொண்டார்கள். ராமனோடு தங்களுக்கிருந்த பூர்விகத் தொடர்பைப் பறைசாற்றிக் கொண்டார்கள். படையெடுத்து வெற்றி கண்டபோது தங்களை “த்விதிய (இரண்டாவது) ராமன்” என்றே அழைத்துக் கொண்டிருக்கிறார்கள்…

View More மையொற்றி மகானுபாவர்களின் மயக்கப் புலம்பல்

ரஜினி மகள் திருமண வைபவம்: சில எண்ணங்கள்

கருணாநிதி கையால் தாலி எடுத்துக் கொடுப்பது, எதிர்கட்சியின் மீது பெய்யப் படும் வசைகளே மந்திரங்களாக வைத்து பெண்ணின் கழுத்தில் மாங்கல்யம் கட்டப் படுவது போன்ற அவலம் எதுவும் நடக்காமல், தன் மனதுக்கு பிடித்தபடி, தன் குடும்பத்தினர் விரும்புகிற படி இந்த திருமணத்தை நடத்தியிருக்கிற ரஜினியின் நேர்மை மெச்சத் தகுந்தது…. விடுதலை பத்திரிகை பகுமானமாக வீரமணி ரஜினி குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட போட்டோ மட்டும் இன்று வெளியிட்டிருக்கிறது…

View More ரஜினி மகள் திருமண வைபவம்: சில எண்ணங்கள்

நீதிக்கட்சியின் மறுபக்கம் – 03

மக்களைச் சுரண்டிக் கொள்ளையடித்த கொள்ளைக் கும்பல்களின் மொத்தக் கூட்டமைப்புதான் நீதிக்கட்சி. அன்று கொத்தடிமைகளாக இருந்தவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் தான். அவர்களை முன்னேற விடாமல் அடிமைப்படுத்திச் சுரண்டியே வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தவர்கள் நீதிக் கட்சியினர் தான். இவர்களா தாழ்த்தப் பட்டவர்களின் முன்னேற்றத்திற்கு என்று நீதிக்கட்சியை ஆரம்பித்தனர் ?

View More நீதிக்கட்சியின் மறுபக்கம் – 03

நீதிக்கட்சியின் மறுபக்கம் – 01

உண்மையிலேயே நீதிக்கட்சி தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பாடுபடத்தான் தோன்றியதா?தாழ்த்தப்பட்டோரிடையே அரசியல் அனுபவம் உள்ளவர்கள் இல்லாது இருந்தார்களா? நீதிக்கட்சி தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்தும் பணியைத் தொடர்ந்து செய்து வந்ததா? நீதிக்கட்சி தாழ்த்தப்பட்டவர்களுக்கு செய்த சாதனைதான் என்ன?

View More நீதிக்கட்சியின் மறுபக்கம் – 01

தமிழக அரசு சின்னம் மாற்றம்?: சில எண்ணங்கள்

இந்த மண்ணின் சிற்பிகளின், கலைஞர்களின், ஞானிகளின், உழைப்பாளிகளின், மன்னர்களின், வீரர்களின், மக்களின் ஆன்மாவைத் தம்முள் கோபுரங்கள் தாங்கிக் கொண்டிருக்கிறன… நாளை தமிழ்த் தாய்க்கு பர்தா போடவும், தமிழ்த் தாய் வாழ்த்துக்குப் பதில் சுவிசேஷ பஜனை பாடவும் கூட இந்த மானங்கெட்ட கூட்டம் கொடி பிடிக்கும்… திராவிடக் கட்சிகளில் நீறுபூத்த நெருப்பாக எப்போதும் இருந்து வரும் கடும் இந்து துவேஷமும், ஏன் இந்திய தேசியம் மீதான வெறுப்புணர்வும் கூட இன்னும் அதிகமாக, வெளிப்படையாகவே தலை தூக்கக் கூடும்.

View More தமிழக அரசு சின்னம் மாற்றம்?: சில எண்ணங்கள்

தமிழை வளர்ப்பதாய் மாநாடு கூட்டிடுவாரோ?

தமிழை வளர்ப்பதாய் மாநாடு கூட்டிடுவாரோ
கம்பனின் இராமனை வெறுப்பவர் தமிழ் வளர்ப்பவரோ
ஔவையின் முருகனை மறுப்பவர் தமிழர் தானோ …
தமிழின் கொள்கைக்கு பகைவர்
தமிழ் வளர்ப்பதேனோ – இவர்
தமிழ் விற்றே தன் குலம் செழிப்பர்
இதை உணர்வார் யாரோ …
ரத்தங்கள் சிந்தி கட்டினன் தமிழன்
சில சொற்களை சிந்தியே தகர்த்திட பார்க்கின்றார்

View More தமிழை வளர்ப்பதாய் மாநாடு கூட்டிடுவாரோ?

போகப் போகத் தெரியும் – 45

வெள்ளைக்காரன் ஏவிய படியெல்லாம் பணிசெய்தும் தங்களை அந்த அரசு மதிக்கவில்லை என்கிற ஆதங்கம் இந்தத் தீர்மானத்தில் வெளிப்படுகிறது. அடிமையாக இருக்க முடியவில்லையே என்ற ஆதங்கம்தான் இது.

View More போகப் போகத் தெரியும் – 45

விஜயகாந்த் சொன்னது சரிதானா?

‘ஹைதராபாத் நிஜாமுக்கு இருக்கவேண்டிய கவலை, ஆதினகர்த்தாக்களுக்கு இருக்க வேண்டிய கவலை, பகுத்தறிவு இயக்கத் தலைவருக்கு ஏன் ஏற்படுகிறதோ தெரியவில்லை’ என்று பழத்தில் ஊசியை பக்குவமாக ஏற்றினாரே அண்ணாதுரை அது எதற்காக?

View More விஜயகாந்த் சொன்னது சரிதானா?