Posts Tagged ‘ தை ’

பண்டிகைகள், வரலாறு, விவாதம்

பன்னிரு திங்களும் பௌர்ணமி மீன்களும்

பன்னிரு திங்களும் பௌர்ணமி மீன்களும்

தமிழ் மாதங்களின் பெயர்களுக்கும், விண்மீன்களின் பெயர்களுக்கும் தொடர்பு இல்லை என்ற பிதற்றலுக்கு ஆதாரபூர்வமான மறுமொழி இக்கட்டுரை.. பூர்வ ஆஷாடம் நட்சத்திரம் தற்போது பூராடம் எனத் தமிழில் வழங்குகிறது. இந்நட்சத்திரத்தில் முழுநிலா அமைகிற மாதம் ஆஷாடி என்று வழங்கத் தொடங்கி ஆடி எனத் திரிந்துள்ளது... கோள் என்ற சொல் கொள்ளுதல் அதாவது ஈர்ப்பு விசையால் ஒன்றையொன்று பற்றிக்கொண்டு இயங்குவது எனப் பொருள்படும். இந்த அளவிற்குத் தெளிந்த வானியல் அறிவு படைத்த நம் முன்னோர், கருணாநிதியின் பார்வையில் மூடர்களாகவோ, ஆரிய அடிமைகளாகவோதான் காட்சியளிப்பார்கள்... [மேலும்..»]

வரலாறு

திரிபே வரலாறாக? – தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை குறித்து..

February 23, 2012
-
திரிபே வரலாறாக? – தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை குறித்து..

1963-ல் திருவள்ளுவர் தினம் சூலையில் (ஆடி) வேண்டும் என்பது அண்ணாவின் கோரிக்கை. அதிலிருந்து மூன்றாவது ஆண்டு அதாவது 1966-இல், சூனில் (வைகாசி) திருவள்ளுவர் தினம் அறிவித்தவுடன், கோரிக்கை வைத்த அறிஞர் அண்ணா உட்பட அனைவரும் வரவேற்கின்றனர். அதிலிருந்து 3 ஆண்டிற்குள் கருணாநிதி 1970-இல், தை மாதத்தை திருவள்ளுவர் தினமாக அறிவிக்கிறார்! எண்கணிதம் படித்த வரலாற்று நிபுணர்களுக்கு, மூன்று என்பது ராசியான எண் போலும்! [மேலும்..»]

வரலாறு

வரலாறு.காமும் தமிழ்ப்புத்தாண்டும்

வரலாறு.காமும் தமிழ்ப்புத்தாண்டும்

வரலாறு என்பது சிலரின் விழைவுக் கற்பனையோ அல்லது பரப்புரைப் புனைவோ அல்ல. வரலாறு நமக்குக் கிடைத்திருக்கும் ஆதாரங்களாலேயே உருவாக்கப் படுகிறது. இதை பின்பற்றுபவர்கள் மட்டுமே வரலாற்று ஆய்வாளர்களாகவும் அறிஞர்களாகவும் இருக்க முடியும். வரலாற்று அறிஞர்களிடம் பல விஷயங்களில் இருக்கும் கருத்து வேற்றுமைகள் கூட கிடைக்கும் ஆதாரங்களை புரிந்தேற்றுக் கொள்வதில் வரும் மாறுபாடுகளாலேயே வருகின்றன. அவ்வாறு இருக்கும் போது எந்த ஆதாரமும் எந்த வகையிலும் இல்லாத தை மாத தமிழ்ப் புத்தாண்டு என்பதை ஒரு வரலாற்றுக்கான தளம் ஏற்றுக் கொள்வதோடு மட்டுமல்லாமல் அதை விதந்தோதுவதும் அதை ஏற்றுக் கொள்ளாதவர்களைப் பழிப்பதும் சற்றும் சகிக்கக்கூடியதாக இல்லை. [மேலும்..»]

பண்டிகைகள், பொது

சித்திரையில் தொடங்கும் புது வருடம் – 2

சித்திரையில் தொடங்கும் புது வருடம் – 2

60 வருடங்களும், நிலம், தட்பவெப்பம் குறித்து, சுழற்சி முறையில் மீண்டும் மீண்டும் வந்துள்ளன. இவற்றைக் குறித்தும் வைத்துள்ளனர். அதன் அடிப்படையில், வருடப் பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இன்று நாம் பின்பற்றும் வருடக் கணக்கு, நம் பகுதியில் உள்ள வெப்பம், பருவ மழை இவற்றைப் பொருத்ததே. வருடப் பலன்களை அறிந்து கொள்ள, அவற்றின் பெயர்களே போதும். அப்படி என்றால், இப்பெயர்களைத் தமிழ்ப் படுத்தி இருக்கலாமே என்று கேட்கத் தோன்றும். அது எளிதல்ல. பல பெயர்களுக்கும் சரியான மொழிபெயர்ப்பு தமிழில் மட்டுல்ல, பிற மொழிகளிலும் கிடையாது. தமிழ்விரும்பிகள் கோபப்படாமல் இதைப் படிக்க வேண்டும். [மேலும்..»]

பண்டிகைகள், பொது

சித்திரையில் தொடங்கும் புது வருடம் – 1

சித்திரையில் தொடங்கும் புது வருடம் – 1

தொல்குடி என்றும், செம்மொழி என்றும் நம் பழமையைப் பற்றி நாம் பேசும் அளவுக்கு அந்தப் பழமையின் மீதும், தொன்று தொட்டு வரும் பழக்க வழக்கங்களின் மீதும் நமக்கே மரியாதையும், நம்பிக்கையும் இருக்கவில்லை என்பதைப் பறைசாற்றும் ஒரு சான்றுதான், தையில் வருடப் பிறப்பு என்று பிரகடனம் செய்தது. [மேலும்..»]

பண்டிகைகள், பொது

தையில் புத்தாண்டு – தமிழ் மரபன்று!

தையில் புத்தாண்டு – தமிழ் மரபன்று!

ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழகத்தில் வழக்கிலிருக்கும் ஒரு பழக்கத்தை அரசாணையாலும் பொய்யான பரப்புரைகளாலும் அரசு மாற்ற முனைந்து கொண்டிருகிறது. அரசின் இந்த முனைப்பு தமிழ் மரபுக்கு சற்றும் பொருத்தமில்லாதது என்பதோடு தமிழ் மரபிற்கே எதிரானது... மேற்கொள்ள எந்த தரவுகளுமற்ற நிலையில் இது சிலரின் தனிப்பட்ட அபிலாஷை என்றே கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த அபிலாஷை நிறைவேற்றலை தமிழைக் கொண்டு செய்ய முற்படும்போது உண்மையான தமிழன்பர்கள் வெட்கமும் வருத்தமும் அச்சமும் கொள்ளவேண்டி இருக்கிறது. [மேலும்..»]