Posts Tagged ‘ தேவாரம் ’

ஆணைநமதென்றபிரான் – திருஞான சம்பந்தர்

சம்பந்த பெருமான் தமது பதிகங்கள் ஒவ்வொன்றின் திருகடைக்காப்பிலும் அப்பதிகங்களை ஒதுவதால் ஆன்மாக்கள் பெற்றுய்யும் பலன்களை எடுத்துரைப்பார். பல பதிகங்களில், பயன்களை கூறினாலும், அவர் அருளிய நான்கு பதிகங்களில் மட்டும் "*ஆணைநமதே *" என்று திருகடைக்காப்பில் அருளிப்பாடுகின்றார்... நம்பியாண்டார் நம்பிகள் போல் அக்கால மக்களுக்கும் இவ்வார்த்தை மிகவும் பிடித்துவிட்டது. அவர்கள் தங்கள் பெயராகவே வைத்துக்கொண்டனர். பிரான் மலை கல்வெட்டில், இத்தன்ம சாசனத்துள் கையெழுத்திட்டவருள் ஒருவர் "ஆணை நமதென்ற பெருமாள்" என்று உள்ளது... [மேலும்..»]

கைத்தடி மான்மியம் (அ) எந்த வயதில் இறைநம்பிக்கையை வளர்த்துக்கொள்வது?

‘ சாகப்போகிற நேரத்திலே சங்கரா ! சங்கரா ! என்று அழுது என்ன பயன் ? ‘ என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு . இந்தப் பழமொழி எதைக் காட்டுகிறது ? மிக இள வயதிலே இறைநம்பிக்கையை வளர்த்துக் கொள்வது நல்லவிஷயம் . இது அவரவர் கர்மாவை ஒட்டியது என்றாலும் , மனித முயற்சி என்று உண்டு என்று மறுப்பதற்கில்லை.. இளம் வயது - மனத்துடிப்பும் , உடலுறுதியும் உள்ள பருவம் . மிக முக்கியமாக உடல் திறன் . கிழ வயதில் இறை நம்பிக்கை கொண்டு எவ்வாறு நம் பாரத தேசம் முழுவதும் உள்ள... [மேலும்..»]

இராவணனின் சிவபக்தி: ஒரு சைவசமய விளக்கம்

இறைவன் முதலில் மறக்கருணை காட்டி பின்னர் அறக்கருணை நல்கி அரக்கனை வழி நடத்தியது அவன் பக்தன் அல்லமால் வேறு என்ன? இராவணன் இறைவனுக்கு பிரியமான சாம கானம் பாடி துதித்தான் என்றால் அவன் சிவபக்தன் இல்லையா?... இராமன், இராவணன் இருவருமே சிவபக்தர்கள்தாம். ஆயினும் இருவருக்கும் உளப்பண்பு வேற்றுமையுண்டு. இராவணனை, “மானன நோக்கியை தேவிதன்னை யொரு மாயையால், கானதில் வவ்விய காரரக்கன்” என்றும், பெரியோர் கூறும் “உரையுணராத” அகந்தையுடையவன் என்றும், “காமம் என்னும் உறு வேட்கை“ மிக்கவன் என்றும் சம்பந்தர் கூறினார். ‘ஈனமிலாப் புகழ் அண்ணல்’ என்ற தொடரால் இராமபிரானது நற்குணம் அனைத்தையும் கூறிப் பிள்ளையார்... [மேலும்..»]

மார்கழிமாதத் திருவாதிரை நாள் வரப் போகுதையே

பெரியோர்கள் பிறவாமையை வேண்ட, அப்பர் பெருமான் பிறப்புக்கு அஞ்சாமல், தில்லைத் திருக்கூத்தினைக் காணும் பேறு கிட்டுமாயின் மனித்தப் பிறவியும் வேண்டுவதே என்றார். இடையில் அப்பர் பெருமானுக்கு ஒரு ஐயம் வந்தது. தில்லைத் தரிசனம் பிறவியைக் கொடுக்குமோ? தில்லைச் சிற்றம்பலம் இப்பிறவியில் உலக வாழ்க்கைக்கு இன்றியமையாது வேண்டிய அன்னம் (சோறு) முதலிய பொருள்களைக் கொடுக்கும். மறுமையில் பொன்னுலகு (சுவர்க்கம்) முதலிய பதங்களையும் மீட்டும் பிறவி எடுக்காத வீட்டுலகையும் தரும். என்றாலும், இந்தப் பூவுலகில் என் அன்பு மேலும் மேலும் பெருகி இன்புறுவதற்கு ஏதுவாகத் தில்லையம்பலக் கூத்தினைத் தரிசிப்பதற்குப் பிறவியைத் தருமோ? எனக் கேட்கின்றார்... [மேலும்..»]

வேளாங்கண்ணி: உண்மையான வரலாறு என்ன?

June 22, 2016
By

வேளாங்கண்ணியின் உண்மையான, பழைய பெயர் “வேலன கண்ணி". அம்பிகைக்குத் தேவாரம் சூட்டிய திருநாமம் இது. இந்த ஊருக்கருகில் சுமார் 10 கிமி தொலைவில் ‘கருங்கண்ணி’ எனும் ஊரும் அமைந்துள்ளது. இப்பகுதியில் புதையுண்ட தெய்வச் சிலைகளும் ஐம்பொன் தெய்வத் திருமேனிகளும் மிகுந்த அளவில் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப் பட்டுள்ளன. இன்றைய வேளாங்கண்ணியில் ரஜதகிரீசுவரர் சிவாலயம் ஒன்றும் அமைந்துள்ளது. இது பழமையான ஆலயமா அல்லது இன்றைய கபாலீசுவரர் ஆலயம் போன்ற புத்துருவாக்கமா என்பதை ஆய்வுக்குட்படுத்த வேண்டும்... இது தொடக்கத்திலிருந்தே மகிமை கொண்ட கிறித்தவ திருத்தலமாக நம்பப்பட்டது என்கிறார்கள். ஆனால், வாரன் ஹேஸ்டிங்க்ஸ் முதல் மவுண்ட்பேட்டன் வரையில் இந்தியாவை ஆண்ட நாற்பதுக்கும் மேற்பட்ட... [மேலும்..»]

திருஞானசம்பந்தர் உண்ட ஞானப்பால்

"பர்வதராஜ குமாரியே, உனது திருமுலைப்பாலானது வித்தியாமய பாற்கடலாய் பெருகுகிறது என்று நினைக்கின்றேன். ஏதனாலெனில், கிருபை மிக்கவளான உன்னால் கொடுக்கப் பெற்ற திருமுலைப் பாலைப் பருகி தமிழ்க் குழந்தையான ஞானசம்பந்தப் பிள்ளை புலமை மிகுந்த இசைத்தமிழ்ப் புலவர்களில் தலைமகனாக ஆகி விட்டார்" என்கிறார் சங்கரர்... அம்மையும் அப்பரும் எதிரில் வந்த மாத்திரத்தில் ஜீவான்மாவை மறைத்திருந்த திரோதானசக்தியான மாயை நீங்கி விட சர்வக்ஞானமும் ஆன்மாவிடத்தில் பிரகாசிக்குமாம். இங்கு ஞானசம்பந்தருக்குப் பாலூட்டல் என்பது குரு மந்திரோபதேசம் செய்வது போன்ற வெளித்தோற்றமான ஆத்மசுத்தி கிரியை என்பர்.... [மேலும்..»]

தலைமகனாகி நின்ற தமிழ்ஞான சம்பந்தன்

திருஞான சம்பந்தர் தமிழகத்தில் பாலி, பிராகிருதம் முதலிய அயல்மொழிவழக்குகள் பெற்றிருந்த செல்வாக்கை ஒழித்து செந்தமிழ் வழக்கினை நிலைபெறச் செய்தார். தமிழிசையை முழுவதுமாக இறை அனுபவத்துக்கும், மெய்ஞ்ஞான உணர்வுக்கும் உரியதாக ஆக்கினார்; சமுதாயத்தின் அனைத்து மக்களுக்கும் இசையை உரியதாக மாற்றத்தினை விளைவித்தார்.... முதன் முதலில் வண்ணத்தை முழுமையாகக் கையாண்டவர் திருஞானசம்பந்தரே. தமிழ் எழுத்துக்களின் குறில் நெடில், வல்லோசை, மெல்லோசை, இடையோசை நீர்மைகளை அறிந்து ஒலியினை பயன்கொண்டு முழுமையாக வண்ணம் அமைந்த பாடல்களை முதலில் பாடியவரும் அவரே... சம்பந்தர் பாடியவை ‘எனதுரை தனதுரை’ என அவர் கூறியபடி சிவபரம்பொருள் உணர்த்தியபடிப் பாடியதாம். எனவே, சிவனது மொழி வேதாகமங்கள் என்பது... [மேலும்..»]

சைவத்திருமுறைகள் தொடரட்டும்…

இன்று எமக்குக் கிடைத்துள்ள அரும்பெருm சொத்தான சைவத் திருமுறைகள் பன்னிரெண்டும் ஒரே நேரத்தில் தொகுக்கப் படவில்லை என்பது தெளிவு... பதின்மூன்றாம் நூற்றாண்டுடன் முற்றுப்பெற்ற திருமுறைத் தொகுப்பை ஏன் தொடரக் கூடாது? இடையில் இருக்கிற எழுநூறாண்டுகளில் எத்தனையோ, சைவத்திருநூல்கள் மலர்ந்துள்ளன. அவற்றில் தகுதி கண்டு ஏன் திருமுறைகளாக இணைத்து வகுத்தலாகா? என்பதே இன்றுள்ள வினா. இத்திருமுறைத் தொகுப்பு காலத்தின் தேவையாக, சிவப்பணியாக மேன்மேலும் சிறப்புறுமா என்று சிந்திக்க வேண்டியிருக்கிறது... சைவத்தில் புரட்சிக்கும் புரட்சியாளர்களுக்கும் குறைவே இருக்கவில்லை. சேக்கிழார் அவ்வாறான ஒருவரே.... [மேலும்..»]

அஞ்சலி: திருவாவடுதுறை ஆதீனம்

நாகப்பட்டிணம் மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள திருவாவடுதுறை ஆதினம் 23வது பட்டம் குருமகாசந்நிதானம் சிவப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள் 22-நவம்பர் அன்று சிவனடி சேர்ந்தார். உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு அண்மையில் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.இந்நிலையில் மீண்டும் உடல்நலக் குறைவு அதிகரிக்கவே உயிர் பிரிந்தது. சுமார் 600 வருடங்களுக்கு முன்னர் தோன்றிய சைவ மடம் இது. நெடிய பாரம்பரியமும் சிறப்பும் கொண்ட திருவாவடுதுறை ஆதீன மடத்தின் 23 வது பட்டத்தை அலங்கரித்தவர் சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள் ஆவார். தமிழையும் சைவத்தையும் இரு கண்களாகப் போற்றி, ஆயிரக் கணக்கான சுவடிகளைப் பாதுகாத்தும், தமிழ்ப்... [மேலும்..»]

தாண்டவபுரம் நாவலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அறப்போராட்டம்

தாண்டவபுரம் நாவலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அறப்போராட்டம்

கோவை, பிப்ரவரி-2 வியாழன் காலை முதல் மாலை வரை - நமது சமயக் குரவர்களில் முதன்மையானவரான திருஞானசம்பந்த பெருமானை குறித்து அவதூறு செய்யும் தாண்டவபுரம் என்னும் நாவலை எதிர்த்து உண்ணாநோன்பு - அறப்போராட்டம்... [மேலும்..»]

Josh Oliver Authentic Jersey