Posts Tagged ‘ தீபாவளி ’

தீபாவளியில் பட்டாசு வெடித்தல் எனும் நெடுங்கால மரபு – பண்டைய நூல்கள் கூறுவது என்ன?

தீபாவளி பண்டிகையில் பட்டாசுகள் எப்போது வந்தன? இது ஒன்றும் புதிய பழக்கமல்ல. தீபாவளி பண்டிகையின் மிக புராதனமான அம்சம் இது. மகாளய பட்சத்தில் பூவுலகிற்கு வந்த முன்னோர்கள் திரும்பிச் செல்லும் காலம் தீபாவளி. அவர்கள் தங்கள் லோகத்திற்குத் திரும்பச் செல்லும் வழியினை ஒளிமயமாக்கத்தான் உயர்ந்த கம்பங்களில் தீப்பந்தங்கள் பண்டைய காலத்தில் ஏற்றப்பட்டன. ஆகாயத்தில் வாணவேடிக்கைகளும் கூட இதற்காகத்தான் தீபாவளி சந்தர்பத்தில் ஏற்படுத்தப்பட்டன. பண்டைய நூல்களில் இதற்கு "உல்கா தானம்" என்று பெயர்.. விஜயநகர சாம்ராஜ்யத்திலும் (பொ.யு. 1336 முதல்) , மொகலாயர்களின் காலகட்டத்திலும், மராட்டிய பேஷ்வாக்கள் ஆட்சியிலும் கூட மகாநவமியினை தொடர்ந்து வாணவேடிக்கைகள் விசேஷமாக செய்யப்பட்டன.... [மேலும்..»]

பாதுகாப்பான தீபாவளியே ஆனந்தமான தீபாவளி !

ஒரு பட்டாசினை பற்றவைக்கும்போது கை மற்றும் உடம்பின் எந்த பாகமும் பட்டாசின் அருகில் இருப்பது நல்லது அல்ல. ஒரு பட்டாசினை நீங்கள் பற்ற வைக்கும்போது உங்கள் கண்ணை கவசமாக பாதுகாக்கும்விதமாக பாதுகாப்புக் கண்ணாடி அணிந்து கொள்வது நல்லது... எதிர்பாராதவிதமாக பட்டாசினால் நெருப்புக் காயம் பட்டுவிட்டால் உடனடியாக காயம் பட்ட இடத்தை தண்ணீரில் நனைக்க வேண்டும். தீக்காயம் பட்ட இடம் எரிச்சல் அடங்கிக் குளிரும். முகத்தில் காயம் ஏற்பட்டு கண்ணிலும் காயம் ஏற்பட்டுவிட்டால், முகத்தையும் கண்ணையும் தண்ணீர் விட்டு கழுவவே கூடாது.சுத்தமான துணியைக் கொண்டு முகத்தை லேசாக மூடி உடனடியாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்.... [மேலும்..»]

தீபாவளிப் பட்டாசுக்கு எதிரான பிரசாரங்கள்: ஒரு பதிலடி

பட்டாசு வெடிப்பதால் சுற்றுப்புறச் சூழல் நிச்சயம் மாசடைந்து போய்விடாது. ஊர் முழுக்க திரியும் கார்களால், லாரிகளால், குப்பைகளால் வராத மாசு, ஒரே ஒரு நாள் பட்டாசு வெடிப்பதால் வந்துவிடாது. பட்டாசு வெடிக்கவேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்யவேண்டியது ஹிந்து மத எதிரிகள் அல்ல. ஹிந்து மதத்தின் ஆதரவாளர்களே அதை முடிவு செய்யவேண்டும்... தெருவோரத்து நாய்க்கு ஒரு பிஸ்கட்டை வாழ்நாளில் போடாத கூட்டம்தான், ஹிந்துக்கள் பட்டாசு வெடிக்கும்போது பறவைகளுக்கும் நாய்க்கும் பொங்கிக்கொண்டு வருகிறது. மாட்டுக்கறி உண்டால் மாடு செத்துப் போகும் என்பதைப் பற்றி யோசிக்காதவர்கள்தான் நாய்க்கும் பறவைக்கும் வெடிக்கு எதிராகப் பரிந்துகொண்டு வருகிறார்கள். இந்த இரட்டைத்தனமெல்லாம் இது... [மேலும்..»]

பாதுகாப்பான தீபாவளியே ஆனந்தமான தீபாவளி !

தீபாவளி! குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் ஆனந்தமாக எதிர்பார்த்து, காத்திருந்து வரவேற்க்கும் திருநாள்! தீபாவளி என்றாலே உடனே நினைவுக்கு வருவது புத்தாடைகள், புது மகிழ்ச்சி, பலவகைப் பலகாரங்கள், ரொம்ப முக்கியமானது பட்டாசுகளும் மத்தாப்புகளும் தான்! ஒவ்வொரு வருடமும் தீபாவளிக்கு முன்பும் தீபாவளியன்றும், அதனைத் தொடர்ந்து வருகின்ற நாட்களிலும் பட்டாசு விபத்துகளின் காரணமாக பலர் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வருகிறார்கள். அதிலும் கண் மருத்துவமனைகளுக்கு வருகின்ற நோயாளிகள் எண்ணிக்கை அதிகம். அதனாலே தீபாவளி ஹாப்பி அண்ட் சேஃப் தீபாவளியாக அமைய உங்களுக்கு சில முக்கியமான டிப்ஸ்கள் : 1. முதலில் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடமே பட்டாசுகளை வாங்கவும். தரமற்ற போலியான... [மேலும்..»]

பட்டாசுடன் கொண்டாடுங்கள்!

உலகெங்கும் பெரும் அளவில் விளையாட்டு நிகழ்வுகள் என்றாலும் புத்தாண்டுக் கொண்டாட்டம் என்றாலும் மாபெரும் வான வேடிக்கைகள் அவ்விழாக்களின் அடையாளமாக இருக்கின்றன. ஆனால் வெகுமக்கள் தாங்களாகவே ஒவ்வொரு இல்லத்திலும் வானவேடிக்கை நடத்தும் சிறப்பு உலகிலேயே தீபாவளித் திருநாளுக்கு மட்டுமே உரித்தானது. இதை நாம் இழக்கலாமா...உண்மையில் பட்டாசுகளும் மத்தாப்புகளும் விளைவிக்கும் ஒலி ஒளி அளவுகளுக்கு மிக மிகச்சிறிய அளவிலேயே வேதிப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. குழந்தைகளை பணிக்குப் பயன்படுத்துவது ஒரு சமூக அவலம். இதற்கான தீர்வு தயரிப்புப் பொருட்களை தவிர்ப்பதால் நிச்சயம் வந்துவிடாது... [மேலும்..»]

இனிப்பு [சிறுகதை]

தங்கள் கோரிக்கையில் கண்டுள்ளவாறு ஒவ்வொரு ஸ்ட்ரெச்சர் தூக்கிக்கும் சான்றிதழ் அளிப்பது இயலாது... பிரிட்டோரியாவில் இருந்து வந்த பதிலில் காலனியல் செகரட்டரி, பேரரசியின் இனிப்புகள் வெள்ளை சோல்ஜர்களுக்கு மட்டுமேயான மரியாதை என்றும் கூலிகளுக்கு அவை அளிக்கப்படமுடியாது என்பதை தெரிவிப்பதாகவும் கண்டிருந்தது..."மோசமாக இருப்பீர்கள் என எதிர்பார்த்தேன் நெல்சன். இத்தனை மோசமாக அல்ல"... "எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது நாயுடோ...” [மேலும்..»]

மானுடத்தை வாழவைக்கும் தீபத் திருவிழா

தாயுணர்வு கொண்ட ஆன்மிகமே பூமியின் காயங்களுக்கும் மானுட நல்வாழ்வுக்கும் அருமருந்தாக அமையும் என்பதே நரகாசுர வதம் எனும் தொன்மம் இன்றைய சூழலில் நமக்கு அளிக்கும் திருசெய்தியாகும்... மாசற்ற செல்வம் தோன்றிய திருநாள் தீபாவளி. இயற்கையுடன் இணைந்த ஆன்மிகத்துக்கு இறைவனே சான்றுரைத்த திருநாள். தென்னாப்பிரிக்காவில் மகாத்மாவின் சத்தியாகிரகத்தின் முன்னோடியாக விளங்கிய தீபாவளி இந்திய கொத்தடிமை தொழிலாளர்களின் தொடர்ந்த ஏறத்தாழ அரை நூற்றாண்டு போராட்டத்தினால் 1906 இல்தான் கொண்டாட அனுமதிக்கப்பட்டது. அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்! [மேலும்..»]