Posts Tagged ‘ தேர்தல் 2014 ’

அரசியல்

காங்கிரஸ் தோல்வி: சொல்லப்படாத நான்கு முக்கிய காரணங்கள்

காங்கிரஸ் தோல்வி: சொல்லப்படாத நான்கு முக்கிய காரணங்கள்

தேசத்தை புரிந்த அமைச்சர்கள் இருந்தாலும் கூட அவர்களும் தேர்ந்தெடுக்கப்படாத இந்த நிழல் அமைச்சரவையான என். ஏ.சி.க்குத்தான் அடிபணியும் நிலை... பொதுமக்களோடு சற்றும் தொடர்பில்லாத, அவர்களது அத்தியாவசியத் தேவைகளை சற்றும் புரிந்து கொள்ளாமல் அவர்களை அவமதித்து வந்த திட்டக் கமிஷன் துணைத் தலைவர் அலுவாலியா...எந்த நிலையிலும், பிரதமர் மன்மோகன்சிங் அதிகாரம் படைத்தவராக ஆகிவிடக் கூடாது என்று காங்கிரஸ் கட்சி பார்த்துக் கொண்டது. எனவே அவரையும் பொதுமக்களோடு தொடர்பற்றவாராகவே இருத்திவந்ததது. காங்கிரஸ் கட்சியின் அனைத்துத் தலைவர்களும் அவர் பலவீனமற்றவாராக இருப்பதையே விரும்பினர்... " உலகு தழுவிய ஜிகாதிய பயங்கரவாதம் அல்ல, தேசமெங்கும் பரவியுள்ள பெரும்பாண்மை... [மேலும்..»]

அரசியல், தேசிய பிரச்சினைகள்

புதிய பாரதம் மலர்கிறது

May 17, 2014
-
புதிய பாரதம் மலர்கிறது

நரேந்திர மோதியின் வெற்றி என்பது ஒரு அரசியல் தலைவரின், அரசியல் கட்சியின் வெற்றி மட்டுமல்ல. ஒரு மகத்தான இந்தியக் கனவின் வெற்றி. மிக எளிய குடும்பத்தில் பிறந்து, வறுமையிலும் கடும் உழைப்பிலும் வளர்ந்து, தனது தாய் தந்தையரின் குடும்பத்தினரின் தியாகங்களையும் அபேட்சைகளையும் சுமந்து, மலினமான அரசியல் சூழலுக்கு நடுவிலும் வீரம் தேசபக்தி, நேர்மை, தன்னலமின்மை, எளிமை, தியாகம், மன உறுதி ஆகிய உன்னதப் பண்புகளைக் கைவிடாமல் அல்லும் பகலும் அயராது உழைத்து, படிப்படியாக உயர்ந்து நாட்டின் தலைமைப் பதவியை எட்டியிருக்கும் ஒரு மாமனிதரின் சரித்திரம் எழுதப் படும் தருணம் இது. "Ab ki bar Modi Sarkar"... [மேலும்..»]

அரசியல், தேசிய பிரச்சினைகள்

தேர்தல் ஆணையத்தின் அராஜகம்

தேர்தல் ஆணையத்தின் அராஜகம்

ஒரு 20 வருடங்களுக்கு முன்பாக இந்தியா முழுவதுமான பாராளுமன்றத் தேர்தல்கள் ஒரு சில தினங்களில் நடத்தி முடிக்கப் பட்டு உடனே முடிவுகள் அறிவிக்கப் பட்டன. ஆனால் பரவலான நவீனமான தொலைத் தொடர்பு வசதிகளும் தேர்தல் இயந்திரங்களும் இருக்கும் இன்றைய சூழலிலும் கூட தேர்தல் நடத்த 2 மாதங்கள் எடுத்துக் கொள்வது கண்டிக்கப் பட வேண்டிய ஒரு மோசமான திறனற்ற செயல்பாடாகவே கருதப் படும்... தேர்தலை ஒரு வாரத்திற்குள் நடத்தி முடிக்க வக்கில்லாத இந்தத் தேர்தல் ஆணையம் பல காலத்திற்கு ஒவ்வாத சட்டங்களை மட்டுமெ அதிகாரத் திமிருடன் ஒரு தலை பட்சமாக பயன் படுத்தி வருகிறது. தவறு செய்பவர்களையும்... [மேலும்..»]

அரசியல், சமூகம், பொருளாதாரம், வழிகாட்டிகள்

மோதியும் சிறுதொழில் வளர்ச்சியும்: ஒரு நேரடி அனுபவம்

மோதியும் சிறுதொழில் வளர்ச்சியும்: ஒரு நேரடி அனுபவம்

இந்த வருடம் குஜராத் பட்டத் தொழில் எழுநூறு கோடி ரூபாய் அளவு வளர்ந்துள்ளது. 2003 ஆம் ஆண்டு வாக்கில் சுமார் ஒரு இலட்சம் சாமானியக் குடும்பங்களே ஈடுபட்டிருந்த ஒரு குடிசைத் தொழிலை எடுத்துக் கொண்டு, அதைப் பத்து வருட காலத்தில் திரு.மோதி பிரம்மாண்டமானதாக மாற்றியிருக்கிறார். இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து செய்து வரும் இந்தத் தொழிலில், தயாரிப்புப் பணிகளில் சாமானிய முஸ்லிம் மக்கள், குறிப்பாக பெண்களே பெருமளவு ஈடுபட்டுள்ளனர். 2003ல் பட்டத் தொழில் சம்பந்தமான பலவிதமான பிரச்னைகளையும் விவாதிக்கும் வகையில் மூன்று வெவ்வேறு குழுக்கள் அமைக்கப் பட்டன.... [மேலும்..»]

அரசியல்

இன்று வாக்களிக்கு முன்…

இன்று வாக்களிக்கு முன்…

2014 பாராளுமன்றத் தேர்தலில் இன்று வாக்களிக்கும் முன் இவற்றை எண்ணிப்பாருங்கள்.. [மேலும்..»]

அரசியல்

நாட்டிற்குத் தேவை நல்ல தலைமை!

நாட்டிற்குத் தேவை நல்ல தலைமை!

தேசபக்தியும், ஒட்டுமொத்த மக்களின் நலனில் அக்கறையும் கொண்ட ஒரு தலைவரே நமக்குத் தேவை. அவர் செயல் திறன் மிக்கவராகவும், அடுத்த தலைமுறைகளுக்காகத் திட்டங்களைத் தீட்டும் உறுதி படைத்தவருமாக இருக்க வேண்டும். சுயநலனையும், சுற்றி உள்ளவர்களின் ஆசாபாசங்களையும் மையமாக வைத்து முடிவெடுப்பராக அவர் இருக்கக் கூடாது... இந்தியப் பண்பாடு சீக்கிரமே மேலெழுந்து வேண்டும். இங்கு வாழும் ஒவ்வொரு மனிதனும் தனது திறமைகள் முழுவதையும் வெளிப்படுத்தும் வகையில் வாய்ப்புகள் பெருக வேண்டும். புத்துணர்வு மிக்க ஒரு புதிய இந்தியா உருவாக வேண்டும். நமது நாட்டைப் பாதித்து வரும் சிரமங்கள் வெகு சீக்கிரமே சரி செய்யப்பட வேண்டும்.... [மேலும்..»]

அரசியல், தேசிய பிரச்சினைகள்

மோதியின் குஜராத் மாடல்: ஓலங்களும் உண்மைகளும் – 2

April 19, 2014
-
மோதியின் குஜராத் மாடல்: ஓலங்களும் உண்மைகளும் – 2

பாஜகவுக்கு பெரிய அளவில் நிதி வழங்கும் கார்பரேட்கள் கூட, அவர்களது செயல்பாடுகள் அரசின் தொழில் கொள்கைகளுக்கு விரோதமாக இருக்கும் பட்சத்தில் மோதியிடம் இருந்து எந்த சலுகைகளையும் பெற்று விட முடியாது என்று உதய் மாஹூர்கர் தனது நூலில் பதிவு செய்கிறார். இதே கொள்கையை மோதி மத்திய அரசிலும் கடைப்பிடிக்கும் போது, தில்லி தர்பாரில் அரசியல் “நட்புகள்”, சலுகைகள், பிரத்யேக கவனிப்புகளின் வாயிலாகவே ஊதிப்பெருத்து வந்த ஊழல் சாம்ராஜ்யம் நிலைகுலைந்து அழியக் கூடும். அதனால் தான் மோடி பிரதமராக வருவதைக் குறித்து ஏற்கனவே அங்கு பெரிய கிலி பிடித்திருக்கிறது.... கடந்த எட்டு ஆண்டுகளில், குஜராத்தின்... [மேலும்..»]

அரசியல், தேசிய பிரச்சினைகள்

மோதியின் குஜராத் மாடல்: ஓலங்களும் உண்மைகளும் – 1

April 19, 2014
-
மோதியின் குஜராத் மாடல்: ஓலங்களும் உண்மைகளும் – 1

ஜெயலலிதா சொல்லும் வளர்ச்சிக் கதைகளுக்கும் குஜராத் மாடல் வளர்ச்சிக்கும் அடிப்படையிலேயே வித்தியாசம் உள்ளது. அந்த வளர்ச்சிக் கதைகளின் ஸ்கிரிப்டில் டாஸ்மாக் கடைகள், இலவசங்கள், எதேச்சாதிகாரம், மின் பற்றாக்குறை, விவசாய அழிவு, சகிக்க முடியாத ஊழல்கள் என்று பல மசாலாக்களை சேர்த்து வீழ்ச்சிக் கதையாக மாற்றிக் கொண்டிருக்கும் இயக்குனர் கதாசிரியர் ஹீரோயின் தான் ஜெயலலிதா. மோதியின் குஜராத் மாடல் குறித்து பொதுவாக எழுப்படும் கேள்விகளையும் குற்றச் சாட்டுகளையும் சுருக்கமாக இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.... சிறுகுழந்தைகள் மரண விகிதம் (Infant Mortality Rate), பேறுகாலத் தாய்மார்கள் மரண விகிதம் (Mother Mortality Rate) ஆகியவற்றில் குஜராத் தேசிய அளவிலான... [மேலும்..»]

அரசியல்

மோடி திருமணத்தை மறைத்தாரா?

மோடி திருமணத்தை மறைத்தாரா?

  இதுநாள் வரை நரேந்திர மோடி திருமணமாகாதவர், பிரம்மச்சாரி என்று கருதப்பட்டவர், வதோதரா தொகுதியில் போட்டியிட  தன்னுடைய வேட்பு மனுவைத் தக்கல் செய்தபோது,  தான் மணமானவர் என்பதையும், மனைவியின் பெயர் யசோதா பென் என்பதையும் சொல்லியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  குறிப்பாக காங்கிரஸ்,  தி.மு.க. ஆகிய கட்சிகளிடையே இந்த விவகாரம், வெறும் வாயை மெல்லுவோர்க்குக் கிடைத்த அவலாகவே பயன்படுத்தப்படுகிறது. இன்றைய தலைப்பாகப் பேசப்படுகிறது. நாட்டில் நிலவும் ஏராளமான பிரச்னைகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், விழுப்புரத்தில் மு.கருணாநிதி தன் அருகில் துணைவியார் ராசாத்தி அம்மாளை (ஒருகாலத்தில் இவரை யார் என்றே தெரியாது என்று சொன்ன புண்ணியவான் தான் கலாகார்)... [மேலும்..»]

அரசியல், பொது

புத்தாண்டில் ஒரு புது சபதம்!

புத்தாண்டில் ஒரு புது சபதம்!

சில வரலாற்றுத் தருணங்கள் வரும்போதே ஒரு முன்னறிவிப்புடன் வரும். எதிர்காலத்தைக் கட்டமைக்கும் அந்நிகழ்வுகளில் பங்கேற்கும் வாய்ப்பு என்பது வரலாற்றையே மாற்றி எழுதுவது தான். அப்படிப்பட்ட தருணம் தமிழகத்திற்கு வருகிறது ஏப்ரல் 24-ல். நடைபெற்றுக் கொண்டிருக்கும் 16வது லோக்சபா தேர்தல், நமது நாட்டிற்கே திருப்புமுனையாக அமைந்திருப்பதை அனைவரும் உணர்ந்துள்ளனர். இத்தேர்தல் இதுவரை நாட்டில் நடைபெற்ற தேர்தல்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. கட்சி அரசியலை மீறி, அரசுக்கு எதிரான மனப்போக்கையும் தாண்டி, எதிர்கால நாயகர் ஒருவரை மையமாகக் கொண்டு நடைபெறும் இத்தேர்தலில், நரேந்திர மோடி என்ற சொல்லே பிரதானம். ஆதரவோ, எதிர்ப்போ, மோடி இப்போது பெற்றுள்ள முக்கியத்துவத்தை இதுவரை சுதந்திர... [மேலும்..»]