Posts Tagged ‘ தேமுதிக ’

நாடும் நமதே! நாற்பதும் நமதே!

தமிழக தேர்தல் களத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே சாதகமான நிலை நிலவுகிறது. வெல்ல வேண்டிய அணியும், வெல்ல வாய்ப்பு அதிகமுள்ள அணியும் தேசிய ஜனநாயகக் கூட்டணியாகவே இருப்பது மகிழ்ச்சியே. எனினும், வெற்றி பெறும் வேட்பாளர்களின் வாக்கு வித்தியாசத்தை பெருமளவில் மாற்றிக் காட்டுவதே, கடந்த ஐந்தாண்டு கால பாஜக ஆட்சிக்கு தமிழகம் அளிக்கும் நன்றிக்கடனாக இருக்கும். [மேலும்..»]

அதிமுக- பாஜக கூட்டணி அமையுமா?

காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்திருந்தால் அதிமுக அரசு இந்நேரம் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கும் என்பதை அனைவரும் அறிவர். இப்போதே, ‘மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், அதையடுத்து தமிழகத்தில் செயல்படாத அதிமுக அரசு வீட்டுக்கு அனுப்பப்படும்’ என்று திமுக தலைவர்கள் பேசி வருகின்றனர். எனவே, அதிமுகவுக்கு ராஜதந்திரத்துடன் யோசிக்க வேண்டிய தருணம் இது. [மேலும்..»]

மீண்டும் அம்மா: மீளாத தமிழக அரசியல்

தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் அம்மாவுக்கு மீண்டும் அரியணையைத் தந்துவிட்டன. ஆளுங்கட்சி மீதான அதிருப்தி அலையை மீறி, மீண்டும் வெற்றி பெற்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஆறாவது முறையாக முதல்வராகி இருக்கிறார். அதேசமயம், மாற்று அரசியலுக்கான வாய்ப்பு என்ற கருதுகோள் இந்த முடிவுகளில் மிகக் கடுமையாக நிராகரிக்கப்பட்டிருக்கிறது. தமிழக அரசியல் களம் திமுக- அதிமுக என்ற இரு திராவிட அரசியல் கழகங்களிடையிலான வேட்டை மைதானமாக மாறி இருக்கிறது. இதை மாற்ற இம்முறை அருமையான வாய்ப்பு உருவாகி இருந்தது. ஆனால், மூன்றாவது அணி என்ற பெயரில் உருவான கோமாளிக் கூட்டணியால் அந்த வாய்ப்பு தகர்க்கப்பட்டுள்ளது. தன்னை அதீதமாக முன்னிறுத்திய... [மேலும்..»]

தமிழகத்தின் எதிர்காலம் உங்கள் கையில்…

இரு திராவிடக் கட்சிகளும் அந்திம திசையில் உள்ளன. கட்சித் தலைமையை மையம் கொண்ட இவ்விரு கட்சிகளுக்கும் நீண்ட எதிர்காலம் இல்லை. விரைவில் ஏற்படவுள்ள அந்த வெற்றிடத்தை நிரப்ப மாற்று சக்தி வேண்டும். மாற்று அரசியலிலும் இங்கு மும்முனைப் போட்டி உள்ளது. ம.ந.கூ, பாமக, பாஜக அணிகளிடையே எதனை மாற்று அரசியலாக நீங்கள் கருதுகிறீர்கள்? உருப்படாத இடதுசாரிகளை சுமையாகக் கொண்ட மக்கள் நலக் கூட்டணியுடன் கைகோர்த்த விஜயகாந்த் தலைமையிலான அணியா? வன்னியர்களின் வாக்கு வங்கியை மட்டுமே பிரதானமாகக் கொண்டு வாய்ச்சவடால் பேசும் பாமகவா? தமிழகத்தின் அரசியல் சூழலை முற்றிலும் மாற்றத் துடிக்கும் சித்தாந்த பலம் கொண்ட பாஜகவா?... [மேலும்..»]

தமிழக தேர்தல் 2016: ஒரு வேண்டுகோள் – 3 (தீயசக்தி ம.ந.கூ)

அதே ஊழல்கள், அதே ரவுடித்தனங்கள், அதே கொலை கொள்ளைகள், அதே செயல்பாட்டின்மை, அறிவின்மை, திறமையின்மை அதே மக்கள் விரோதப் போக்குகள் அதே ஜாதீய வெறித்தனங்கள் நிறைந்த ஒரு கூட்டணி. ம.ந.கூ என்ற அமைப்பில் இந்தியாவின் அனைத்து விதமான தேசத் துரோகிகளும் ஒன்று கூடியிருக்கிறார்கள். மக்களை பிச்சைக்காரர்களாக ஏழைகளாக வைத்திருப்பதன் மூலமாக மட்டுமே தங்களது அரசியல் அதிகாரத்தைத் தொடர முடியும் என்று நம்பும் நச்சுக் கிருமிகள், நாசகார ஏஜெண்டுகளான மார்க்சிஸ்டுகள் இந்தக் கூட்டணியில் இருப்பதினால் மட்டுமே கூட இது கண்டிப்பாக எதிர்க்கப் பட வேண்டும். இவர்களை ஆதரித்தால் ஒட்டு மொத்த இந்தியாவின் ஒற்றுமைக்கே அதன் இருப்புக்கே... [மேலும்..»]

போலி கோஷத்தின் பொல்லாத பின்னணி

போலி கோஷத்தின் பொல்லாத பின்னணி

  ‘ஆசை இருக்கிறது தாசில் செய்ய அதிர்ஷ்டம் இருக்கிறது கழுதை மேய்க்க’ என்ற பழமொழியைக் கேட்டிருப்பீர்கள். இது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, தமிழகத்தை ஆளும் கனவுடன் வலம் வந்துகொண்டிருக்கும் பாமகவுக்கு நிச்சயமாகப் பொருந்தும். பாமகவினர் அண்மைக்காலமாக செய்துவரும் அலப்பறைகளைக் கண்ணுறும் எவரும், சற்றே கதிகலங்கிப் போவார்கள். உண்மையிலேயே அன்புமணிக்கு முதல்வர் கனவு வந்துவிட்டதா? அல்லது, தந்தையின் இயக்கத்தில் முதல்வன் வேடத்தில் அன்புமணி நடிக்கும் ஏதாவது புதிய திரைப்படம் தயாரிக்கும் முஸ்தீபா? “அன்புமணியை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி” என்று எப்படித்தான் நெஞ்சு நிமிர்த்தி அறைகூவல் விடுக்கிறார் ராமதாஸ்? காண்க: அன்புமணியே முதல்வர் வேட்பாளர் பா.ஜ.,வுக்கு ராமதாஸ்... [மேலும்..»]

விழுப்புரம் சேஷசமுத்திரத்தில் சாதிய வன்கொடுமை சம்பவம்

கோவில் முன்பு தேரோட்டத்துக்காக அலங்கரித்து நிறுத்தப்பட்டிருந்த தேர் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் தேர் தீப்பற்றி எரிந்து முற்றிலும் சேதமானது. காலனி பகுதியில் உள்ள வீடுகள் மீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் 8 வீடுகள் தீப்பற்றி எரிந்தன... இந்த வன்கொடுமை சம்பவம் தமிழ் இந்துக்கள் அனைவருக்கும் தலைக்குனிவை ஏற்படுத்தும் ஒன்று. இது உருவாக்கியுள்ள காயங்களுக்கும் ரணங்களுக்கும் உடனடியாக நிவாரணம் அளிக்கப் பட வேண்டும். தற்போதைய சூழலில், அதற்கான பொறுப்பும் தார்மீக உரிமையும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத் தலைவர் தவத்திரு பங்காரு அடிகளாரைச் சேர்ந்தது... [மேலும்..»]

குழப்ப நிலையில் தமிழக அரசியல்

குழப்ப நிலையில் தமிழக அரசியல்

தமிழக அரசியல் இதுவரை காணாத குழப்ப நிலையில் தத்தளிக்கிறது. ஆளும் அதிமுகவும் முக்கிய எதிர்க்கட்சியான திமுகவும் திசைகாட்டி இல்லாத கப்பல் போலத் தள்ளாடுகின்றன. பிரதான எதிர்க்கட்சியான தேமுதிக, மாநிலத்தில் ஓரளவு செல்வாக்கு உள்ள பாமக, மதிமுக, இடதுசாரி கட்சிகள் அனைத்திலுமே ஒருவித செயலற்ற தன்மை காணப்படுகிறது. தேசிய அளவிலான ஆளும் கட்சியான பாஜக இன்னமும் தன்னை மாநில அரசியலுக்குள் நிலைநிறுத்திக் கொள்ளாமல் தவிக்கிறது. விடுதலைப் போராட்டக் காலத்தில் தேசிய அளவில் வழிகாட்டிய தலைவர்களைக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியின் நிலையைச் சொல்லவே வேண்டாம். திமுக- அதிமுக என்ற இரு துருவ அரசியலுக்குள் ஏதாவது ஒரு அணியில் இடம் பெறுவதே... [மேலும்..»]

இலக்கின்றித் தவிக்கும் தமிழக தே.ஜ.கூட்டணி

இலக்கின்றித் தவிக்கும் தமிழக தே.ஜ.கூட்டணி

மிகுந்த எதிர்பார்ப்புடன் தமிழகத்தில் அமைக்கப்பட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை ஈட்டாமல் போனது தமிழகத்தின் துரதிர்ஷ்டமே. ஆளும் கட்சியான அதிமுகவின் அசுரத்தனமான வெற்றியால் தமிழக தே.ஜ. கூட்டணி நிலைகுலைந்திருப்பது, கூட்டணித் தலைவர்களின் மௌனத்திலேயே புலப்படுகிறது. இந்தக் கூட்டணி இனிவரும் காலத்தில் நீடிக்குமா என்ற கேள்வியும் எழத் துவங்கிவிட்டது இந்தக் கேள்விக்கு விடை காணும் முன்னர், நாடு முழுவதும் வெற்றியை ஈட்ட முடிந்த மோடி அலை தமிழகத்தில் செல்லுபடியாகாமல் போனதன் காரணம் என்ன என்று ஆராய்வது அவசியம். இந்தத் தேர்தலில் நரேந்திர மோடி என்ற பெயரே மந்திரம்போல மாறியதை களத்தில் கண்டோம். பிற மாநிலங்கள்... [மேலும்..»]

பாஜக சாதிக்க இயலாத மாநிலங்கள்- ஒரு மதிப்பீடு

பாரதப் பிரதமராக மோடியை ஏகோபித்த ஆதரவுடன் இந்தியா தேர்ந்தெடுத்துவிட்டது. இதுவரை காணாத வகையில் பாஜக மட்டுமே தனித்து 282 இடங்களில் வென்றதுடன், மொத்தத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 336 இடங்களில் வென்றுள்ளது. அதேசமயம், தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களில் மட்டும் பாஜகவால் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியவில்லை. இம்மாநிலங்களின் அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்க வேண்டிய தருணம் இது. இம்முறை நாடு முழுவதுமே பாஜக வலுவாகக் காலூன்றி உள்ளது. மோடியே சொன்னது போல, இது காங்கிரஸுக்கு எதிரான அலை மட்டுமல்ல, பாஜகவுக்கு ஆதரவான அலையும் கூட. அதனால் தான் இதுவரை கணக்கைத் துவங்காத பல... [மேலும்..»]

Josh Oliver Authentic Jersey