இராம காதையில் இரு தியாக தீபங்கள்

வனவாச காலத்தில் இராமனுக்கு ஏதாவது இடர் வந்தால், ஆபத்துக்கள் வந்தால் அவனுக்குத் தீங்கு நேரா வண்ணம் உன் உயிரைக் கொடுத்தாவது அத் துன்பத்தை நீ ஏற்றுக் கொள்.. இராமன் இல்லாமல் நீ திரும்பி வர வேண்டாம்” என்கிறாள் சுமத்திரை.. இலக்குவன் சமைத்த பர்ணசாலையைப் பார்த்த  இராமன் நெகிழ்ந்து போகிறான். இலக்குவன் எப்படி இந்தப் பர்ணசாலையைக் கட்டி முடித் தான்? என்னோடு வில்லைப் பிடித்து வில்வித்தை கற்ற கைகள் கொத்து வேலையை எப்போது யாரிடம் கற்றுக் கொண்டான்?’ என்றி உணர்ச்சிவசப்பட்டுப் பேசுகிறான்…. ராவணன் ஆத்திர மெல்லாம் வீடணன் மேல் திரும்புகிறது. உடனே மயன் தந்த வேலாயுதத்தை ஏவுகிறான். இந்த வேலை யார் மீது பிரயோகித்தாலும் அவர்கள் அழிவது திண்ணம். இதைக் கண்ட அனுமனும் அங்கதனும் கூட ஓடி வருகிறார்கள் அந்த வேலைத் தாங்கிக் கொள்ள. அங்கதனும் வாலியால் அடைக்கலமாகக் கொடுக்கப் பட்டவன் தானே! அதனால் எல்லோரையும் முந்திக் கொண்டு இலக்குவன் ஓடி வந்து வேலை ஏற்கிறான்…

View More இராம காதையில் இரு தியாக தீபங்கள்

எழுமின் விழிமின் – 14

நமது சொந்த மக்களினமாகிற கடவுள் மட்டும் தான் இப்பொழுது விழித்துக் கொண்டிருக்கிறார். எங்கு நோக்கினும் அவரது கைகள்; எங்கும் அவரது திருவடிகள்; எங்குமே அவரது காதுகள்.. நம்மைச் சூழ்ந்து காணப் படும் விராட் புருஷனை வழிபடாமல் வீணான மற்ற தெய்வங்களின் பின்னால் ஏன் போக வேண்டும்?… எல்லாவற்றையும் பரிகாசம் பண்ணுவது, எதைப் பற்றியும் முனைந்து சிந்தியாதிருப்பது ஆகிய இந்த நோய் நமது தேசிய இரத்தத்தில் நுழைந்திருக்கிறது. இந்த பயங்கர வியாதியை விட்டுத் தொலையுங்கள். வலிமையுடன் இருங்கள். சிரத்தையுடன் இருங்கள். மற்றவையெல்லாம் தாமாக வந்தடைந்தே தீரும்..

View More எழுமின் விழிமின் – 14

எழுமின் விழிமின் – 13

ஹிந்து சமயத்தைப் போல உயர்வாக மனித குலத்தின் மேன்மைச் சிறப்பைப் பற்றி வேறெந்தச் சமயமும் இந்த உலகத்தில் போதிக்கவில்லை. அத்துடன் ஏழை எளியவர்களின் கழுத்தின் மீது ஏறி மிதிக்கிற சமயமாக இவ்வுலகில் ஹிந்து சமயத்தைப் போல வேறெதுவும் இல்லை. இக்குற்றத்திற்குச் சமயம் பொறுப்பு அல்ல; ஹிந்து சமயத்திலுள்ள வெளி வேஷக்காரர்கள், வறட்டு ஆசாரவாதிகள் ஆகியோரே காரணம்… அறியாமை எனும் இருண்ட மேகம் இந்நாட்டைக் கவிந்திருக்கிறதென்பதை உணர்கிறீர்களா? அவ்வுணர்ச்சி உங்கள் மன அமைதியைக் குலைத்து, உங்களுக்குத் தூக்கமில்லாமல் செய்துவிடுகிறதா? அது உங்கள் குருதியில் கலந்து, இரத்தக் குழாய்களில் ஓடி, இதயத் துடிப்போடு சேர்ந்து துடிக்கிறதா?…

View More எழுமின் விழிமின் – 13

மதர் தெரசா: ஒரு பார்வை

தெரேசா ஏழைகளின் பாதுகாவலர் என்ற ஒரு பிம்பம் பரப்பப் பட்டாலும் அவர் பல நேரங்களில் பணக்காரர்கள் மத்தியிலும் அரசியல்வாதிகள் மத்தியிலும் தான் காணப்பட்டார். அவர் ஏன் கல்கத்தாவை தனது சேவைசெய்யும் இடமாக தேர்தெடுத்தார் என்றால் இங்கே தான் ஜனதொகையும் ஏழ்மையும் அதிகம். இது தன் ” மிஷினரி ஆப் சாரிடி”  நிறுவனத்தை வலுபடுத்த ஏழ்மையை பறைசாற்றி உலக கிருஸ்துவ பணக்காரர்களிடமிருந்து நன்கொடை பெற முடியும் என்பதை உணர்ந்திருந்தார். அத்தோடு அல்லாமல் இங்கே உள்ள அரைகுறை அரசியல்வாதிகள் அறிஞர்கள் பத்திரிகையாளர்கள் தன்தொண்டு நிறுவனத்தை குறை சொல்லமாட்டார்கள் என்ற நம்பிக்கையால். ஏழைகளிடமும் நோயாளிகளிடமும் கொடிய தொற்றுநோய் உள்ளவர்களிடமும் பொது மக்கள் பார்வையில் பரிவுகாட்டினார் என்பதை யாரும் மறுக்கமுடியாது. ஆனால் அந்த பாவனைதான் தொழிலின் மூலதனம் என்பது பலருக்கு தெரியாது..

View More மதர் தெரசா: ஒரு பார்வை

பெரியபுராணம்: இளைஞர் வாழ்வியலுக்கான ஒரு சமுதாயக் காவியம் – 2 [நிறைவுப் பகுதி]

இப்புராணத்தில் பேசப்பெறும் அநேகமான அடியவர்கள், இல்லறத்தினரே என்பதால் பரவலாக எல்லா நிலைகளிலும் பெரியபுராணத்தில் காதல், திருமணம், திருமணவாழ்வு முதலியன பேசப்பட்டிருக்கிறது… மனுநீதிகண்ட சோழனின் வரலாற்றைப் பேசும் போது நீதிமுறைமை மனிதர்களுக்கு மட்டுமல்ல, மிருகங்களுக்கும் பொருந்தும் என்று சேக்கிழார் புதுமை காட்டுகிறார்… இவற்றால் தமது காவியத்தை புரட்சிக் காவியமாகவும் சமுதாயக் காவியமாகவும் தெய்வச் சேக்கிழார் மாற்றியிருக்கிறார்.

View More பெரியபுராணம்: இளைஞர் வாழ்வியலுக்கான ஒரு சமுதாயக் காவியம் – 2 [நிறைவுப் பகுதி]