Posts Tagged ‘ தொழில் முடக்கம் ’

ஆம் ஆத்மியின் கிராம சபை திட்டம் செயல்படுத்தக்கூடியதா?

அரசு அணைக் கட்டுவதாக இருந்தால், நிலப்பரப்பைக் கொடுப்பவர்களுக்கு முறையாக வேலை வாய்ப்பு, இழப்பீடு என்பதை செய்ய அறிவுறுத்துவது சரியா? அல்லது கிராம சபை உத்தரவு கொடுத்தால்தான் ஒரு திட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமா? என்பதை சிந்திக்க வேண்டியுள்ளது. அரசுகளிடம் போராடி நிலங்களை இழப்பவருக்கு அனைத்துக் கட்சிகளும் போராடலாம். அப்பகுதி மக்கள் போராடி முறையான இழப்பீட்டையும், வேலை வாய்ப்பையும் கேட்டுப் பெறுவதுதான் சரியே ஒழிய, இதை இங்கு வர விட இயலாது என சொல்வதென்பது இந்தியாவின் கட்டுமானத்தையும், தொழில், விவசாய, மின் வளர்ச்சியையும் நிச்சயமாகப் பாதிக்கும்... எதைப்பற்றியும் தெளிவுப்படுத்தாமல் அதிகாரப் பகிர்வை கெஜ்ரிவால் முன்னிறுத்துகிறார் என்பதை மட்டும் வைத்து அவரை... [மேலும்..»]

லோக்பால் மசோதா: வாய் திறக்காத கலைஞரும், ஜெயலலிதாவும்

முன்னாள், இன்னாள் தமிழக முதல்வர்கள் தங்களது கருத்துக்களைத் தெரிவிக்க முடியாமல் போனதற்கான காரணத்தைத் தேடினால் “மாசோதாவில் உள்ள ஷரத்துக்கள் இவர்களுக்குப் பாதகமாக முடியும் என்பதால் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை” என்ற பதில் கிடைக்கும்.ஆகவே இந்த மசோதா சட்டமானால் இன்றைய நிலையில் செல்வி சிறை கம்பிகளை எண்ணிக்கொண்டு இருக்க வேண்டும். இந்த ஷரத்து தற்போதைய தமிழக முதல்வருக்கும் ஆபத்தாக முடியும். [மேலும்..»]