Posts Tagged ‘ தீட்டு ’

சுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 3

அந்த ஆரம்ப சுகாதார மையத்தின் திறப்பு விழாவுக்கு சுவாமி அம்பேத்கரை அழைக்காமல் எம்.எல்.ஏ.வே வந்து திறந்துவைக்க முடிவெடுக்கிறார். ஆனால், திறப்பு விழா அன்று ஒட்டு மொத்த கிராமமும் எம்.எல்.ஏ.வை எதிர்த்து நிற்கிறது. சுவாமி அம்பேத்கர்தான் வந்து திறக்கவேண்டும் என்று குரல் எழுப்புகிறார்கள். எம்.எல்.ஏ. அதற்கு மறுப்பு தெரிவித்ததும் ஒட்டு மொத்த கிராமத்தினரும் அந்த விழாவைப் புறக்கணிக்கின்றனர். எம்.எல்.ஏ.வுக்கு பெருத்த அவமானமாகப் போகிறது... கோவிலில் கருவறைக்குள் சென்று வழிபடவேண்டும் என்று விரும்புபவர்கள் முன்கூட்டியே தமது பெயரை பதிவு செய்துகொள்ளவேண்டும். அவர்களுக்கு அனுமதி கிடைக்கும் நாளில் காலையில் கோவிலுக்கு வந்து கோவில் குளத்தில் குளித்து சிறிய யாகம் செய்து சமஷ்டி... [மேலும்..»]

சுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 2

ஆற்று நீரைக் குடித்துவிட்டுப் படுத்துக் கிடக்கும் நந்தனாரை ஒரு விவசாயி தனது வீட்டுக்கு வந்து உணவருந்தும்படி அழைக்கிறார். "அது சரிதான். ஆனா ஒரு மனுஷனை நேசிக்க எதுவுமே தடையா இருக்கக்கூடாது... இப்போ நான் ஒரு பறையனா இருந்தா என்ன செய்வீங்க"...பரிமாறுபவர் சட்டென்று நிறுத்திவிட்டு, "எழுந்திரிச்சு வெளிய போடான்னு சொல்லுவேன்". பரதேசிக்குத் தூக்கிவாரிப்போடுகிறது... "உங்களுக்குத் தனிச் சுடுகாடு, அவங்களுக்குத் தனி சர்ச்சுன்னு எத்தனை இடத்துல இருக்கு. உங்க அனுபவமே இருக்குமே. உங்களை உங்க சபையில எப்படி நடத்தறாங்க?" தலித் பாதிரியார் கொஞ்சம் மென்று முழுங்குகிறார். "தப்புச் செய்யற குழந்தைகளை தாய் மன்னிச்சு ஏத்துக்க எப்பவுமே தயாரா இருப்பா... அது... [மேலும்..»]

சுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 1

இருளுக்குப் பழகிய கண்களும் நாற்றத்துக்குப் பழகிய நாசிகளும் கொண்டவர்கள் தத்தமது வளைகளுக்குள் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தனர். ஒளிக்கு ஏங்கிய கண்களும் தூய காற்றுக்கு ஏங்கிய நாசியும் கொண்ட நந்தன் ஊரைவிட உயரமாக, ஊரிலிருந்து சற்றே தொலைவில் இருந்த மலைக் கோவிலில் இருந்து தெரிந்த மெல்லிய பொன்னிற ஒளிப் புள்ளியை பார்த்தபடி நடக்கத் தொடங்கினான்... ஆச்சி வெளியே வந்து அரிசியைக் கொடுக்க முற்படுகிறார். நந்தனார் ஏந்திய திருவோட்டை மூடியபடியே, இன்று நான் பட்டினி கிடக்கவேண்டும் என்பது உங்கள் மருமகளின் விருப்பம் போலிருக்கிறது என்று சொல்லிச் சிரித்தபடியே வந்த வழியே திரும்புகிறார். ஆச்சி பின்னால் ஓடி வந்தபடியே கெஞ்சுகிறார். சாமி... [மேலும்..»]