Posts Tagged ‘ தேசிய ஜனநாயகக் கூட்டணி ’

அரசியல், பொது

புத்தாண்டில் ஒரு புது சபதம்!

புத்தாண்டில் ஒரு புது சபதம்!

சில வரலாற்றுத் தருணங்கள் வரும்போதே ஒரு முன்னறிவிப்புடன் வரும். எதிர்காலத்தைக் கட்டமைக்கும் அந்நிகழ்வுகளில் பங்கேற்கும் வாய்ப்பு என்பது வரலாற்றையே மாற்றி எழுதுவது தான். அப்படிப்பட்ட தருணம் தமிழகத்திற்கு வருகிறது ஏப்ரல் 24-ல். நடைபெற்றுக் கொண்டிருக்கும் 16வது லோக்சபா தேர்தல், நமது நாட்டிற்கே திருப்புமுனையாக அமைந்திருப்பதை அனைவரும் உணர்ந்துள்ளனர். இத்தேர்தல் இதுவரை நாட்டில் நடைபெற்ற தேர்தல்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. கட்சி அரசியலை மீறி, அரசுக்கு எதிரான மனப்போக்கையும் தாண்டி, எதிர்கால நாயகர் ஒருவரை மையமாகக் கொண்டு நடைபெறும் இத்தேர்தலில், நரேந்திர மோடி என்ற சொல்லே பிரதானம். ஆதரவோ, எதிர்ப்போ, மோடி இப்போது பெற்றுள்ள முக்கியத்துவத்தை இதுவரை சுதந்திர... [மேலும்..»]

அரசியல்

மாற்றம் கொண்டுவரும் மாற்று அணி!

மாற்றம் கொண்டுவரும் மாற்று அணி!

“பாஜக கூட்டணி காலத்தின் கட்டாயம் சார். பொன்.ராதாகிருஷ்ணன் தனது தலைமையை நிரூபித்திருக்கிறார். இந்தக் கூட்டணி குறைந்தபட்சம் 10 முதல் 15 தொகுதிகளில் வென்றே தீரும்” என்றும் கூறினார் அந்த நடத்துனர். இந்த வார்த்தைகளில் ஒரு சதவிகிதம் கூட கலப்பில்லை. மிகத் தெளிவான, ஊரகப் பகுதி மனிதர் ஒருவரின் வாக்குமூலமாக இதை உணர முடிந்தது. அதன்பிறகு, எங்கள் பேச்சு, தொகுதிப் பங்கீடுகள், வேட்பாளர்கள் தேர்வு குறித்தெல்லாம் சென்றது. நடத்துனரின் அரசியல் அறிவு அதில் பளிச்சிட்டபடியே இருந்தது.... வெற்றி- தோல்விகள் அனைவருக்கும் பொதுவானவை. ஆனால், மகத்தான மாற்றங்களுக்கு முயற்சிப்பதே ஒரு பெரும் சாகசம். அந்த சாகசத்தில் தமிழக பாஜக வெற்றி... [மேலும்..»]

அரசியல்

நாடு முழுவதிலும் மோடி புயல்

நாடு முழுவதிலும் மோடி புயல்

16 வது லோக்சபா தேர்தல் நெருங்க நெருங்க, மோடி புயலின் வேகம் அதிகரிப்பது க்ண்கூடாகவே தெரிகிறது, மார்ச் 14-ம் தேதி வெளியான என்.டி.டி.வி.கருத்துக் கணிப்பின்படி, அவர்கள் ஆய்வு செய்த 319 தொகுதிகளில் 166 தொகுதிகளை வெல்லும் நிலையில் தே.ஜ.கூட்டணி உள்ளது தெரியவருகிறது. இதில் பாஜக மட்டுமே 146 இடங்களில் வெல்லும் என்று கணிக்கப்படுகிறது. (இக்கருத்துக் கணிப்பு தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி உருவாகும் முன்னர் எடுக்கப்பட்டது. தமிழகத்திற்கு இக்கணிப்பு பொருந்தாது) அதாவது தே.ஜ.கூட்டணியின் வெற்றி வாய்ப்பு சதவிகிதம் 60 சதவிகிதத்தையும் தாண்டியுள்ளது. இதே நிலை தேர்தல் வரை நீடித்தால் பாஜக தலைமையிலான கூட்டணி 300-க்கு மேற்பட்ட இடங்களில்... [மேலும்..»]

அரசியல்

தமிழகத்தில் அமைந்தது மாற்று அணி!

தமிழகத்தில் அமைந்தது மாற்று அணி!

எண்ணியிருந்தது ஈடேறுகிறது! தமிழகத்தில் இரு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்றாக பாஜக தலைமையில் புதிய மாற்று அணி உருவாக வேண்டும் என்று தமிழ்ஹிந்து இணையதளம் கடந்த செப்டம்பர் மாதமே வலியுறுத்தியது. அநேகமாக, இந்தக் கண்ணோட்டம் அப்போது புதிய சிந்தனையாகவே இருந்தது. காண்க: தமிழகத்தில் மாற்று அணி அமையுமா?-1 பாஜகவின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படும் நரேந்திர மோடிக்கு மக்களிடம் பெருகிவரும் செல்வாக்கைப் பயன்படுத்தி தமிழ்கத்தில் தேமுதிக,  மதிமுக, பாமக கட்சிகளை ஒருங்கிணைத்து பாஜக தனி அணி அமைக்க வேண்டும் என்று நாம் வலியுறுத்தினோம். காண்க: தமிழகத்தில் மாற்று அணி அமையுமா?-2 இன்று நாம் எதிர்பார்த்த கூட்டணி அற்புதமாக அமைந்துவிட்டது. சில... [மேலும்..»]

அரசியல்

திக்குத் தெரியாமல் தவிக்கும் ராகுல்!

திக்குத் தெரியாமல் தவிக்கும் ராகுல்!

கடந்த 2013 ஜனவரி மாதம் ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் “பதவி அதிகாரம் என்பது விஷம் என்று நான் காங்கிரஸ் துணைத் தலைவராக பதவி ஏற்ற பின் என் தாய் என்னிடம் வருத்தப்பட்டு தெரிவித்தார்” என்று உணர்ச்சிப் பூர்வமாகப் பேசியிருந்தார் ராகுல் காந்தி.  அதை தலைப்புச் செய்தியாகவே வெளியிட்டு மகிழ்ந்தன 24 மணி நேர செய்தி அலைவரிசைகளும் ஆங்கில ஊடகங்களும். அதுகுறித்து  மேலும் விளக்கிய அவர்,  “பதவி அதிகாரம் என்பது விஷம் தான். பதவி அதிகாரத்தால் சூழ்ந்து கொள்ளும் ஆபத்துக்ளை கையாளத் தெரியாமல் போகும் போது அது விஷமாகிறது. மேலும், அதிகாரத்தை பொதுநலத்திற்காக பயன்படுத்தாமல் சுயநலத்துக்காகப் பயன்படுத்தினால்... [மேலும்..»]

அரசியல், பயங்கரவாதம்

மோடியைக் கொல்ல நடந்த சதி? – பாட்னா குண்டுவெடிப்பின் பின்புலம்

மோடியைக் கொல்ல நடந்த சதி? – பாட்னா குண்டுவெடிப்பின் பின்புலம்

பிகார் மாநிலம், பாட்னாவில், அக். 27-இல் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் ஹூங்காரப் பேரணி (கர்ஜனைப் பேரணி) மீது நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதல்களில் 6 பேர் பலியாகியுள்ளனர். பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பங்கேற்ற இந்த மாபெரும் பேரணியைக் குலைக்க சதிகாரர்கள் நடத்திய இந்த விபரீதத் தாக்குதலில் மோடி இறைவன் அருளால் தப்பியது தற்போது தெரியவந்துள்ளது. சுயநல அரசியல்வாதிகளும் இஸ்லாமிய பயங்கரவாதிகளும் இணைந்து நடத்திய இந்தச் சதிராட்டத்தை பாஜகவினர் தங்கள் பெருந்தன்மையான அணுகுமுறையாலும், நிதானத்தாலும், உயரிய கட்டுப்பாட்டாலும் தவிடுபொடி ஆக்கியுள்ளனர். ஒரு முன்னோட்டம்: பிகார் தலைநகரமான பாட்னாவில் பாஜகவின் கர்ஜனைப் பேரணியை நடத்துவதாக அறிவிக்கப்பட்டதில்... [மேலும்..»]

அரசியல், நிகழ்வுகள்

ஊழலுக்காக நாடாளுமன்ற ஜனநாயகம் முடங்கலாமா?

ஊழலுக்காக நாடாளுமன்ற ஜனநாயகம் முடங்கலாமா?

அன்று ஸ்பெக்ட்ரம் ஊழல் (ரூ. 1.76 லட்சம் கோடி) குறித்து சி.ஏ.ஜி அம்பலப் படுத்தியவுடன் அதற்கு பொறுப்பாக இருந்த ஆ.ராசாவை பதவி விலகச் செய்த காங்கிரஸ் கட்சி, அதே போன்ற நிலக்கரி சுரங்க ஊழலை (ரூ. 1.86 லட்சம் கோடி) சி.ஏ.ஜி அம்பலப் படுத்தியவுடன் அதற்கு பொறுப்பாக இருந்த மன்மோகன் சிங்கை நீக்குவது தானே முறை? தொலைதொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா ஸ்பெக்ட்ரம் ஊழலுக்காக பதவி விலகுவது கட்டாயம் என்றால், நிலக்கரித் துறையை 2005 முதல் 2009 வரை தன்வசம் வைத்திருந்த மன்மோகன் சிங் நிலக்கரி ஊழலுக்காக பதவி விலகுவது தானே சரியானது? ... [மேலும்..»]

அரசியல்

குடியரசுத் தலைவருக்கான காங்கிரசின் அற்புத அளவுகோல்கள்

குடியரசுத் தலைவருக்கான காங்கிரசின் அற்புத அளவுகோல்கள்

உலகையே உறைய வைத்த இந்திய ஜன நாயகத்தின் கறுப்பு பக்கமாக வர்ணிக்க படும் எமர்ஜென்சியின் முக்கிய சதிகாரர் தான் நம் குடியரசுத் தலைவர் - ஜன நாயகத்தின் உச்சமான நாடு என மதிக்கப்படும் ஒரு நாட்டின் முதல் குடிமகன்... 1980,82 வாக்கில் வர்த்தக துறை & உருக்கு, சுரங்க அமைச்சராக இந்திய கனிம வளங்களை சூறையாட அனுமதிக்கிறார் பிரணாப்.. சத்பால் மிட்டல் நிறுவனத்தின் நலனுக்காக இந்திய தொலை தொடர்பு துறையின் வளர்ச்சியையே முடக்கி வைத்தார்... பாதுகாப்புதுறை அமைச்சராக ஸ்கார்பென் நீர்மூழ்கி பேரத்தில் பெரும் தொகையை கமிஷனாக பெறுகிறார். வெளியுறவு அமைச்சராக மிக ஆபத்தான 123 ஷரத்தில்,இந்திய... [மேலும்..»]

அரசியல், நிகழ்வுகள்

முகர்ஜியை ஜனாதிபதி ஆக்கிய பானர்ஜி

முகர்ஜியை ஜனாதிபதி ஆக்கிய பானர்ஜி

ஐ.மு.கூட்டணி ஆட்சியைப் பொறுத்த வரை, கட்சிக்கு சோனியா தலைவராகவும், ஆட்சிக்கு நிழல் தலைமை வகிப்பவராக முகர்ஜியும் இருந்தனர். எனவே தான் முகர்ஜியை வேவு பார்க்கும் பணிகளில் சோனியா சத்தமின்றி ஈடுபட்டுவந்தார்... பானர்ஜி மட்டும் கலாமை தனது விருப்பத் தேர்வாக முன்வைக்காமல் இருந்திருந்தால், அன்சாரியை ஜனாதிபதி ஆக்கி இன்னொரு பொம்மையை அங்கு அமர்த்தி இருப்பார் சோனியா. அதற்கு வழி இல்லாமல், இப்போது தன்னிச்சையாக இயங்கும் பிரணாப் முகர்ஜியை சோனியாவே அறிவித்திருக்கிறார்... கலாமை மீண்டும் தேர்வு செய்யும் அற்புதமான வாய்ப்பு அவர்கள் முன்பு வந்தது. ஆனால், குறுகிய அரசியல் லாபங்களுக்காகவும், தனிப்பட்ட அரசியல் அபிலாஷைகளுக்காகவும் இந்த வாய்ப்பை தவற... [மேலும்..»]

அரசியல், நிகழ்வுகள்

தேர்தல் களம்: கழகங்களுக்கு மாற்றாகும் பாஜக

தேர்தல் களம்:  கழகங்களுக்கு மாற்றாகும் பாஜக

கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரு பெறும் தலைகளிடையே, இரு கழகங்களின் பணபலத்திடையே, கொள்கையற்ற இரு கூட்டணிகளிடையே போராடுவது பத்மவியூகத்தில் அபிமன்யூ போராடுவது போன்றது தான். பாரத அபிமன்யூவுக்கு உதவிகள் தடுக்கப்பட்டன. ஆனால், தமிழக பாஜகவின் உதவிக்கு வந்திருக்கிறது பிற மாநில முதல்வர்கள் படை. எனவே, இந்த அபிமன்யூ களத்தில் சாதித்துக் காட்டுவான். [மேலும்..»]