Posts Tagged ‘ திருவையாறு ’

தேவிக்குந்த நவராத்திரி — 1

வழக்கமான புலித்தோலும், பாம்பணிகளும் இல்லாமல், மல்லிகை மலர்மாலைகளும் வாசனைத்திரவியங்களும் அணிந்து பேரழகனாகக் காட்சியளிக்கிறார் எம்பெருமான். தேவாதிதேவன் பல்லக்கில் பவனிவருவதனால் வேதவிற்பன்னர்கள் வேதம், ருத்ரம் முதலியனவற்றை ஓதுகின்றனர்; பூ, பழம் ஆகிய நைவேத்தியங்கள் அடியார்களால் படைக்கப்படுகின்றன. ஆனால், ஈசனின் கவனம் இவை ஒன்றிலுமே இல்லை. அவர் வேறெதிலோ கருத்தைச் செலுத்தியபடி எங்கோ நோக்கியுள்ளார். ஏன் என்னஆயிற்றாம்? யாரும் இதை உணரவில்லை. கூட்டத்தில் ஒருவரே உணர்ந்து கொண்டார். 'எம்பிரான் உள்ளம் அழகின் சிகரமான தன் மனையாள் பார்வதியிடம் சென்றுவிட்டது. அவளைச் சந்தித்து ஆசையுடன் அளவளாவும் ஆவலில் ஐயன் விரைந்து கொண்டிருக்கிறார்' என்கிறார் அந்த அடியார்... [மேலும்..»]

தியாகராஜரின் ஆன்மீகமும், இசையும்

September 15, 2016
By

தியாகராஜருக்கு ராமன் இஷ்ட தெய்வமானான். வால்மீகி ராமாயணம் நெருங்கிய துணையானது. ராமன் எப்போதும் அவருடன் வாழ்வதுபோலான எண்ணம் இருந்ததால் சகமனிதனோடு பேசுவதுபோன்ற பாவனையில், தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றும் நண்பனைப்போலவே அவர் ராமனைப் பார்த்தார். அதனால்தான் வருத்தம், கெஞ்சல், கேள்வி, நிதானம் என்று பலதொனிகளில் தன்னை அவரால் கீர்த்தனைகளில் வெளிப்படுத்திக்கொள்ளமுடிந்தது... "வெறும் உடல்பலத்தால் என்னபயன்? உன் சிறந்த பரம்பரையால் என்ன பயன்? சாவிற்குப் பிறகும் தொடர்வது புண்ணியம்தான் - காக்கை தண்ணீரில் நின்றால் அது புனிதக் குளியலாகுமா? கொக்கு கண்ணை மூடிக்கொண்டு நின்றால் அது தியானமா? ஆடு புல்தின்றால் அது உபவாசமா? வஞ்சகர்கள் குகையில் ஒளிந்து கொண்டால் முனிவராவார்களா?..."... [மேலும்..»]

எப்படிப் பாடினரோ – 2: தியாகராஜர்

எத்தனை முயன்று நீந்திப் பார்த்தாலும் ஆழம் காண முடியாத பெரும் சங்கீத சாஹித்யக் கடல் தியாகராஜருடையது. இதில் மூழ்கி ஒரு சில அபூர்வமான முத்துக்களை எடுத்துப் பார்த்து, கேட்டு மகிழலாமே... தியாகராஜர் எல்லாப் பாடல்களிலும், அவற்றின் வரிகளினூடே ஒரு தத்துவத்தை, ராம காதையிலிருந்து தாம் ஆழ்ந்து அனுபவித்த ஏதேனும் ஒரு செய்தியை அல்லது ரசத்தை கோடியிட்டுக் காட்டியிருப்பார்... “உனக்கு வெட்கம் இல்லையா, உன் தனயனான என்னிடம் அபிமானமும் இல்லையோ?” என்று ஒரு பாடலில் உரிமையுடன் ராமனைக் கேட்கிறார்...ஆடமோடி கலதா என்ற பாடலில், கற்க வேண்டியது அனைத்தையும் கற்றறிந்த, சங்கரனுடைய அம்சமான அனுமனிடம் கூட (முதல் சந்திப்பில்)... [மேலும்..»]

குருவுக்கு கோவில் எழுப்பிய மாதரசி

ஸ்ரீ தியாகராஜரின் பெருமையையும், அவருக்கு நடக்கும் ஆராதனை பற்றியும் அறிந்து கொண்ட அளவுக்கு தியாகராஜ பணியில் ஈடுபட்டுத் தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும் தியாகம் செய்த இந்த மாதரசி பற்றியும் சிறிது தெரிந்து கொள்ளலாமே! [மேலும்..»]

ஒரு பயணம் சில கோயில்கள்

வழியில் கிடைத்த எல்லா கோயிலுக்குள்ளேயும் நுழைந்தேன். பல முறை பார்த்த கோயில்கள், பார்க்க நினைத்த கோயில்கள் என எதையும் விட்டு வைக்க வில்லை. எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் நுழைந்தேன்... சோழ பெருவளத்தான் கரிகாலன் தேரில் சென்று கொண்டிருந்தபோது தேர் திருவையாற்றிலிருந்து நகரவில்லை. தேர் அசையாதிருக்கும் இடத்தில் அகழ்ந்தெடுக்கக் காவலாளிகளை ஏவுகிறான். இங்கே முதலில் தட்டுப்படுவது சிவலிங்கம்.. ராம பக்தியை நாம சங்கீர்த்தனங்கள் மூலம் பரப்பியவர். இவரது சமாதியில் ஆழ்ந்த மௌனத்தில் ராம நாமத்தை இன்றும் பலர் கேட்கின்றனர்... [மேலும்..»]