Posts Tagged ‘ துரோணர் ’

அருச்சுனனின் ஆத்திரம்

“நீ ஒரு கோழை.  கர்ணனுக்குப் பயந்துகொண்டு இங்கே ஓடிவந்திருக்கிறாய்.  அத்தனை அதிவில்லாளர்களையும் அடித்துத் துவம்சம் செய்த கர்ணனை — அபிமன்யுவை அநியாயமாகக் கொல்வதற்காக அவனது பின்புறமாக நின்று, வில்லைத் துண்டித்துச் செயலிழக்கச் செய்தவனை — வீரத்தில் உன்னைவிடச் சிறந்த உன் செல்வன் விழக் காரணமாவிருந்த கள்வனை — பாஞ்சாலியின் துகில் உரியக் காரணமாக இருந்த அந்த மாபாவியை விட்டுவிட்டு, இங்கென்ன செய்கிறாய்? பேசாமல் உன் காண்டீவத்தையும், வீரவாளையும் கேசவனிடம் கொடுத்துவிட்டு, அவனுக்குச் சாரதியாக இருந்துவிடு.  அவன் கர்ணனை அரைநொடியில் கொன்றுவிடுவான்”  [மேலும்..»]

நிழல் [சிறுகதை]

October 19, 2016
By

முறிந்த தொடையிலிருந்து ஓடிய ரத்தம் சேற்றோடு கலந்து சிவப்புக் கம்பளத்தில் படுத்திருப்பதைப் போல துரியோதனன் கிடந்தான். அஸ்வத்தாமன் துரியோதனன் அருகே அமர்ந்து அவன் தலையை தன் மடியில் தாங்கிக் கொண்டான். கிருபர் ‘நான் சென்று பச்சிலைகள் கொண்டு வருகிறேன், கிருதவர்மரே, நீங்கள் எப்படியாவது ஒரு மருத்துவரைக் கண்டுபிடித்து அழைத்து வாருங்கள்!’ என்று பரபரத்தார்... ஒன்றும் புரியாத அஸ்வத்தாமன் முழந்தாளிட, துரியோதனன் தொன்னையிலிருந்து நீரை எடுத்து அஸ்வத்தாமன் தலையில் ஊற்றினான். கிருபரின் மார்புக்கூடு விரிந்தது. அவரது மூச்சு கொல்லன் துருத்தி போல பெரிதாக எழுந்தது. அவரது கன்னங்கள் ரத்தம் பாய்ந்து சிவந்தன... பாண்டவர் படைகளின் கூடாரங்களில் விளக்குகள் அணைந்துவிட்டிருந்தன. நட்சத்திரங்களின்... [மேலும்..»]

பீஷ்ம பிதாமகருக்கு …

எங்களின் வணக்கத்திற்குரிய ஆச்சார்யர் அவர்களுக்கு, மிகவும் அசாதாரணமான ஒரு நிலையில் இதை எழுத துவங்குகிறேன் . இந்த தேசம் ஒரு அசந்தர்ப்பமான சூழலை சந்தித்து கொண்டிருக்கிறது. எதிரிகள் வெடி வெடித்து கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ் கயவர்களும், கம்யூனிஸ்ட் கயவர்களும் உங்களின் ஜன நாயக மாண்பின் பகுதிகளை தப்பும், தவறுமாகவும், மிகுந்த கயமைத்தனத்தோடும் பிரித்து பொருள் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள் . இந்த தேசத்தை அழிக்க வேண்டும் என நினைக்கும் பிரிவினைவாத சக்திகள், அயல் நாட்டு ஆதிக்க சக்திகள் மிகுந்த குயுக்தியோடு தங்களின் ஊடகங்களில் அவதூறை அள்ளி வீசிக்கொண்டிருக்கின்றன. இந்த பாரத தேசத்தின் மக்களிடையே அவ நம்பிக்கையையும் அச்சத்தையும் விதைப்பதற்காக பல்வேறு... [மேலும்..»]

ரமணரின் கீதாசாரம் – 3

February 11, 2011
By

தீமைகள் வளரும் போது அவைகளைத் தடுக்கும் எண்ணம் இல்லாது போனால், நன்மைகள் வளர முடியாது என்பதையும் நாம் அனைவரும் உணர்ந்துள்ளோம் அல்லவா? அப்போது தீமைகள் ஊக்குவிப்போரை எப்படி அடக்க வேண்டும் என்பது தானே நமது லட்சியமாய் இருக்கிறது? இந்தப் போர்க்களத்தில் நடக்கப் போவதும் அதுவே... [மேலும்..»]