ப.சிதம்பரம்: தரித்திரனிடம் தார்மிகம் பேசலாமா?

2009 மே மாதம் நடந்த 15 வது நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுக வேட்பாளர் இல்லாத நேரம் பார்த்து, கடைசி சுற்றில் அதிக வாக்குகள் பெற்றதால், 3,354 வாக்குகள் வித்தியாசத்தில் ப.சிதம்பரம் வென்றதாக அறிவிக்கப்பட்டது. தேர்தலில் இரண்டாமிடம் பெற்ற ராஜ கண்ணப்பன் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். கடந்த ஜூன் 7 ம் தேதி, ராஜ கண்ணப்பனின் மனுவை எதிர்த்து ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கட்ராமன், ப.சிதம்பரத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனால் ப.சி. நீதிமன்றக் கூண்டில் ஏற வேண்டி வரும். இதே போன்ற நிலைக்காகத் தானே திமுக அமைச்சர்கள் தயாநிதி, ஆராசா ஆகியோர் பதவி விலகினர். இப்போது ப.சி. பதவி விலகத் தேவையில்லை என்கிறதே காங்கிரஸ்! திமுகவுக்கு ஒரு நியாயம், காங்கிரசுக்கு ஒரு நியாயமா? ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ என்று முரசறைந்த அதே மதுரையில் இருந்து வெளிவந்துள்ள இத்தீர்ப்பு என்ன விளைவை ஏற்படுத்தும்?

View More ப.சிதம்பரம்: தரித்திரனிடம் தார்மிகம் பேசலாமா?

கட்சிகளுக்கு ஒரு ‘லிட்மஸ் சோதனை’ : ஜனாதிபதி தேர்தல்

காங்கிரஸ் தரப்பில் ஜனாதிபதி தேர்தலில் களம் இறக்கப்படுபவர் யார் என்பதே ஜுனில் தான் தெரியும். அதற்குள் நமது ஊடக அறிஞர் படை தனது வேலையைத் துவங்கிவிட்டது… தான் களத்தில் இருந்து விலகி இருக்கவில்லை என்பதை அப்துல் கலாம் கோடிட்டுக் காட்டி இருக்கிறார்… மாநில தலைவர்களின் அரசியல் ராஜதந்திரம் தான் அடுத்த ஜனாதிபதியை தீர்மானிக்கும் நிலையில் உள்ளது. அதை அந்தத் தலைவர்கள் உணர வேண்டும். பாஜக, இவ்விஷயத்தில் கூடுதல் ராஜதந்திரத்துடன் செயல்பட்டால், அடுத்த தேர்தலுக்கு முன்னதாகவே ‘ஊழல்’ காங்கிரஸ் கட்சிக்கு பாடம் கற்பிக்க முடியும்…

View More கட்சிகளுக்கு ஒரு ‘லிட்மஸ் சோதனை’ : ஜனாதிபதி தேர்தல்

கேரளம் – மீண்டும் சரித்திரம் திரும்புகிறதா?

கேரளா அரசின் தலைமைக் கொறடாவான பி.சி.ஜார்ஜ் அண்மையில் செய்தியாளர்களிடம், ”கேரளாவில் ஹிந்துக்கள் பெரும்பான்மையினர் என்பது வெறும் மாயை” என்று கூறி இருக்கிறார். ‘பெரும்பான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இந்த நாட்டைவிட்டு போய்விட வேண்டுமா?” என்று, அமைச்சரவை மாற்றத்தால் கொந்தளித்த என்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் சுகுமாரன் நாயர் கேட்டிருக்கிறார். தற்போது நிலவும் அரசியல் நிலைமை நீடித்தால், கேரளாவில் இருந்து ஹிந்துக்கள் அகதிகளாக பிற மாநிலங்களுக்கு (காஷ்மீர் ஹிந்துக்கள் போல) படையெடுக்க வேண்டிய நிலைமை வரலாம்

View More கேரளம் – மீண்டும் சரித்திரம் திரும்புகிறதா?

உத்திரப் பிரதேசத் தேர்தலும் காங்கிரஸ் கட்சியும்

2004ம் ஆண்டு மே மாதம் முதல் இன்று வரை மத்தியில் ஆட்சியில்
இருக்கின்ற கட்சி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு. 2004ல் கொடுத்த வாக்குறுதிகளை
நிறைவேற்றி உள்ளார்களா என்பதைப் பின்னோக்கிச் சென்று பார்த்தால் இவர்களின் செயல்பாடுகள் சந்தி சிரிக்கும். விலைவாசி
உயர்ந்து கொண்டே போகிறது, விலைவாசியைக் குறைக்க ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பதைப் பற்றி ராகுல்
காந்தி விளக்கமளிக்க வேண்டும்.

View More உத்திரப் பிரதேசத் தேர்தலும் காங்கிரஸ் கட்சியும்

அஸ்ஸாம், கேரளா அரசியல் மாற்றங்கள்: ஒரு பார்வை

ஹிந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் கண்ணூர், கோழிக்கோடு, கொல்லம், பாலக்காடு, ஆலப்புழா, திருவனந்தபுரம் மாவட்டங்களில் காங்கிரஸ் ஒரு சீட் கூட பெறவில்லை. கேரளா ஹிந்துக்கள் நன்றாக அரசியலை பார்க்க ஆரம்பித்துள்ளனர்… 2008 ஆண்டு அடுத்த தலைமுறை பங்களாதேசி முஸ்லிம்கள் உருவாயினர். உணவு,உடை மற்றும் தங்கும் இடம் அல்ல, இப்போது அவர்களுடைய முக்கிய நோக்கம் ஜிஹாத். எனவே தங்களது பழைய தலைமுறையினர் காங்கிரஸ் கட்சிக்கு காட்டிய நன்றி அவர்களுக்கு பிடிக்கவில்லை..

View More அஸ்ஸாம், கேரளா அரசியல் மாற்றங்கள்: ஒரு பார்வை

சிந்திப்பீர் வாக்களிப்பீர் – கார்ட்டூன்

இவங்களுக்கு ஓட்டுப் போட்டா அவங்க குடும்பத்துக்கே வளர்ச்சி..
தாமரைக்கு ஓட்டுப் போட்டா நம்ம நாட்டுக்கு வளர்ச்சி..
கொஞ்சம் யோசியுங்க..
தாமரைக்கு ஓட்டுப் போடுங்க.

View More சிந்திப்பீர் வாக்களிப்பீர் – கார்ட்டூன்

தேர்தல் களம்: சனிக்கிழமை 63ம் செவ்வாய்கிழமை 63ம்…

இதுவரை இருந்த மத்திய அரசுகளிலேயே மிக மோசமான, ஊழல்மயமான, கீழ்த்தரமான அரசு என்ற பெயரை ஏற்கனவே பெற்றுவிட்ட மன்மோகன் அரசுக்கு, இனிமேலும் தி.மு.க.வைக் காப்பது முடியாத காரியம் என்பது புரிந்துபோனது. ஐந்து மாநிலத் தேர்தலில் நான்கிலாவது காங்கிரஸ் வெல்ல வேண்டுமானால், ‘ஊழலை சகிக்க முடியாது’ என்பதை நாட்டு மக்களுக்கு தெளிவாக காங்கிரஸ் புரிய வைத்தாக வேண்டும் […]

View More தேர்தல் களம்: சனிக்கிழமை 63ம் செவ்வாய்கிழமை 63ம்…

தேர்தல் களம்: முதல் சுற்றில் முந்துகிறது அ.தி.மு.க

பா.ஜ.க.வுக்கு துரோகம் செய்த தி.மு.க.வுக்கு காங்கிரஸ் வடிவில் இப்போது பாடம் கற்பிக்கப் படுகிறது என்பது அவரது வாதம். எப்படி இருப்பினும், தி.மு.க- காங், கூட்டணி நிர்பந்தங்களின் அடிப்படையில் நீடிக்கவே வாய்ப்புள்ளது. எனினும் அதில், முன்பு போல தி.மு.க.வின் கரம் ஓங்கி இருக்காது என்பது நிதர்சனம்.

View More தேர்தல் களம்: முதல் சுற்றில் முந்துகிறது அ.தி.மு.க

இந்து வாக்கு வங்கி – ஒரு வேண்டுகோள்

இஸ்லாமிய கிறிஸ்தவ மக்கள் தங்களின் ஒற்றுமை காரணமாக மதத் தலைமையின் வேண்டுகோளை ஏற்று வாக்களிக்கின்றனர்… இந்துக்கள் அரசியல் அநாதைகள் ஆகி விடாமல் தடுத்திட, இந்து சமுதாய நலன் காத்திட– இந்து சமய குருநாதர்களின் திருவடிகளை வணங்கி அவர்களின் நல்லாசிகளுடன் துவக்கப்பட்டுள்ள ‘இந்து ஓட்டு வங்கி’க்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவு தரும்படி… அந்த ஓட்டைக் கையில் வைத்துள்ள நாம் தேச பக்தியோடும் தெய்வ பக்தியோடும் இந்து ஓட்டு வங்கியில் பதிவுசெய்து நாட்டு நலன் காத்திடுவோம்.

View More இந்து வாக்கு வங்கி – ஒரு வேண்டுகோள்

கருத்துக் கணிப்புகளும் கருத்துத் திணிப்புகளும்- 2

பெரும்பாலான தமிழக பத்திரிகையாளர்கள் தி.மு.க. தலைவரை கருணாநிதி என்று குறிப்பிடுவதில்லை; ‘கலைஞர்’ என்றே குறிப்பிடுவர். பத்திரிகையில் பட்டப் பெயர்களுக்கு இடமில்லை என்றபோதிலும், தமிழக பத்திரிகையாளர்கள் தொடர்ந்து இந்தத் தவறைச் செய்து வருகின்றனர். இதற்குக் காரணம் அவர்களது கலைஞர் மீதான உளச்சார்பு. இத்தகைய உளச்சார்பு இருப்பவரால், அ.தி.மு.க.வுக்கு ஆதரவான அலையை ஆமோதிக்க முடியுமா?

View More கருத்துக் கணிப்புகளும் கருத்துத் திணிப்புகளும்- 2