Posts Tagged ‘ திருவள்ளுவர் ’

வள்ளுவர் காவிதான்! அதற்கென்ன இப்போது?

November 11, 2019
By

திருக்குறளை ‘தங்கத்தட்டில் வைத்த மலம்’ என்று கேவலமாக விமர்சித்த ஈ.வெ.ரா.வின் அடிப்பொடிகளுக்கு பாஜகவினரை விமர்சிக்க எந்த அருகதையும் இல்லை... திருக்குறளை புனித நூலாக ஹிந்துக்கள் போற்றுகிறார்கள். கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் அவ்வாறு திருக்குறளை புனித நூல் என்று ஒப்புக் கொள்கிறார்களா?... திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உதித்த ஞானி; பாரதப் பண்பாட்டின் அடிநாதமான ஒழுக்கலாறுகளை உபதேசித்த சனாதனி; உலகுக்கு ஞானம் அளித்த துறவி. சனாதனத்தின் இப்போதைய பெயர் ஹிந்து என்பதால், வள்ளுவர் ஓர் ஹிந்துவே. அவரைப் போற்றவும், எந்த வடிவிலும் வணங்கவும் ஹிந்துப் பெருமக்களுக்கு உரிமையும் உண்டு கடமையும் உண்டு. இதை விமர்சிக்க எவனுக்கும் உரிமை இல்லை... [மேலும்..»]

திருக்குறள் கூறுவது தர்ம சாஸ்திரங்களே

திருக்குறளில் கூறப்பட்டிருப்பது வேதங்கள் மற்றும் தர்ம சாஸ்திரங்களின் கருத்துக்கள் தான் என்பதைச் சொல்லத் தைரியம் வேண்டும்; அதை நூலாகவும் கொண்டுவரக் கூடுதல் தைரியம் வேண்டும். அது டாக்டர் நாகஸ்வாமியிடம் இருக்கின்றது.. மன்னரைப் பற்றிக் கூறும் இடத்திலெல்லாம் தர்ம சாஸ்த்திரங்களைக் குறிப்பிடும் திருவள்ளுவர், கருணை, தயை, உறுதி, அறம் என்று மனு நீதியின் ராஜ தர்மத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து நற்பண்புகளின் மொத்த உருவமாக மன்னனைக் காட்சிப்படுத்துகிறார். ‘அமைச்சர்’ பற்றி அவர் விவரிப்பது நமக்கு சேர, சோழ, பாண்டிய, பல்லவ, நாயக்க மன்னர்களின் செப்புப் பட்டயங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பல அமைச்சர்களை நினைவூட்டுகிறது.. வரலாற்று ஆசிரியரும், தொல்லியல் ஆய்வாளரும், இலக்கிய எழுத்தாளருமான... [மேலும்..»]

திருவள்ளுவர் ஜெயந்தி [நாடகம்]

சிறுவன் அவர் முகத்தையே வைத்த கண் வாங்காமல் பார்க்கிறான். வகுப்பறையில் இருக்கும் அனைவருமே வள்ளுவரைக் கண்டு அதிசயித்து நிற்கிறார்கள். மடமடவென குழந்தைகளும் ஐயனை வணங்கி ஆசி பெறுகின்றன. ஒன்றிரண்டு பெரிய வகுப்பு மாணவர்கள் மட்டும் கைகளைக் கட்டியபடி தள்ளி நின்று பார்க்கிறார்கள்... இந்த முரண் என்பவை வாழ்க்கையின், உயிர்களின், உலகின் ஆதார அம்சம். மானுக்குப் புலி முரண்... பூவுக்கு முள் முரண்...நீருக்கு நெருப்பு முரண்... இரவுக்குப் பகல் முரண்... சூரியனுக்கு நிலவு முரண்... உலகம் பெரும் ஒத்திசைவால் ஆனது... அதுபோலவே முரண்களாலும் ஆனது... அறங்கள் முரண்படவில்லை... இரவையும் பகலையும் போல் இணை பாதையில் செல்கின்றன அருகருகே... [மேலும்..»]

ஸீதையின் மஹாசரித்ரமும் அஷ்டாக்ஷரத்தின் பொருளும் — 3

September 13, 2017
By

இறைவனைப் பற்றி வெறும் வார்த்தைகளால் அறிவது என்பது சர்க்கரை என்று வாசித்து அறிவது போன்றதாம். சர்க்கரையினை நாக்கில் வைத்து சுவைத்தாலன்றி அதன் முழு அனுபவம் கிட்டாது. “இறைவனை முழுமையாக அறிய முடியாது” என்பவன்தான் அவனை முழுக்க அறிந்தவனாவான். “இறைவனை முழுமையாக ஸ்தோத்கரிக்க முடியாது” என்றறிந்தவன்தான் அவனை முழுக்கப் புகழ்ந்தவனாவான் என்கிறது கேன உபநிஷத். [மேலும்..»]

சிவநெறி – சமய அவிரோதம்

அவிரோதம் என்பதற்குப் பட்சபாதமின்மை எனப் பொருள் உரைத்தனர், உரையாசிரியர். அதாவது எல்லாச் சமயங்களையும் நடுநிலையில் நின்று நோக்குதல் என்பது பொருள். ஞானியர் எம்மதத்து நூல்களிலும் கூறப்பட்டுள்ள மெய்ப்பொருளைத் தம்முடைய பொருளாகவே கொண்டு பயனடைவர். தாம் படித்துள்ள ஒருநூலின் பொருளே பெரிது எனக் காதும்பேதைமை பெரியோர்க்கில்லை. சமயங்களின் வரலாற்றில் ஒருமதத்தைச் சார்ந்தவர் மற்றொரு மதத்தினை வாதில் வென்றார் எனக் கூறுவதைக் காண்கின்றோம். தோற்றனவாகக் கூறப்படும் மதங்கள் இன்றும் நிலவக் காண்கின்றோம். வென்ற மதங்கள் ஒளிகுன்றி இருப்பதையும் காண்கின்றோம்.... [மேலும்..»]

ஒரே நிலம், நீர், நெருப்பு — ஆனால் மனிதன்…

“தாழ்த்தப்பட்டவனின் வீட்டில் ஒளிநுழைந்தால் அது தீண்டப்படாததாகி விடுமா? எந்த மனிதனின் வீட்டிற்குள் இறையொளி இருக்கிறதோ அவனே சான்றோன் ஆவான்" என்கிறார் சர்வக்ஞர். தன்னைப் போலவே பிறரை நேசிப்பவன் உலகமே தானாகிற சிறப்புப் பெறுகிறான். ”ஆசைகளை அடக்கி வாழ்பவனுக்கு உலகமே கைலாசமாகிறது,“ என்பது அவரது தத்துவமும், சித்தாந்தமும். பசித்தவனுக்கு உணவு தருதல், உண்மையிலிருந்து மாறாமல் இருத்தல், சகமனிதனை நேசித்தல் என்ற பண்புகள் மட்டுமே வாழ்க்கையை எளிமைப்படுத்தி உயரவைக்கும் என்கிறார்... [மேலும்..»]

சில திருக்குறள்கள் குறித்த ஒரு பார்வை

சிற்சில திருக்குறள்களுக்கு பரிமேலழகர் முதலான அறிஞர்கள் பலரும் கண்ட கருத்துக்கள் யாவும் ஏற்றுக்கொள்ளத் தக்கனவாகத் தெரியாத நிலை கூட இருக்கிறது.... தெய்வம் தொழாஅள் கொழுநற் தொழுதெழுவாள் என்ற குறளில், பெண்கள் கணவனைத் தவிர, பிற தெய்வம் தொழார் என்று ஒரு கருத்து உரையாசிரியர்களால் நிறுவப்படுகிறது. இவ்வுரை மூலம் பெண்களின் இறைவழிபாட்டு உரிமை மறுக்கப்படுகின்றது. எனவே, இதற்கு எதிர்மறையாகப் பொருள் கொண்டால் என்ன? இப்படி முப்பதிற்கும் மேற்பட்ட குறட்பாக்களுக்கு பரிமேலழகர் எதிர்மறைப் பொருள் கொள்கிறார்....கணவனையே நினைந்து கொண்டு, மனதால் வணங்கிக்கொண்டு துயிலெழுகின்றவளாகிய கற்புடைய பெண் கணவனதும் மற்றை எல்லோரதும் நலனுக்காக கடவுள்... [மேலும்..»]

[பாகம் 17] சித்பவானந்தரின் சிந்தனைகள்- பற்றுவிடுதல்

September 4, 2012
By
[பாகம் 17] சித்பவானந்தரின் சிந்தனைகள்- பற்றுவிடுதல்

இறையுணர்வு என்பது அனைத்தையும் வெறுத்து அகல்வது என்று ஆகாது. உலகுடன் ஒன்றி நின்று அனைத்துயிர்களும் இறைவடிவாக இலங்கும் உண்மையைத் தெரிந்து, அவற்றினிடத்தன்பு கொண்டு, எல்லாம் இறைமயம், இன்பமயம் என்று கண்டு இறைவனுக்கு ஆட்பட்டு வாழ்கின்ற எளிய வாழ்விலும் இறையுணர்வு கைகூடப் பெறலாம். எனவே அகத்துறவே இறையுணர்விற்கு அடிப்படையானது என்பது தெளிவாகின்றது. 'யான்', 'எனது' என்று நம்மையறியாமலே நம்மிடத்து ஓங்கி வளர்ந்துள்ள செருக்குணர்வு ஒன்றைனையே நாம் வேருடன் களைய வேண்டும்... தோரோ, எமர்ஸன், விட்மன் முதலான அமெரிக்க அறிஞர்தம் கருத்துகளை இவண் எடுத்துரைப்பது நம் ... [மேலும்..»]

பாரதி: மரபும் திரிபும் – 4

'பாரதி அகத்தியருக்கு பூணூல் அணிவிக்கிறாராம்!'.. அபிதான சிந்தாமணி உள்ளிட்ட பழைய நூல்கள் அகத்தியரை வேதியர் என்கின்றன. அவர் பாண்டிய மன்னர்களுக்கு புரோகிதராக விளங்குகினவர் என்று சாசனங்களால் அறியலாம்... 'பகவனுக்கும், ஆதிக்கும் நடந்த கலப்புத் திருமணத்திற்கு சாட்சிக் கையெழுத்துப் போட்டவர் மாதிரி ஆணித்தரமாகப் பொய் சொல்லுகிறாராம் பாரதி'...திருவள்ளுவரைப் பற்றிய இந்தச் செய்தி கபிலர் அகவல் என்ற நூலில் தொடங்கி, 1859 முதல் வெளிவந்த திருக்குறள் பதிப்புகள் அனைத்திலும் இடம் பெறுகிறது... பார்ப்பன ஆண் - தாழ்த்தப்பட்ட பெண் - அறிவு, தாழ்த்தப்பட்ட ஆண் - பார்ப்பன பெண் - அறிவு: உண்மையிலேயே மதிமாறனின்... [மேலும்..»]

கம்பன் பாடிய குறள்

July 22, 2011
By

இந்த சிறிய பிரசங்கத்தையும் கவித்துவம் மிளிரும் அழகிய பாடல்களில் கம்பன் விவரிக்கிறான்.. ஆலமரம் முழுவதையும் தன் உள்ளே அடக்கிய விதை போல, நெடியோனாகிய திருமால் வாமனனாக அவதரித்தான்.. குள்ளனான வாமனன் ஓங்கி உயர்ந்து நின்றதற்கு அபாரமான ஒரு உவமை சொல்கிறார், உயர்ந்தவர்க்கு உதவிய உதவி போல... மண்ணில் நின்று உலகம் அளந்தது வாமனக் குறள். வானிலும் மண்ணிலும் நின்று உலகம் அளந்தது வள்ளுவர் குறள்.. அன்று தன் நெடுமையால் மாயன் அளந்த உலகை எல்லாம், தன் மனத்தில் நினைந்து செய்யும் கொடுமையாள் அளந்தவள் இவள்... [மேலும்..»]

Josh Oliver Authentic Jersey