Posts Tagged ‘ தீவிரவாதம் ’

தீவிரவாதத்தை ஒழிப்போம், ஜனநாயகம் வளர்ப்போம்

தீவிரவாதத்தை ஒழிப்போம்,  ஜனநாயகம் வளர்ப்போம்

ஆதி அந்தமில்லாத தர்ம நெறியாகிய நம் இந்து மதத்தில் வன்முறைக்கோ, பயங்கரவாதத்திற்கோ, எள்ளளவும் இடமில்லை.... மனமுதிர்ச்சி இன்றி, விளைவுகள் பற்றி சிந்திக்காமல் இந்த குண்டு வெடிப்பில் ஈடுபட்ட இந்துக்கள் (இவர்கள் மீதான குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும் பட்சத்தில்) சட்டத்தின் கீழ் கடுமையாக தண்டிக்கப் படவேண்டும்..."காவி தீவிரவாதம்" போன்ற பொறுப்பற்ற பிரசாரங்களினால், ஏற்கெனவே ஒற்றுமையின்றி பிரிந்து கிடந்து, தன் ஒருங்கிணைந்த ஊக்கத் திறனையும், சக்தியையும் உணராமல் இருக்கும் இந்து சமுதாயத்தில் அதிருப்தியும், குழப்பமும் அதிகரித்து, தேச ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் பங்கம் ஏற்படும் என்பதை நினைவில் கொண்டு ஊடகங்கள் பொறுப்புடன் செயல் படவேண்டும்....தீவிரவாதம் ஒழியட்டும். ஜனநாயகம்... [மேலும்..»]

தீவிரவாதத்திற்குத் துணைபோகும் போலிகள்

தீவிரவாதத்திற்குத் துணைபோகும் போலிகள்

டில்லியில் நடந்த பயங்கர குண்டு வெடிப்பு புதியதல்ல. தொடர்ந்து பல்கிப் பெருகிவரும் தீவிரவாதத்தின் அறைகூவல்; இந்திய இறையாண்மைக்கு தீவிரவாதிகள் விடும் நேரடி சவால். இந்த தீவிரவாதச் செயல் ஏதோ, அரிசி பருப்பு கிடைக்கவில்லை, படிப்பு கிடைக்கவில்லை, வேலை கிடைக்கவில்லை என்று ஏழ்மையிலும் வறுமையிலும் ஏற்பட்ட வெறுப்பின் வெளிப்பாடு அல்ல. ஆனால் அவற்றால்தான் என்று சொல்லி தொடர்ந்து அரசியல்வாதிகளும், பத்திரிகைகளும் தம்மை மட்டுமன்றி, நம்மையும் ஏமாற்றிக் கொண்டு வருகின்றனர். டில்லி குண்டு வெடிப்புகளை நிகழ்த்திய இந்திய முஜாகிதீன் அமைப்பே அவ்வளவு எளிதாக சிறுபிள்ளைத் தனமாக தன் நோக்கத்தைப் பற்றி சொல்லிக் கொள்ள விரும்பாது. இந்தத் தீவிரவாதிகள் இஸ்லாத்தின் பெயரால்... [மேலும்..»]

வீரர் மோகன் சந்த் சர்மா: அஞ்சலி

வீரர் மோகன் சந்த் சர்மா: அஞ்சலி

நேற்று (செப்டம்பர் 19) டெல்லி குண்டு வெடிப்புகளுக்கு காரணமான பயங்கரவாதிகளை பிடிக்க சென்ற போது பயங்கரவாதிகளின் குண்டுகளுக்கு பலியானார் காவல் துறை அதிகாரி மோகன் சந்த் ஷர்மா. இதுவரை தமது கடமையில் 35 பயங்கரவாதிகளை உயிரிழக்க செய்த இந்த மாவீரர் தேசத்துக்காகவும் நம் அனைவரின் பாதுகாப்புக்காகவும் தமது சொந்த குடும்பத்தைக் கூட கவனிக்காமல் தனது உயிரை பலிதானமாக்கியுள்ளார்.... நமது போலி மனித உரிமை வாதிகள், விலைக்கு போன ஊடகங்கள் நம் அனைவருடையவும் பாதுகாப்புக்காக உயிர் துறந்தவர்களின் தியாகத்தின் கனத்தை, அவர்கள் குடும்பங்களின் சோகங்களை அவை நம் பிரக்ஞையில் பதிய வைப்பதே இல்லை...தமிழ் இந்து.காம் நம் அனைவருடைய பாதுகாப்புக்காகவும்... [மேலும்..»]

காஷ்மீர் பிரிவினைவாதத்தின் மொழியும், கண்ணன் வழியும்

August 29, 2008
By
காஷ்மீர் பிரிவினைவாதத்தின் மொழியும், கண்ணன் வழியும்

காஷ்மீருக்காகப் போராடி உயிர்நீத்த படைவீரனின் மனைவியையும், தாயையும் கேட்டுப்பாருங்கள் - அவர்கள் வெறும் ஊதியத்துக்காகத் தான் அந்தத் தியாகம் செய்தார்களா என்று. காஷ்மீரின் பிரிக்க முடியாத அங்கமாக இருந்தும், பொட்டுவைத்துக் கொண்டதற்காகவும், “சிவ சிவ” என்று தங்கள் இறைவனின் பெயரைச் சொல்லி வழிபட்டதற்காகவுமே, முஸ்லிம் ஜிகாதிகளால் துரத்தியடிக்கப் பட்ட காஷ்மீரி இந்துக்களைக் கேட்டுப்பாருங்கள் - அவர்களைத் தாக்கி விரட்டியவர்களிடமே காஷ்மீரைக் கொடுத்துவிடலாமா என்று... ஜம்முவிலிருந்து இதனை எழுதுகிறேன். இங்கே மக்கள் இந்திய வழியில் தேசபக்தி என்றால் என்ன என்று காஷ்மீரின் முஸ்லிம்களுக்குக் காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள். சாலைகளும், தெருக்களுக்கும் வெறிச்சோடிக் கிடக்கின்றன, ஊரே அடங்கி... [மேலும்..»]

சுவாமி லக்ஷ்மணானந்த சரஸ்வதி: கண்ணீர் அஞ்சலி

சுவாமி லக்ஷ்மணானந்த சரஸ்வதி: கண்ணீர் அஞ்சலி

ஒரிஸாவில் வனவாசிகளின் முன்னேற்றம், கல்வி சேவை, அவர்களின் பண்பாட்டு பாதுகாப்பு ஆகிய துறைகளில் அயராது உழைத்த எண்பது வயது துறவி, சுவாமி லக்ஷ்மானந்த சரஸ்வதி மற்றும் அவர் நடத்திவந்த ஆசிரமத்தில் பயிலும் குழந்தைகள் உட்பட ஐந்து பேர் ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி அன்று இரவு மாவோயிஸ்ட் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர்.... கடந்த 40 ஆண்டுகளாக தனிமனிதராக தமது சேவைகளின் மூலம் மதமாற்றத்தை தடுத்தும் தாய் மதம் திரும்பும் நிகழ்ச்சிகளை நடத்தியும் வரும் இந்த ஒற்றை துறவி மிஷனரி-மாவோயிஸ்ட் கூட்டணிக்கு பெரும் கலக்கத்தை உண்டுபண்ணியிருந்தவர்... மதவெறியாலும் மாவோயிஸ வெறியாலும் மானுடத்தன்மையை இழந்த இருட்சக்திகளால் படுகொலை செய்யப்பட்ட நம் சகோதர-சகோதரிகள்... [மேலும்..»]

காஷ்மீர் கோயிலில் பெருகும் கண்ணீர்

June 12, 2008
By
காஷ்மீர் கோயிலில் பெருகும் கண்ணீர்

"நான் ஜம்முவில் சாக விரும்பவில்லை. (என் தாய்மண்ணான) ஸ்ரீநகரில் அமைதியாக வாழ்ந்து மடிய விரும்புகிறேன்" என்று 68 வயதான ரோஷன்லால் என்பவர் சொன்னார். நான்கு பேர் கொண்ட தன் குடும்பத்துடன் 1990ல் மற்ற இந்துக்களுடன் சேர்ந்து ஸ்ரீநகரை விட்டு ஓடியவர். கோயில் படிகளை முயற்சியுடன் ஏறிக்கொண்டு "நிரந்தரமான அமைதிக்காகவும், எங்கள் பாரம்பரிய வீட்டிற்கு திரும்பவும் அம்மனை வேண்டினேன்" என்றார் ரோஷன் லால். [மேலும்..»]