
எவ்விதமான மொழியறிவோ, இலக்கிய அறிவோ, ஆன்மீக அறிவோ இன்றி இறை மறுப்பு என்ற பெயரிலும் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரிலும் இறை நம்பிக்கை உள்ளவர்களின் நம்பிக்கைகளையும் உணர்வுகளையும் காயப்படுத்தும் போக்கினை பாரதி தமிழ்ச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது… நேர்மறையானதொரு எதிர்வினையாக பாரதி தமிழ்ச் சங்கம் ஜூலை 19 மாலை 6:00 மணிக்கு இணையம் வாயிலாக நடத்திய நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளிலிருந்து பக்தர்கள் கலந்துகொண்டு ஒரே சமயத்தில் கந்த சஷ்டி கவசத்தினைப் பாராயணம் செய்தனர்…