Posts Tagged ‘ தீவிரவாதம் ’

யாகூப் மேமனும் பி.ராமனும் இந்திய தேச விரோதிகளும்

யாஹுப் சரண்டர் ஆகவில்லை அவனை கைதுதான் செய்தோம் என்கிறார் ராமன். அவனும் அவன் குடும்பமும் முழுக்க முழுக்க அந்த பயங்கரவாத செயலில் ஈடுபட்டது என்றும் சொல்கிறார்.... உண்மையில் ஒற்றர்களுக்கும் அவர்களுக்கு துப்பு கொடுக்கும் ஆட்க்களுக்கும் ஒரு விதமான பிணைப்பு விளக்க முடியாத மனரீதியான நட்பு ஏற்பட்டு விடுகிறது. அது ஒரு விதமான உளவியல் சிக்கலும் கூட.ஒற்றர்களினால் உத்தரவாதம் கொடுக்கப் பட்டு அழைத்து வரப் படும் அல்லது தகவல் பெறப்படும் குற்றவாளிகளை அந்த அரசாங்கங்கள் தண்டிப்பதும் கை விட்டு விடுவதும் புதிதல்ல. குற்றத்தின் தன்மையைப் பொறுத்து அவனுக்கு சலுகைகளை அளிப்பதா வேண்டாமா என்பதை அரசாங்கமே முடிவு செய்யும்... ... [மேலும்..»]

தென்னிந்திய ஜிகாத் – தொடரும் பயங்கரம்

எப்படி சீக்கியர்கள் தங்கள் குருக்களின் பலிதானங்களை தம் வீரர்களின் தியாகங்களை நினைவு கொள்கிறார்களோ அப்படியே தியாகி குமார பாண்டியனையும், பேராசிரியர் பரமசிவத்தையும், ஆடிட்டர் ரமெஷையும் பலிதானி வெள்ளையப்பனையும் நினைவில் கொள்ள வேண்டும். அவர்களின் பலிதான தினங்கள் இந்து ஒற்றுமைக்கும் அவர்களுக்கு நீதி கிடைக்கவும் நாம் பிரதிக்ஞை எடுக்கும் தினங்கள் ஆக வேண்டும். இந்நிலையில் நாம் மீண்டும் மீண்டும் நினைவில் கொள்ள வேண்டியது இதைத்தான். காவல்துறை செய்யும் கைதுகளுக்கு அப்பால் இந்துக்களாகிய நமக்கு ஒரு கடமை இருக்கிறது. இந்து இயக்கங்களுக்கு ஒரு கடமை இருக்கிறது. இந்த வழக்குகளின் போக்குகள் உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டும். அரசியல் நிர்ப்பந்தங்களால் இங்கு ஜிகாதி... [மேலும்..»]

காங்கிரஸ் அரசு மீது இந்துக்களின் குற்றப் பத்திரிகை

ஹிந்துகளின் அறியாமையே காங்கிரசின் பலம். இப்படியே வளர்ந்துவிட்ட ஹிந்துக்களின் அறியாமையை விலக்க நாம் காங்கிரசிற்கு ஒட்டு அளிப்பதால் நாடு எதிர்நோக்கியுள்ள தீமைகளை விளக்கி சொல்ல வேண்டும். காங்கிரஸ் அரசாங்கத்தின் ஹிந்து விரோத, தேசியவிரோத கொள்கைகளை பொதுமக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டப் பட வேண்டும். காங்கிரஸ், அன்று மத அடிப்படையில் ஒரு கருவியாக இருந்து நாட்டை பிரித்தது. இப்போது இந்துக்களை வஞ்சித்து மைனாரிட்டிகளை திருப்தி படுத்துகிறோம் என்று நாட்டை நாசப் படுத்தி வருகிறது. நீங்கள் நேர்மையானவர், தேசியத்தின் மீது மனமார பற்றும் நம்பிக்கையும் கொண்டவர், இருந்தும் காங்கிரசிற்கு ஒட்டு அளிப்பவர் என்றால் இந்த கட்டுரை உங்களுக்குத்தான்..... [மேலும்..»]

ஹைதராபாத் குண்டுவெடிப்புகள்

இன்னொரு நாள்.. இன்னொரு நகரம் .. இஸ்லாமிய பயங்கரவாதத்தின் கோர வெறியாட்டம்.. இழந்தவை இந்திய உயிர்கள். சிந்தியது இந்திய ரத்தம். காங்கிரஸ் அரசே, போலி மதச்சார்பின்மை கட்சிகளே, உங்கள் ஈனத்தனமான வாக்கு வங்கி அரசியலுக்காக அப்பாவி மக்கள் வீதிகளில் உடல் சிதறி மடிய வேண்டுமா? அமெரிக்காவும் பிரிட்டனும் தொடர் ஜிகாதி பயங்கரவாதச் செயல்களை பெருமளவு தடுத்தி நிறுத்தி விட்டன. ஏன் இந்தியாவால் முடியவில்லை? சிந்தியுங்கள் மக்களே. ஹைதரபாதில் உயிரிழந்த மனித உயிர்களுக்கு கண்ணீர் அஞ்சலி. பாதிக்கப் பட்ட குடும்பங்களுக்கு ஆழ்ந்த ஆறுதல்கள். [மேலும்..»]

துப்பாக்கி – திரை விமர்சனம்

ஸ்லீப்பர் செல்களைப்பற்றி முதலில் தமிழில் பேச முனையும் திரைப்படம் என்ற அளவிலும் இது முக்கியத்துவம் பெறுகிறது. அது என்ன ஸ்லீப்பர் செல் என்றால் இது தீவிரவாதத்தின் நவீன முகம். முதலில் எல்லாம் தீவிரவாதிகள் பாகிஸ்தானிலிருந்தும், ஆஃப்கானிஸ் தானிலிருந்தும், சீனா போன்ற தேசங்களில் இருந்து வந்து கொண்டிருந்தார்கள் . ஆனால் அவை செலவு அதிகம் பிடிக்கும். அதற்காக பயங்கரவாதிகள் கண்டுபிடித்த வழிமுறை தான் இந்த ஸ்லீப்பர் செல்கள். மேலும் ஸ்லீப்பர் செல்களை உபயோகித்து படுபாதக கொலைக்குற்றங்களை அரங்கேற்றுவதன் மூலம் குற்ற வாளிகளை நெருங்குவதும் மிகவும் கடினமான வேலையாக மாறுகிறது. Who is the king pin என்பதை கண்டறிவது... [மேலும்..»]

பயங்கரவாதத்தின் பிடியில் இஸ்லாமிய இளைஞர்கள்

ஏழை இஸ்லாமியர்கள், எல்லாம் அல்லாவைச் சேர்ந்தது என அதிக அளவில் சந்தோஷமாக வாழ்கிறார்கள்; ஆனால் படித்தவர்கள், நல்ல வசதி படைத்தவர்கள் மட்டுமே பயங்கரவாத செயலுக்கு மாறுகிறார்கள்... மேலே குறிப்பிட்டுள்ளவர்கள் அனைவரும் இந்தியாவைச் சேர்ந்த இஸ்லாமியர்கள். பட்டப் படிப்பும், பட்ட மேற்படிப்பும், மருத்துவ படிப்பும் அரசுக் கல்லூரிகளில், அரசுக் கல்வி உதவித்தொகை பெற்றுப் படித்தவர்கள். இவர்களின் பின்னே பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐயும், பங்களாதேஷ் நாட்டில் உள்ள ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமியா அமைப்பும் உள்ளன... ஆனால் நாட்டில் உள்ள மதச்சார்ப்பற்றவைகளாகக் காட்டிக் கொள்ளும் கட்சிகளின் தலைவர்கள், இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு கல்வி கிடைப்பதில் பாகுபாடு இருப்பதாகக் கூறிக் கொண்டு இருக்கிறார்கள். [மேலும்..»]

தமிழக அரசின் இலங்கை எதிர்ப்பு – ஒரு பார்வை

கருணாநிதியிடம் இருந்து தட்டிப்பறித்த ''தமிழினத் தலைவர்'' பட்டத்தைத் தக்க வைக்க மேலும் மேலும் தவறு செய்கிறார். ராஜீவ் கொலையாளிகளுக்கு ஆதரவாக சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்; இலங்கை ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியை எதிர்க்கிறார்... தமிழக அரசின் நடவடிக்கைகளை தங்களுக்கான ஆதரவாக எடுத்துக்கொள்ளும் புலி ஆதரவாளர்கள் வரம்பு மீறுகின்றனர்... 80-களின் இறுதியில் தமிழகத்தில் நிலவிய பயங்கரத்தை நாம் மறந்துவிடக்கூடாது... சிங்களர்களுக்கு எதிரான வெறுப்புணர்வை தமிழகத்தில் வளர்ப்பது இலங்கை வாழ் தமிழர்களை மேலும் பாதிக்கவே செய்யும். [மேலும்..»]

இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 17

2001ம் ஆண்டிலிருந்து 2012ம் ஆண்டு வரை பல்வேறு கால கட்டங்களில் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தாக்குதல்களும், இது தொடர்பான காவல்துறையினரின் செயல்பாடுகளையும் ஆய்வு செய்தால், மற்ற மாநிலங்களை காட்டிலும் டெல்லியில் அதிக அளவில் இவர்களின் செயல்பாடுகள் நடந்துள்ளன என்பது நன்கு தெரியும். கடந்த பல ஆண்டுகளாக டெல்லியில் நடந்த சம்பவங்களை முழுமையாக கூறுவதற்கு பதில் முக்கியமான சம்பவங்களை மட்டும் தொகுத்து கொடுத்தால் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் நோக்கமும், அரசு சிறுபான்மையினருக்கு காட்டப்படும் சலுகையின் காரணமாக பாரத தேசம் படும் வேதனைகளையும் இனம் கண்டுகொள்ள ஏதுவாக இருக்கும். பாரத தேசத்தில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இஸ்லாமிய பயங்கரவாத செயல்பாடுகளை... [மேலும்..»]

இலங்கை: அபகரிக்கப்பட்ட கிழக்கு மாகாண நிலங்கள் – 3

உள்நாட்டுப் போரில் தமிழர்களின் ஆளுகைக்கு வந்த எந்தப் பகுதியிலும் இஸ்லாமிய, பௌத்த வழிபாட்டுத் தலங்களோ, பாடசாலைகளோ, வீடுகளோ இந்துத் தமிழர்களால் அழிக்கப்படவில்லை. ஆக்கிரமிக்கப்படவில்லை. மாறாக இலங்கை ராணுவத்திலும், அரசியலிலும் செல்வாக்குப் பெற்ற இஸ்லாமியர்கள் தமிழர் பகுதிகளை அழித்து ஆக்கிரமிக்கத் தயங்கவே இல்லை. அமைதி மார்க்க இஸ்லாமியர் அழித்த ஏனைய கிழக்கு மாகாண தமிழர் கிராமங்கள் பற்றிய இறுதிப் பகுதி. [மேலும்..»]

கரிபால்டித் தெருவில் ஒரு வீடு (1979) : இஸ்ரேலியத் திரைப் படம் – 2

ஹோலோகாஸ்ட் குறித்து மனதைக் கலங்க அடிக்கும் ஏராளமான சினிமாக்கள் இன்றும் வந்த வண்ணம் இருக்கின்றன. மாறாக வட இந்தியாவின் ஆயிரக்கணக்கான கலை நுட்பம் மிகுந்த கோவில்களை யார் அழித்தார்கள் என்பது குறித்தோ ஸ்ரீரங்கம் கோவிலும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும் எத்தனை முறை அழிக்கப் பட்டன எப்படிக் கொள்ளையடிக்கப் பட்டன என்ற உண்மைகள் குறித்தோ, ஒரு நாலந்தா பல்கலைக் கழகம் யாரால் எப்படி தீக்கிரையாக்கப் பட்டது என்ற உண்மை குறித்தோ நம்மிடம் இன்று எத்தனை மியூசியங்கள், எத்தனை நாவல்கள், எத்தனை நூல்கள், எத்தனை சினிமாக்கள் உள்ளன? [மேலும்..»]

Josh Oliver Authentic Jersey