Posts Tagged ‘ தூத்துக்குடி ’

ஸ்டெர்லைட்: திசைமாறிய போராட்டமும் விடைதெரியா வினாக்களும்

முன்பு மார்ச் 24 போராட்டத்திற்கு அனுமதி கிடைக்காத போது நீதிமன்ற அனுமதி பெற்ற நிலையில் இந்த மே 22 போராட்டத்திற்கு அனுமதி கிடைக்காதபோது நீதிமன்றத்தை அணுகாமல் தடையை மீறுவோம் என பொது மக்களைத் தூண்டியது ஏன்? கடற்கரையோர மீனவ கிராம மக்கள் தாமாக போராட்டத்திற்கு வந்தார்களா? சர்ச்சில் ஃபாதர் சொன்னதால் வந்தார்களா? நூறு நாட்கள் தொடர்ந்து போராடி ஸ்டெர்லைட் எதிர்ப்பை தீவிரப் படுத்திய குமரெட்டியாபுரம் கிராமத்தில் ஒருவர் கூட துப்பாக்கிச்சூடு, தடியடி என எந்த தாகுதலுக்கு ஆளாக வில்லை. ஏன் தெரியுமா? கிராம மக்களுக்கு நோக்கம் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மட்டுமே.. அரசுக்கு எதிரான சட்டத்தை மீறும் வன்முறைப்... [மேலும்..»]

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: ஒரு கண்ணோட்டம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டவர்களில் எட்டு பேர் கொல்லப்படுவோம் என்பது தெரிந்து இருந்தவர்களே. அதாவது, மக்கள் அதிகாரம் போன்ற வன்முறை போராட்ட வழிமுறைகளில் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் கொண்டவர்களே. இப்படி ஒரு அசம்பாவிதம் நடக்கும் என்பது காவல்துறைக்கு முன்பே தெரிந்திருக்கிறது. அதனால்தான் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் பாதிரியார்களுக்கும் காவலர்கள் முன்கூட்டியே தகவல் சொல்லிவிட்டிருக்கிறார்கள். அவர்களும் வெகு கவனமாக தூத்துக்குடி பக்கமே தலைவைக்காமல் இருந்துவிட்டிருக்கிறார்கள். காவலர்கள் அப்பாவி மக்களிடம் எதுவும் சொல்லவில்லை... வன்முறைப் போராளிகள் ஆயுதங்களுடன் இருந்திராதபோது சுட்டுக் கொன்றது நிச்சயம் மிக மிகத் தவறு. அவர்கள் பொதுச் சொத்துக்கு தீங்கு விளைவித்தபோதிலும் அரசுப் பணியாளர்களுக்கு துன்பங்கள் விளைவித்தபோதிலும் ஆயுதம்... [மேலும்..»]

நெய்தலின் நெருப்புக் கனல்: ஜோ டி குருஸ்

நுளையர், திமிலர், சாலர், உமணர் நெய்தல் மக்கள். சங்க காலத்திலிருந்தே நமக்கான பழங்குடி பெயர் பரதவர் என்பது தெரியுமா உனக்கு? நாம் பாரத தேசத்தின் பரந்து விரிந்த கடற்கரையின் எல்லை காவலர்கள். இந்த இறையாண்மையை நாளும் பேணி காப்பவர்கள். பாரதத்தாய் அவள் எல்லோருக்கு தாய். அவளிடம் அநீதி இல்லை. ஆனால் அவள் பாதம் அமர்ந்து ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களிடம் மட்டும் ஏன் தொடர்ச்சியாய் நம் மேல் இந்த ஓரவஞ்சனை?... நாம் களங்கப்பட்டு நிற்கிறோம் என்கிறார் ஜோ டி குருஸ்... நெய்தலின் பட்டு நிற்கும் களங்கம் பாரத மக்கள் ஒவ்வொருவர் மீதுமான களங்கம். பாரத அன்னையின் மீது அன்னியப்பட்டு... [மேலும்..»]

இந்து மக்கள் கட்சியின் மீனவர் வாழ்வுரிமை மாநாடு

மீனவர்களுக்கு சேவை செய்கிறோம் என்று சொல்லி அவர்களை மதம் மாற்றியதைத் தவிர வேறு எந்த சாதனையும் இதர அமைப்புகளால் நடக்கவில்லை. மதம் மாறாத இந்து மீனவர்களுக்கு என்று ஒரு பாதுகாப்பும் இது நாள் வரை பெரிதாக கிட்டவில்லை. அவர்களது பிரச்சனைகளை பேச அமைப்புகள் பெரிதாக உருவாகவில்லை. இந்த நிலையில் இந்து மக்கள் கட்சி இவ்வாறு மாநாடுகள், போராட்டங்கள் என்று எடுத்து செய்வது பாராட்டுக்குரியது. [மேலும்..»]