Posts Tagged ‘ தொல்லியலாளர் டாக்டர் சத்தியமூர்த்தி ’

கோவையில் கோயில் பாரம்பரியப் பாதுகாவலர்கள் கருத்தரங்கம்

ஜூலை-1 (ஞாயிறு)  அன்று ரீச் ஃபவுண்டேஷன் அமைப்பு,   கருத்தரங்கம் ஒன்றை கோவையில் நடத்துகிறது.  தமிழகத்தின் பாரம்பரியக் கோயில்களைப் பாதுகாத்தல்; சிற்பக்கலை, வரலாறு, கல்வெட்டுக்கள் ஆகியவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும்  முறைகேடுகளை கவனப்படுத்துதல்  ஆகிய பணிகளில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வரும்  அமைப்பு இது. தொல்லியல் துறை அதிகாரிகள்,  வரலாற்று அறிஞர்கள் வழிகாட்டுதலில் கலை ஆர்வலர்கள், களப் பணியாளர்கள் பங்கு பெறுகின்றனர். ஜூலை-1 (ஞாயிறு)  அன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை. கே.கே.மேத்தா அரங்கம், ஆர் எஸ் புரம், கோவை  (சிந்தாமணி சூப்பர் மார்க்கெட் அருகில்). அழைப்பிதழ்  இங்கே.  அனைவரும் வருக!... [மேலும்..»]

உடையும் இந்தியா- புத்தக வெளியீட்டு விழா பதிவுகள்

இந்தப் புத்தகம் தேச ஒற்றுமையில் சமரசம் செய்துகொள்ளத் தயாரில்லாத அண்ணல் அம்பேத்கர், மஹாத்மா காந்தி, விவேகானந்தர் ஆகியோருக்கு நன்றிக் கடனாக, தன்னுடைய சிறு முயற்சி என்றும் இந்தப் புத்தகத்தின் தேவை தீரும் நாளையே தான் ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் அரவிந்தன் குறிப்பிட்டார்... ஜோ டி குரூஸ் அன்று கச்சிதமாகப் பேசி அனைவரையும் நெகிழவைத்தார்... கம்பர் சேக்கிழாருக்கு அடுத்தபடியாக அரவிந்தன் நீலகண்டனைக் குறிப்பிட்டுப் பேச ஆரம்பித்தார் எஸ்.ராமச்சந்திரன்... அதிரடிக்குரலும் ஆர்ப்பரிக்கும் அலைபோன்ற தொடர் பேச்சும் வாள் வீச்சாக இருந்தது.... [மேலும்..»]