Posts Tagged ‘ துறவிகள் ’

சுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 3

அந்த ஆரம்ப சுகாதார மையத்தின் திறப்பு விழாவுக்கு சுவாமி அம்பேத்கரை அழைக்காமல் எம்.எல்.ஏ.வே வந்து திறந்துவைக்க முடிவெடுக்கிறார். ஆனால், திறப்பு விழா அன்று ஒட்டு மொத்த கிராமமும் எம்.எல்.ஏ.வை எதிர்த்து நிற்கிறது. சுவாமி அம்பேத்கர்தான் வந்து திறக்கவேண்டும் என்று குரல் எழுப்புகிறார்கள். எம்.எல்.ஏ. அதற்கு மறுப்பு தெரிவித்ததும் ஒட்டு மொத்த கிராமத்தினரும் அந்த விழாவைப் புறக்கணிக்கின்றனர். எம்.எல்.ஏ.வுக்கு பெருத்த அவமானமாகப் போகிறது... கோவிலில் கருவறைக்குள் சென்று வழிபடவேண்டும் என்று விரும்புபவர்கள் முன்கூட்டியே தமது பெயரை பதிவு செய்துகொள்ளவேண்டும். அவர்களுக்கு அனுமதி கிடைக்கும் நாளில் காலையில் கோவிலுக்கு வந்து கோவில் குளத்தில் குளித்து சிறிய யாகம் செய்து சமஷ்டி... [மேலும்..»]

சுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 2

ஆற்று நீரைக் குடித்துவிட்டுப் படுத்துக் கிடக்கும் நந்தனாரை ஒரு விவசாயி தனது வீட்டுக்கு வந்து உணவருந்தும்படி அழைக்கிறார். "அது சரிதான். ஆனா ஒரு மனுஷனை நேசிக்க எதுவுமே தடையா இருக்கக்கூடாது... இப்போ நான் ஒரு பறையனா இருந்தா என்ன செய்வீங்க"...பரிமாறுபவர் சட்டென்று நிறுத்திவிட்டு, "எழுந்திரிச்சு வெளிய போடான்னு சொல்லுவேன்". பரதேசிக்குத் தூக்கிவாரிப்போடுகிறது... "உங்களுக்குத் தனிச் சுடுகாடு, அவங்களுக்குத் தனி சர்ச்சுன்னு எத்தனை இடத்துல இருக்கு. உங்க அனுபவமே இருக்குமே. உங்களை உங்க சபையில எப்படி நடத்தறாங்க?" தலித் பாதிரியார் கொஞ்சம் மென்று முழுங்குகிறார். "தப்புச் செய்யற குழந்தைகளை தாய் மன்னிச்சு ஏத்துக்க எப்பவுமே தயாரா இருப்பா... அது... [மேலும்..»]

சுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 1

இருளுக்குப் பழகிய கண்களும் நாற்றத்துக்குப் பழகிய நாசிகளும் கொண்டவர்கள் தத்தமது வளைகளுக்குள் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தனர். ஒளிக்கு ஏங்கிய கண்களும் தூய காற்றுக்கு ஏங்கிய நாசியும் கொண்ட நந்தன் ஊரைவிட உயரமாக, ஊரிலிருந்து சற்றே தொலைவில் இருந்த மலைக் கோவிலில் இருந்து தெரிந்த மெல்லிய பொன்னிற ஒளிப் புள்ளியை பார்த்தபடி நடக்கத் தொடங்கினான்... ஆச்சி வெளியே வந்து அரிசியைக் கொடுக்க முற்படுகிறார். நந்தனார் ஏந்திய திருவோட்டை மூடியபடியே, இன்று நான் பட்டினி கிடக்கவேண்டும் என்பது உங்கள் மருமகளின் விருப்பம் போலிருக்கிறது என்று சொல்லிச் சிரித்தபடியே வந்த வழியே திரும்புகிறார். ஆச்சி பின்னால் ஓடி வந்தபடியே கெஞ்சுகிறார். சாமி... [மேலும்..»]

அஞ்சலி: ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்

அவரிடமிருந்து கற்கவேண்டிய விஷயம் அவரது மனோபலம்தான். எந்த நிலையிலும் தளர்ந்து போக மாட்டார். அவருடைய அசாத்திய உழைப்பு அனைவரையும் ஆச்சர்யப்பட வைக்கும். இறுதிவரை தொடர்ந்த ஜபதபங்கள், வாசிப்பு, சிந்தனை, சொற்பொழிவு எல்லாமே ஆச்சர்யப் படுத்துபவை. இம்மி அளவுகூட விரதங்களில் சமரசம் செய்துகொள்ளாதவர். தமிழகம் தாண்டி இந்தியாவெங்கும் எத்தனை எத்தனை மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள், ஆதரவு நிலையங்கள்! எல்லாவற்றையும் தமது நேரடிப் பார்வையிலேயே நிர்வாகம் செய்தவர் சுவாமிகள்... ஸ்ரீ ஜெயேந்திரர் பயணித்த பாதை கடும் முட்களும் விஷ பாம்புகளும் நிரம்பியது. ஒவ்வொரு தலித் பகுதிக்கும் சென்றது, தலித் பூசகர்களிடம் கை நீட்டி பிரசாதம் வாங்கியது, தலித் தொழில் முனைவோருக்கு... [மேலும்..»]

கம்பனும் வால்மீகியும்: இராமாயண இலக்கிய ஒப்பீடு – 3

இராவணன் அரக்க வடிவத்தை எடுத்த பின்னும் சீதை கலங்கவில்லை, அவனை எதிர்த்து வாதிட்டிருக்கிறாள் என்றுதான் இரு கவிகளும் எழுதி உள்ளார்கள். எல்லா தேவர்களாலும் வணங்கப்படும் குபேரனின் சகோதரனான நீ இந்த இழிவான எண்ணத்தை ஏன் மேற்கொண்டாய் என்று கடிகிறாள் என்று வால்மீகி சொல்கிறார். வேள்வியில் (யாகத்தில்) இடப்படும் பலியை நாய் விரும்புவது போல, என்னை அடைய விரும்புவதாகச் சொல்கிறாயே என்று அவனை நாயுடன் துணிச்சலாக ஒப்பிடும் வீராங்கனையாகத் திகழ்கிறாள் சீதை என்று உச்சாணிக் கொம்புக்கே அவளை ஏற்றி விடுகிறார் கம்பர். இரு கவிச்சக்கரவர்த்திகளுமே, சீதையை, ஆணுக்கு அடங்கிப் பயந்து போகும், அடிமையாக வாழ்ந்திருக்கும்... [மேலும்..»]

எழுமின் விழிமின் – 20

கல்வியென்பது ஒருவனுடைய மூளையில் விஷயங்களைத் திணிப்பதல்ல. அப்படித் திணிக்கப்படும் விஷயங்கள் ஜீரணமாகாமல் வாழ்நாள் முழுவதும் குழப்பமுண்டாக்கிக் கொண்டிருக்கும். வாழ்க்கையை உருவாக்குகிற, ஆண்மையுண்டாகுகிற, ஒழுக்கமூட்டுகிற கல்வி வேண்டும்... உங்களுக்கு இளமையின் சக்தித்துடிப்பு இருக்கும் பொழுதுதான் உங்களது வருங்காலத்தைப் பற்றி நிர்ணயிக்க வேண்டும். நீங்கள் தளர்ந்து வாடித் தேய்ந்துபோன பிறகு அல்ல; பணி புரியுங்கள். இதுவே தக்க தருணம்... உங்கள் ஆத்மாவில் அளவற்ற சக்தியிருக்கிறதென்றும் இந்நாடு முழுவதையும் உங்களால் தட்டியெழுப்ப உங்களால் முடியும் என்றும் உங்களில் ஒவ்வொருவரும் திடமான நம்பிக்கை கொள்ளுங்கள்.... [மேலும்..»]

[பாகம் 13] திருப்பராய்த்துறை வருகை

July 19, 2012
By

ஊட்டி மக்கள் சிறு சிறு ஹட்டிகளில் வசித்து வந்தார்கள். சுவாமி எல்லா ஹட்டிகளுக்கும் சென்று சிறு சிறு கதைகளைக் கூறி அம்மக்களுக்கு அருளுரை கூறி வந்தார். சிலநேரங்களில் பகவத் கீதை வகுப்பு நடத்தினார். அந்த கால கட்டத்தில் பேருந்து வசதி, மின்விளக்கு வசதிகள் கிடையாது. ஹட்டி மக்கள் பகலில் தோட்ட வேலைக்கு சென்று விடுவார்கள். அவர்கள் தோட்ட வேலைக்கு செல்வதற்கு முன்பு அவர்களுக்கு அருளுரைகள் சென்று சேர வேண்டும். ஆகையால் கடுங்குளிரில் காலை 4 மணிக்கே கால்நடையாக மலையின் ஏற்ற இறக்கங்களையயல்லாம் கடந்து சென்று ஹட்டி மக்களுக்கு அருளுரை ஆற்றி வந்தார். தமிழ்நாட்டில் மூலை முடுக்கு... [மேலும்..»]

[பாகம் 12] சின்னு சித்பவானந்தர் ஆனார்

May 3, 2012
By

சின்னுவின் கண்களில் பட்டது, 'சுவாமி விவேகானந்தரின் சென்னைச் சொற்பொழிவுகள்' என்னும் புத்தகம். பாஸ்போர்ட் குப்பைத்தொட்டிக்குச் சென்றது... மகேந்திரநாத் குப்தா எழுதிய 'ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசங்கள்' என்ற நூலை 1 ரூபாய் கொடுத்து வாங்கினார்... சந்நியாச தீட்ஷை பெறுவதற்கு முன்பு உயிருடன் இருப்பவருக்கும் சேர்த்து பித்ருக்களுக்குப் பிண்டம் போட வேண்டும்... "உன் தந்தையின் மரணம் சற்றுமுன் நிகழ்ந்திருந்தால் உனக்கு சந்நியாச தீட்சை தருவது 1 வருடம் தள்ளிப் போடப்பட்டிருக்கும். உன் தந்தை உடலைவிடும் போது உன் கையில் பிண்டம் பெற்றுச் சென்றது அவர் செய்த பாக்கியம்" [மேலும்..»]

[பாகம் 11] பன்றிக்கறியும் ஞான கர்மங்களும்

April 26, 2012
By

'காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே!' என்ற வாசகம் பட்டினத்தாரை மாபெரும் துறவியாக்கியது. 'சும்மாயிரு!' என்ற மந்திரத்தால் ஞானியானவர்கள் தாயுமானவரும் அருணகிரியும். 'செத்துத்தொலை!' என்ற வார்த்தை வேங்கடராமனை ரமணமகரிஷி ஆக்கியது. இந்தக் கொங்கு நாட்டு இளைஞனை, சாலையோரக் கடையில் கண்டெடுத்த விவேகானந்தரின் சென்னைச் சொற்பொழிவுகள் என்ற புத்தகம் தென்னாட்டு விவேகானந்தராக்கியது... "நீங்கள் கூறுவது உண்மையானால் ஒருவேளை ஒரு குழந்தையானது கருப்பையிலேயே அழிந்தாலோ, அழிக்கப்பட்டாலோ அது ஜீவன் முக்தி அடைந்து விடுமோ?" [மேலும்..»]

[பாகம் 10] தர்மச் சக்கரம் பத்திரிகை நோக்கம்

April 19, 2012
By

"இது திருநெல்வேலிக்குச் செல்கிறது. பக்தர்கள் அங்கு வருவார்கள்!"... நீங்கள் உயிர்வாழ அவசியம் என மருத்துவரின் கட்டாயம் இருக்குமேயானால் அசைவ உணவை உட்கொள்ளலாம். பசிக்காகவோ, ருசிக்காகவோ சாப்பிட்டால் அது பாபச்செயல்தான்... ஜாதி என்பது சமுதாய சவுகரியங்களுக்காக ஏற்பட்டது. ஜாதியில் உயர்வு, தாழ்வு கிடையாது. ஜாதி துவேஷம் கூடாது... தர்மச் சக்கரம் பத்திரிகை உயிருள்ளவர்களைப் போற்றவோ, தூற்றவோ செய்யாது. எல்லா சமயங்களிலுமுள்ள உயர்ந்த கோட்பாடுகளை இப்பத்திரிகை பிரசாரம் செய்யும். [மேலும்..»]