Posts Tagged ‘ திரைப்படம் ’

பேட்ட திரைப்பட அரசியலும் ரஜினியும் – 2

ரஜினி விஷயத்தில் அவர் இந்திய தேசிய நலனை முன்னெடுப்பார் என்று நம்ப எந்த முகாந்தரமும் இல்லை. கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே இந்து விரோதிகளின் கைப்பாவையாகிவிட்டிருக்கிறார். அவருடைய சமீபத்திய திரைப்படங்கள் அதையே காட்டுகின்றன. இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, தமிழகத்தை காப்பாற்றுவதற்கு முன் ரஜினியைக் காப்பாற்றவேண்டும் என்றுதான் தோன்றுகிறது... மக்கள் இந்து மனநிலையுடனும் இந்திய தேசிய மனநிலையுடனும் வளர்ச்சி தொடர்பான எதிர்பார்ப்புகளுடனும் தான் இருக்கிறார்கள். மக்களுடைய அந்த உணர்வுக்குக் குரல் கொடுக்க எந்த தமிழக கட்சியும் முன்வருவதில்லை. ரஜினிகாந்த் தனது பிரபல்யத்தைப் பயன்படுத்தி அந்தக் குரலை முன்னெடுக்கவேண்டும். வெற்றி தோல்வி பற்றி சிந்தித்து காய் நகர்த்த வேண்டிய விஷயம் அல்ல... [மேலும்..»]

பேட்ட திரைப்பட அரசியலும் ரஜினியும் – 1

ரஜினியின் அடையாளங்கள் என்னென்ன... தேசியவாதி, தெய்வ பக்தி மிகுந்தவர், மத நல்லிணக்க குணம்கொண்டவர், தீமைகள் குறைவான ஆணாதிக்க மனோபாவம், ஏழை எளியவர்களின் காப்பாளர்.. இவையெல்லாம் கபாலிக்கு முன்... இந்து விரோதம் என்பது புதிய விஷயம் ஒன்றுமல்ல. பராசக்தி காலம் தொடங்கி நடந்துவரும் அசட்டு, அபாயகரமான விஷயம் தான். ஆனால், இப்போது இந்து விரோத படங்களின் பெருக்கமானது முந்தைய இரண்டு காலகட்டத்தைவிடக் கூடுதல் கவனத்துடன் பார்க்கப்படவேண்டியது. ஏனென்றால், அது இதுவரை எப்போதும் இருந்திராத இந்திய விரோதம் என்ற விஷத்தையும் நுட்பமாக உள்ளே கொண்டிருக்கிறது... [மேலும்..»]

விஸ்வரூபம் 2: திரைப்பார்வை

50 வயதுக்கு மேல் ஒருவன் தன் காதல் அனுபவங்களை நினைத்து நினைத்துத் தனக்குத் தானே சிரித்துக் கொள்வது போல அமைந்திருக்கிறது இத் திரைப்படம். கமல் சம்மந்தம் சம்மந்தம் இல்லாமல் என்னவெல்லாமோ வசனம் பேசுகிறார். படத்தின் முதல் காட்சியில் தன் அரசியலுக்கு விளம்பரம் செய்து கொள்கிறார். இதனால் படத்தில் வரும் காட்சிகள் அரசியலுக்கு உள்ளதா அல்லது படத்துக்கு உரியதா என்பதில் குழப்பம் ஏற்படுகிறது. 64 குண்டுகள் என்கிறார். 64 வருடம் கொள்ளை என்று பிராமணரைப் பார்த்துச் சொல்கிறார். நொடிக்கு நொடியில் முஸ்லிம் - பிராமண - காங்கிரஸ் அரசியல் என்று மாறும்போது நமக்குத் தலை சுற்றுகிறது.. கமலுக்கும் மனைவிக்குமான... [மேலும்..»]

காலா: திரைப்பார்வை

ஒரு கொண்டாட்டமான திரைப்படத்தை மட்டும் அணுகும் நோக்கில் இனி ரஜினியின் படங்களை அணுகமுடியாது. அத்திரைப்படத்தை எடுப்பவர்கள் யார், அவர்களது அரசியல் என்ன என்பதைக்கொண்டே தீர்மானிக்கமுடியும்... மிகத் தெளிவாக தமிழர்களை, ராவணனை ஹிந்துக்களுக்கு எதிரானவர்கள் என்று காட்டுகிறார்கள். அதற்கான காரணமாக ராமனைக் கெட்டவனாகச் சித்திரிக்கிறார்கள். இந்த அரசியலுக்கு அப்படியே தன்னை ஒப்புக்கொடுத்திருக்கிறார் ரஜினி. ஆனால் இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ரஜினி என்றுமே திரைப்படத்தில் எடுப்பார் கைப்பிள்ளைதான்...இப்படத்தில் ரஜினி காவல்துறையை அடிக்கிறார். கொல்லுகிறார். கொல்லத் துணை நிற்கிறார். புரட்சிக்குத் துணை போகிறார். ஒட்டுமொத்த அரசுக்கு எதிரான போராட்டங்களை ஆதரிக்கிறார். ஆனால் நிஜத்தில் ரஜினி இவை அத்தனையும் மறுத்தார்... [மேலும்..»]

தென்புலத்தார் திரும்பிவரும் நாளில் – கோகோ (Coco) திரைப்படம்

எள்ளுப்பாட்டனார் எர்னெஸ்டோவின் நினைவிடத்தில் நுழைந்து அவர் சமாதி அறையில் மாட்டி வைத்திருக்கும் கிடாரை உருவி எடுக்கையில் தடுமாறி விழுகிறான் மிகைல். அந்தக் கணத்தில் தென்புலத்தார் உலகம் திறந்து வழிவிட, யார் கண்களுக்கும் தென்படாமல், யாதும் சுவடுபடாமல் அவ்வுலகில் நுழைகிறான்.. டிஸ்னி படங்களில் நாம் கண்டுவந்த பாகன்மார் கதைகளை, அவர்தம் ஆதார நமபிக்கைகளை, தொன்மங்களை, கோகோ (Coco) என்ற இந்த ஆண்டின் ஆஸ்கார் விருது வென்றிருக்கும் திரைப்படம் மிக வெளிப்படையாகவே சித்தரித்திருக்கிறது. சாதலை எண்ணி அஞ்ச வேண்டியதில்லை என்பது இந்தப்படத்தின் முக்கியச் செய்தி... [மேலும்..»]

ராமானுஜாசாரியார்: ஒரு தமிழ்த் திரைப்படம்

March 27, 2015
By

கயமையின், போலித் தனத்தின் திருவுருவாக இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் மு.கருணாநிதி என்ற கிழவர் திரைக்கதை எழுதி, குட்டி பத்மினி போன்ற ஜோக்கர்களின் இயக்கத்தில் ஸ்ரீ ராமானுஜரைப் பற்றிய ஒரு தொலைக்காட்சித் தொடர் வருகிறது என்பது தமிழ் நாட்டின் சாபக் கேடு... 1989ல் ராமானுஜாசாரியார் என்ற தமிழ்த் திரைப்படம் ஏற்கனவே வெளிவந்திருக்கிறது. தூர்தர்ஷனில் இந்தப் படத்தை அப்போதே நான் பார்த்திருக்கிறேன். சம்ஸ்கிருதத்தில் ஆதி சங்கராசார்யா மற்றும் இன்னும் சில விருது பெற்ற திரைப்படங்களை இயக்கிய புகழ்பெற்ற கலைப்பட இயக்குனர் ஜி.வி.ஐயர் இந்தப் படத்தின் இயக்குனர்... [மேலும்..»]

மனம் திறந்து எழுதும் ஒரு கலைஞன் – தமிழ்த் திரைஉலகில்

இது நான் சென்னை வந்த புதிதில் நடந்த சங்கதி. இடையில் அவர் தமிழ்த் திரைப்பட ஒளிப் பதிவாளராக ஆகியிருந்தார் என்று நினைக்கிறேன்.... செழியன் தமிழ்த் திரையுலக யதார்த்தத்தையும் அதன் டாம்பீகத்தையும் வெறுமையையும் மிக நன்குணர்ந்தவராகவே எழுதியிருக்கிறார். இதையெல்லாம் எப்படி இவர் தமிழ்த் திரையுலகில் இருந்து கொண்டே எழுத முடிகிறது?.... எங்கு தொழில் நுட்பம் சொல்லப்படும், காட்சியாக்கப் படும் பொருளில் தன்னை மறைத்துக் கொள்ள வில்லையோ அந்த தொழில் நுட்பம் வெறும் ஜிகினா வேலை தான்... செழியன் ஒரு கலைஞன் கலை உணர்வு கொண்டவர். அதற்கு இப்புத்தகத்தின் பெரும் பகுதி சாட்சி. இப்புத்தகம்... [மேலும்..»]

அடிபணிதல்

October 17, 2013
By

அடிபணிதல் (Submission) என்ற திரைப்படம் பற்றிய பதிவு இது. டச்சுத் தொலைக் காட்சியில் வெளியிடப் பட்டு பலராலும் பாராட்டப்பட்டு, அதே சமயம் இஸ்லாமியத் தீவிரவாதிகளிடமிருந்து பலத்த எதிர்ப்பும் இத்திரைப்படத்திற்கு உண்டானது. அயான் ஹிர்ஸி அலியும், இயக்குனர் தியோடர் வான்-கோவும் இணைந்து எடுத்த படம். வான்-கோ 2004-ஆம் வருடம் நவம்பர் 24-ஆம் தேதி காலை 9 மணிக்கு ஆம்ஸ்டர்டாம் நகரத் தெருவில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, ஒரு இஸ்லாமியத் தீவிரவாதியால் ஏழு முறை சுடப்பட்டு, பின் பலமுறை கத்தியால் குத்தப்பட்டுக் கொல்லப்பட்டார். பின்னர் கொலையாளியால் வான்-கோவின் உடலில் சொருகப்பட்ட கத்தியில், அயான் ஹிர்ஸி அலியையும் கொல்லப்போவதாக விட்டுச்... [மேலும்..»]

’பரதேசி’ திரைப்படம்: ஒரு பார்வை

March 20, 2013
By

அடிப்படையில் இது சபிக்கப் பட்ட மானுடர்களின் வலியைப் பேசும் திரைப்படம். பசியின் வலி. அடக்கு முறையின் வலி. வேர் பிடுங்கப் பட்டு ஊரைத் துறந்து பிழைப்பு தேடச் செல்வதன் வலி. அடிமைத் தனத்தின் ஊமை வலி.. டாக்டரும் வெள்ளைக்கார மனைவியும் ஏசு பாட்டுக்கு குத்துப்பாட்டு நடனம் ஆடுகிறார்கள். ரொட்டிகளை வீசியெறிகிறார்கள். தொழிலாளர்கள் முண்டியத்துக் கொண்டு அவற்றைப் பொறுக்குகிறார்கள்... கொள்ளை நோய்களின் போது கிறிஸ்தவ பாதிரிகள் – டாக்டர்கள் கூட்டணி எப்படி நடந்து கொண்டது என்பது பற்றி அவர்களே எழுதி வைத்த பல பிரிட்டிஷ் காலகட்டத்திய குறிப்புகள் உள்ளன.... [மேலும்..»]

துப்பாக்கி – திரை விமர்சனம்

ஸ்லீப்பர் செல்களைப்பற்றி முதலில் தமிழில் பேச முனையும் திரைப்படம் என்ற அளவிலும் இது முக்கியத்துவம் பெறுகிறது. அது என்ன ஸ்லீப்பர் செல் என்றால் இது தீவிரவாதத்தின் நவீன முகம். முதலில் எல்லாம் தீவிரவாதிகள் பாகிஸ்தானிலிருந்தும், ஆஃப்கானிஸ் தானிலிருந்தும், சீனா போன்ற தேசங்களில் இருந்து வந்து கொண்டிருந்தார்கள் . ஆனால் அவை செலவு அதிகம் பிடிக்கும். அதற்காக பயங்கரவாதிகள் கண்டுபிடித்த வழிமுறை தான் இந்த ஸ்லீப்பர் செல்கள். மேலும் ஸ்லீப்பர் செல்களை உபயோகித்து படுபாதக கொலைக்குற்றங்களை அரங்கேற்றுவதன் மூலம் குற்ற வாளிகளை நெருங்குவதும் மிகவும் கடினமான வேலையாக மாறுகிறது. Who is the king pin என்பதை கண்டறிவது... [மேலும்..»]

Josh Oliver Authentic Jersey