எழுமின் விழிமின் – 36

பராக்கிரமம் உங்களை ஆட்கொள்ளட்டும்.  வீரன் தான் முக்தியை எளிதில் எட்டிப் பிடித்து எய்த முடியும்; கோழை அல்ல.  வீரர்களே! வரிந்து கச்சை கட்டிக்கொள்ளுங்கள். ஏனெனில் உங்கள் முன் எதிரிகள் நிற்கிறார்கள்.  மோக வெறியாகிற பயங்கரப் படை முன் நிற்கிறது.  ‘மகத்தான சாதனைகளுக்கு முட்டுக்கட்டையாக ஏராளமான இடையூறுகள் நிறைந்திருக்கும்’ என்பது உண்மை தான்; சந்தேகமில்லை.  இருப்பினும் குறிக்கோளை அடைய முழுச் சக்தியுடன் நீங்கள் முனைய வேண்டும்.

மேலே செல்லுங்கள்! முன்னேறுங்கள்!! வீரமிக்க ஆன்மாக்களே!!! விலங்குகளால் கட்டுண்டுக் க்டக்கிறவர்களை விடுதலை செய்ய, துர்ப்பாக்கியமான நிலையில் வாழ்கிறவர்களுடைய துயரச் சுமையைக் குறைக்க, அறிவீனம் நிறைந்த உள்ளங்களின் காரிருளை நீக்க, ஒளியூட்ட முன்னேறுங்கள்.

‘அச்சமற்றிரு’ என்று வேதாந்தக் கொள்கை முரசடித்து உணர்த்துகிறது பாருங்கள்! கம்பீரமான அவ்வொலி உலகில் வாழ்கிற எல்லா மக்களுடைய உள்ளங்களிலுமுள்ள முடிச்சுச் செடுக்குகளை அவிழ்த்து விடட்டும்!

‘உத்திஷ்டத ஜாக்ரத ப்ராப்ய வரான்னிபோதத’ – “எழுந்திரு, விழித்திரு, குறிக்கோளை அடையும்வரை நில்லாதே” என்று ஒவ்வொரு ஆத்மாவையும் அறைகூவி அழைப்போம்.

View More எழுமின் விழிமின் – 36

எழுமின் விழிமின் – 14

நமது சொந்த மக்களினமாகிற கடவுள் மட்டும் தான் இப்பொழுது விழித்துக் கொண்டிருக்கிறார். எங்கு நோக்கினும் அவரது கைகள்; எங்கும் அவரது திருவடிகள்; எங்குமே அவரது காதுகள்.. நம்மைச் சூழ்ந்து காணப் படும் விராட் புருஷனை வழிபடாமல் வீணான மற்ற தெய்வங்களின் பின்னால் ஏன் போக வேண்டும்?… எல்லாவற்றையும் பரிகாசம் பண்ணுவது, எதைப் பற்றியும் முனைந்து சிந்தியாதிருப்பது ஆகிய இந்த நோய் நமது தேசிய இரத்தத்தில் நுழைந்திருக்கிறது. இந்த பயங்கர வியாதியை விட்டுத் தொலையுங்கள். வலிமையுடன் இருங்கள். சிரத்தையுடன் இருங்கள். மற்றவையெல்லாம் தாமாக வந்தடைந்தே தீரும்..

View More எழுமின் விழிமின் – 14