அன்னமும் அடையாளமும்

என் அடையாளங்கள் அற்ற நிலையில், எனக்கும் பரவிப் பொங்கி வந்த அன்பு அது. அடுத்த முறை ரொட்டி வந்தபோது, வாழ்வில் முதன்முறையாக யாசிப்பதுபோல கை காட்டி, வீழ்ந்த ரொட்டியை பக்தியுடன் வாங்கினேன். கண்கள் கலங்கிப்போய், பருப்பில் தோய்த்து, விழுங்கி விக்கித்தேன். அந்த ரொட்டித் துண்டு,. எவனோ, எவளோ அடுப்பினருக்கே பொங்கும் வியர்வையைத் துடைத்தபடி, கைவலிக்க தட்டி சுட்டு எடுத்த ரொட்டி. அதற்கும் எனக்கும் என்ன உறவு.. உலகளவிய அன்பு அன்றி வேறேது?… அம்மாக்களின் இந்த காலத்திய அதீத செல்லங்களால் கெட்டுப்போகும் குழந்தைகளுக்கும், இந்த பாரம்பரிய மரபுக்கும் எவ்வளவு வித்தியாசம்? அவரவர் தட்டுகளை அவர்வர் கழுவ வேண்டும், முடிந்தால் பிறருக்கு உதவவேண்டும் என்பதை கர் சேவையில் கண்ட நேரம் அது….

View More அன்னமும் அடையாளமும்

கம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 7

ஹிந்து பத்திரிகை மட்டுமல்ல, இடதுசாரி நிபுணர்கள் மட்டுமல்ல, பொதுவாகவே கருணைக் காவலர்களாக தங்களை முன்னிறுத்த விழையும் பல அதிகாரிகளும் நிபுணர்களும் பொருளாதார ஏற்றதாழ்வு என்பது ஒரு இயற்கை நியதி என்ற பச்சையான உண்மையை ஏற்க மறுக்கின்றனர். இருப்பவர்களிடமிருந்து அதிக வரிவசூல் செய்வதன் மூலம், இல்லாதவர்களுக்கு வசதிகளை அளித்துவிட முடியும் என்று துடிக்கின்றனர்… பட்ஜெட் பற்றாக்குறைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை ஆராய, பா.ஜ.க அரசு திரு.விஜய் கெல்கார் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது…5 இலட்சம் கோடிகளை பற்றாக்குறையாக மாற்றி விட்டது ஓட்டுவங்கி அரசியல் நடத்தும் தற்பொழுதைய அரசு… இந்தியாவில் அமலில் உள்ள இரண்டு பிரம்மாண்டமான மானிய திட்டங்களான 100 நாள் வேலைத் திட்டத்தையும், உணவுக்கான மானியங்களையும் ஒருசேர நோக்குவதே சரியான வழியாக இருக்கும்…

View More கம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 7