Posts Tagged ‘ நட்பு ’

கையாலாகாதவனாகிப்போனேன்! — 6

அவர் அமெரிக்கா வருவதற்குமுன் அவரது தம்பி ஆறு வயதில் காலமாகி விட்டான் என்றும், என் மகனைப் பார்த்தால் அவன்நினைவு வருகிறது என்றும், ஆகவே என் மகனுக்கு வாங்கித் தருவது காலம்சென்ற தனது தம்பிக்கு வாங்கித் தருவதுபோல இருக்கிறது என்று மனம்விட்டு தனது உள்ளக்கிடக்கையைப் பகிர்ந்துகொண்டார். திடுமென்று ஒருநாள் முன்னறிவிப்பின்றி எங்கள் வீட்டிற்கு வந்தவர், “நான் படிப்பை விட்டுவிடப் போகிறேன்!” என்று சொன்னபோது எங்களுக்குத் தூக்கிவாரிப்போட்டது. காரணம்சொல்ல மறுத்துவிட்டார். சிலமணி நேரம் எங்களுடன் பேசிவிட்டு, எங்கள் வீட்டில் மதிய உணவு அருந்திவிட்டு, எங்களிடம் விடைபெற்றுக்கொண்டு சென்றுவிட்டார். [மேலும்..»]

அடுத்த வீடு

மாமா அடிக்கடி புகையிலை போடுவார். நான் அங்கு போகும்போதெல்லாம் மறக்காமல் அரையணா சாமான் (புகையிலை) வாங்கித்தரச் சொல்லுவார். சிலசமயம் காசும் தருவார். சில சமயம் ”நான் காசு தந்தேனே கார்டு எங்கே? அரையணா சாமான் எங்கே?” என்று கேட்பார். வாயில் வந்த பொய்யைச் சொல்லி சமாளிப்பேன். [மேலும்..»]

அஞ்சலி: மலர் மன்னன்

இரண்டு நாட்கள் முன் இருக்குமா? மலர்மன்னனிடமிருந்து வந்தது தொலை பேசி அழைப்பு ஒன்று. அவருக்கு என்ன பதில் சொல்வது என்று தயங்கிக் கொண்டே தொலை பேசியை எடுத்தேன். சந்தோஷமாக சிரித்துக்கொண்டே, ”உங்க ரங்கநாதன் தெரு கட்டுரை நம்ம சென்னையில் வந்திருக்கு இந்த மாதம். பாருங்கோ நெட்லே கிடைக்கும். அச்சிலே வரதுக்கு நாளாகும்” என்றார். ”பாக்கறேன். ஆனால் நெட் கனெக்‌ஷன் போயிடுத்து” என்று கொஞ்சம் நிம்மதி அடைந்து அவருக்கு பதில் சொன்னேன். அவருக்கும் எனக்கும் இடையே சுமார் இருபது நாட்களுக்கும் மேலாக அவருடைய புத்தகம் “திராவிட இயக்கம், புனைவும் உண்மையும்” பற்றித் தான் பேச்சு. அது பெற்றுள்ள... [மேலும்..»]

எல்லோரும் ஏமாந்துகிட்டிருக்காங்க.. அப்ப நீங்க?

September 27, 2010
By

ஒரு அறையில் சின்னதாக தனித்தனியாக லேமினேட் செய்யப் பட்டு மூன்று குழந்தைகளின் போட்டோக்கள் ஒரு மேசையில் இருந்தன. இதில எல்லாம் மதத்தைப் பார்த்தா நாம என்ன சார் மனுஷங்க?... திட்டமிட்டு இரண்டு பிராமணர்களை தேர்ந்தெடுத்து, மூளைச்சலவை செய்து, புரோடஸ்டண்ட் சர்ச்சில் மதம்மாற்றி.. இந்தியா இந்த அவலத்தை சகித்துக் கொள்வது மட்டுமல்ல, இதற்குத் துணைபுரியவும் செய்கிறது... இப்படி ஏமாத்தி இருக்காங்களே? நானும் ஏமாந்திருக்கேனே என்று நொந்து கொண்டார் நண்பர்.. [மேலும்..»]

காதலர் தினம் என்னும் வருடாந்திர வெள்ளம்

February 15, 2010
By

இருபாலருக்கும் இடையில் இயல்பான, ஆரோக்கியமான, பாலியல் சாராத அதே சமயம் ஆர்வமூட்டுகிற (non-sexual, yet exploratory) நட்புகளைப் புரிந்துகொள்ளவோ, ஊக்குவிக்கவோ இன்னும் முழுமையாகத் தயாராகாத ஒரு சமூகத்தில், காதலர் தினத்தின் வருகையை இத்தகைய வருடாந்திர வெள்ளத்திற்குத் தான் ஒப்பிடத் தோன்றுகிறது... அதன் பக்கவிளைவுகள் எப்போதுமே துயரம் தரக் கூடியவை. மேலும், அவற்றை எப்போதுமே நாம் தவறில்லாமல் கணித்துவிடவும் முடியும்! [மேலும்..»]

Josh Oliver Authentic Jersey