Posts Tagged ‘ திருவாசகம் ’

கோயில்கள், சைவம், புத்தகம், வரலாறு, விவாதம்

‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 2

‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 2

மாணிக்கவாசகர் வாழ்க்கை வரலாற்று ஆராய்ச்சி என்ற போர்வையில் திருப்பெருந்துறை கோயிலை சிவாலயமன்று என்று நிறுவமுயன்று, அதற்கு அறிவார்ந்த சான்றுகள் எதுவும் கிடைக்காமல் போக, கருவறையில் லிங்க பணமில்லை, அம்பிகையின் சந்நிதியில் திருமேனியில்லை, கல்வெட்டில்லை, நந்தியில்லை, கொடிமரமில்லை, கோணங்கியில்லை, என் தகப்பன் குதிருக்குளில்லை என்பது வரை பேசி, அது சமணச்சார்புடைய கோயில் என்று கொண்டு நிறுத்தி, அதற்கும் அடங்காமல் ஆதாரமுமில்லாமல், ஏதோ ஒரு க்ராமக்கோயில் கல்வெட்டை கோடிட்டு காட்டி, பீடம், இந்திரன், சாத்தன், திருமால், குதிரை, கொட்டடி, கொள்ளுக் கடையென்று கொட்டமடித்து விளையாடியுள்ளார். என்ன விதமான ஆராய்ச்சி இது? இதற்கு சைவசித்தாந்தப் பெருமன்றமும் துணைபோயுள்ளது. இனிவரும் ஆண்டுகளில் இது... [மேலும்..»]

கோயில்கள், சைவம், புத்தகம், வரலாறு, விவாதம்

‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 1

‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 1

சென்னை சைவ சித்தாந்த பெருமன்றத்தால் வெளிக்கொண்டுவரப்பட்ட நூலொன்று "திருவாசகம் அருளிய மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்" என்பது. சென்னையை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளரும், தமிழக தொல்லியல்துறையில் பணியாற்றியவருமான முனைவர்.ஆ.பத்மாவதி அவர்களால் எழுதப்பட்டது... இரண்டு கேள்விகள் இயல்பாகவே நம்முள் எழுகின்றன. ஒன்று, மாணிக்கவாசகர் எடுப்பித்த கோயில் உண்மையில் எது? இரண்டு, இன்று இருக்கும் ஸ்ரீ ஆத்மநாதசுவாமி திருக்கோயிலின் தோற்றம், வளர்ச்சி என்பதை எப்படி அறியவேண்டும்? இதில் முன்னதற்கு விடையாக இரண்டாம் கட்டுரையும், பின்னதற்கு விவகாரமாக முதல் கட்டுரையின் இரண்டாம் பகுதியும் அமைந்துள்ளது. இந்த இரண்டாம் கட்டுரையில் தான் ஆராய்ச்சியாளர் பல சூக்ஷும முடிச்சிகளை அவிழ்ப்பதாக எண்ணி, சைவ அடியார்கள் தம்... [மேலும்..»]

அறிவியல், ஆன்மிகம், இந்து மத மேன்மை, இலக்கியம், சைவம், தத்துவம், வழிகாட்டிகள்

மாணிக்கவாசகரின் பக்தியும், விஞ்ஞான அறிவும்

மாணிக்கவாசகரின் பக்தியும், விஞ்ஞான அறிவும்

பள்ளிகளில் கற்பிக்கப்படும் ‘பரிணாம வளர்ச்சிக் கொள்கை ’ சார்லஸ் டார்வினால் உருவாக்கப்பட்டது என்றே மாணவருக்குச் சொல்லித்தரப்படுகிறது.  இக்கொள்கை டார்வினுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மாணிக்கவாசகரால் சிவபுராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை அறிந்தால் நமக்கு வியப்பாகத்தான் இருக்கும். பரம்பொருளான சிவனோ அண்டத்திலிருக்கும் அனைத்தையும்விடப் பெரியவன் என்று சிவபெருமானின் பெருமையை நமக்கு எடுத்து இயம்பும்போது தனது வானவியல் அறிவையும் அழகாக எடுத்துணர்த்துகிறார். [மேலும்..»]

இந்து மத மேன்மை, சமூகம், வழிகாட்டிகள்

பறையர், இந்துத்துவம், தீண்டாமை: சில குறிப்புகள்

பறையர், இந்துத்துவம், தீண்டாமை: சில குறிப்புகள்

பறையொலி கீழானதென்றும் பறை இசைப்போர் கீழானவரென்றும் கருதும் சமுதாயமாக நாம் இருந்திருப்பின் பறை இசை கலைஞர் இப்படி கம்பீரமாக இறை வடிவங்களுக்கொப்ப கோவில் மண்டபத் தூண் சிற்பத்தில் ஏன் காட்டப்பட வேண்டும்?... சுசீந்திரத்தில் கோவில் நுழைவு போராட்டம் நடந்த போது ஒரு தலைமுறைக்கு முன்னால் பட்டியல் சமுதாய மக்கள் அங்கு அனுமதிக்கப்படவில்லை. அதற்காக பெரும் போராட்டம் நடத்தப்பட வேண்டியிருந்தது. ஆனால் இன்று அதே கோவில் தெருவில் உள்ள திருவாவடுதுறை மடத்தில் வைத்து பாபா சாகேப் அம்பேத்கரின் பரிநிர்வாண நாள் குறித்த உரை நடைபெறுகிறது.... [மேலும்..»]

ஆன்மிகம், இந்து மத மேன்மை, இந்து மத விளக்கங்கள், சைவம், வழிகாட்டிகள்

உயிருண்ணி

உயிருண்ணி

சீவனைச் சிவன் விழுங்கிவிடுகின்றான். பின் சீவன் இருந்த இடத்தில் சிவனே இருக்கின்றான். இந்நிலையை ‘ஏகனாகி’ எனச் சிவஞானபோதம் கூறுகின்றது... விடைப்பாகனாகிய உமைபாகமதாயுடைய பெருமான், தம்முடைய உடம்பை என்றும் பிரியாதவனாகித் தம்முடைய வினைகளுக்குக் கேடுசெய்வதால், இனி தாம் எந்நாளும் களித்து, எந்நாளும் இறுமாந்திருப்பேன் என்று மகிழ்கின்றார் மாணிக்கவாசகர். பெற்ற இன்பமெல்லாம் சீவபோதத்தால் கிட்டுவன, சீவபோதம் முற்றும்நீங்கிச் சிவபோதமே மேலோங்கிநிற்கும் இந்நிலையில் சிவானந்தம் எத்தகையது என்றும் கூறமுடியவில்லை, இவ்வின்பம் என்னால் தாங்கவியலாப் பேரின்பம் என அப்பேரின்பப்  பெருக்கின் மாண்பினைக் கூறுகின்றார்.... [மேலும்..»]

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், சமூகம்

‘பறையர் என்பது சாதியல்ல! அது ஈசன் மரபு’

‘பறையர் என்பது சாதியல்ல! அது ஈசன் மரபு’

ஏதோ வழக்கமான சாதி பெருமை பேசுகிற ஒன்று என்பதைத் தாண்டிஅந்த ஃப்ளெக்ஸ் விளம்பரப் பலகையில் வேறு எதுவும் படவில்லை. ஆனால் அந்த வார்த்தைகள் ஏதோ கிளறின.... எனவே பறையர் எனும் பெயரே சந்திர சேகரராக விளங்கும் சிவனைக் குறிப்பதாக இருக்கலாம். அல்லது சந்திரசேகரராக சிவன் அளிக்கும் பரையோக, பரை போக, பரை அதீத நிலையில் நிலைப் பெற்றிருப்பவர், அத்தகைய ஞானிகள் கொண்ட குலத்தில் பிறந்தவர் என்பதைக் குறிப்பதாக இருக்கலாம்... இப்பெயர் இழிவானதென நினைக்கும் போக்கு பிரிட்டிஷ் காலத்தில் உருவானது. ஆன்மிகத் தத்துவத்தை உள்ளடக்கிய ஒரு பெயரை ஒரு சிலர் ‘தாழ்த்தப்பட்ட’ பெயர் என கருதுவது... [மேலும்..»]

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், உடல்நலம், சமூகம்

அனைத்துயிரும் ஆகி… – யோகாசனங்களின் உணர்வு நிலைகள்

June 21, 2016
-
அனைத்துயிரும் ஆகி… – யோகாசனங்களின் உணர்வு நிலைகள்

ஆசனங்கள் வெளி உறுப்புக்களையும், தசைகளையும் மட்டுமல்ல, உடலின் பல உள் உறுப்புக்களையும், நாடி நரம்புகளையும் உறுதியாக்குகின்றன. பல யோகாசனங்கள் பார்ப்பதற்குக் கடினமாகத் தோன்றினாலும், பயிற்சி செய்பவர்களுக்கு இவை மிக இயல்பானதாகவே தெரியும். பயிற்சி இதற்குக் காரணம் என்றாலும், யோக ஆசனங்களின் தன்மையே அப்படிப் பட்டதாயிருக்கிறது.... மனித உடலின் இயக்கம் பற்றிய ஆழ்ந்த நுண்ணறிவு பெற்றிருந்தனர் பண்டைக் கால யோகிகள். காட்டில் விலங்குகள், பறவைகள் இவற்றின் வாழ்வைக் கூர்ந்து கவனித்த அவர்கள் அவை எப்போது அமைதியடைகின்றன, ஆக்ரோஷம் கொள்கின்றன இவற்றையெல்லாம் ஆராய்ந்து பல ஆசனங்களை உருவாக்கியிருக்கலாம் என்று ஒரு கருத்து உள்ளது... அசையாப் பொருள்கள் மற்றும் விலங்குகள், பறவைகள்... [மேலும்..»]

இலக்கியம், சைவம், விவாதம்

சங்க இலக்கியமும் சைவர்களும் – 2

சங்க இலக்கியமும்  சைவர்களும் – 2

சங்க இலக்கியங்களில் உலகு ,உயிர், வினை, ஊழ் , இறை முதலிய தத்துவப் பொருள்களின் சிந்தனை வளர்ச்சியே சைவ சித்தாந்தம் என மேம்போக்காகப் படிப்பவர்க்கும் விளங்கும்.. எல்லாப்பிறப்பும் என்றது எண்பத்து நான்கு இலட்சம் யோனி பேதங்களில் உள்ள ஒவ்வொரு யோனியின் எண்ணற்ற பிரிவுகளிலும். ஆதலின், அதனை யுணர்ந்த அடிகள் “பிறந்திளைத்தேன்” என்றார். அடிகள் வருந்துதற்குக் காரணமான இந்த எண்பத்து நான்குநூறாயிரம் யோனி பேதப் பிறப்பும் அவற்றின் பிரிவுகளும் ஓரிடத்தில் ஒருகாலத்தில் ஒருபருவத்தில் தோன்றுவன அல்ல. ஆகவே, நித்தமாய் என்ணிக்கையற்றவையாய் உள்ள உயிர்களில் ஒன்று எண்ணற்ற பிறவி எடுக்கும்போது ஏதோ ஒரு பிறவியில் உலகின் ஏதோ ஒரு... [மேலும்..»]

ஆன்மிகம், இலக்கியம், சைவம், வழிகாட்டிகள்

மாணிக்கவாசகர் : மொழி எல்லைகள் கடந்த ஆன்மநேய ஒருமைப்பாடு

மாணிக்கவாசகர் : மொழி எல்லைகள் கடந்த ஆன்மநேய ஒருமைப்பாடு

குருதேவர் சொன்னார் ‘ஆத்ம சாதனத்துக்கு தாயுமானவர் பாடல்கள் பெரிது. பொருள் விளக்கத்துக்கு திருவாசகம். ஒரு முனிவரே வந்து பிரம்மதத்துவத்தை தமிழில் சொன்னது திருவாசகம். ’ ஸ்ரீ நாராயண குருதேவர் இதை சொன்னது சுவாமி சித்பவானந்தர் மனதில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 1928-29 இல் இந்த மகான்களின் சந்திப்பு நிகழ்ந்தது. 1960 இல் சுவாமி சித்பவானந்தரின் ‘திருவாசகம்’ விளக்க உரை நூல் வெளியானது... மாணிக்கவாசக சுவாமிகளின் திருவாசகம் காலம் மொழி எல்லைகளை கடந்து அந்த ஆன்மநேய ஒற்றுமையை நம் தேசத்திலே வெளிக்காட்டியது... [மேலும்..»]

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், தத்துவம்

[பாகம் 24] அழுதால் அடையலாம்: சித்பவானந்தர்

December 21, 2012
-
[பாகம் 24] அழுதால் அடையலாம்: சித்பவானந்தர்

ருத்ரன் என்பதன் பொருள் “அழச்செய்பவன்” என்பதாகும். உயிர்களை அழச் செய்வதன் மூலம் அவைகளைப் பண்பாடுறச் செய்வது ருத்ரனின் ஒப்பற்ற செயலாகிறது. உலகத்தவர் அழுகின்ற அழுகையின் உட்பொருளை ஆராய்ந்து பார்த்தால் அது துன்பத்தினை தவிர்த்து இன்பத்தினை நாடுவதாகவே இருப்பதைக் காணலாம்.... அழிந்து போகும் உலகப் பொருட்களை நாடி ஓடும் மனிதன் ஒருக்காலும் நிலைத்த இன்பத்தினைப் பெறமாட்டான். அதற்கு மாறாக அவன் மேலும் மேலும் துன்பத்தில் அகப்பட்டுப் பிறவிப் பெருங்கடலினூடே தத்தளிக்க வேண்டியதுதான்... யானே பொய், என் நெஞ்சும் பொய், என் அன்பும் பொய் - ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே... [மேலும்..»]