சிதம்பரம் நந்தனார் மடமும் அதன் தற்கால நிலையும்

சிதம்பரத்தில் நந்தனார் தங்கியிருந்ததாகச் சொல்லப்படும் இடம் என்று ஏதேனும் உள்ளதா என்ற ஆவலில் தேடினோம். 30 ஆண்டுகளாக முறையான வழிபாடுகள் ஏதுமின்றி, பாம்பு, தேள் இன்னபிற விஷஜந்துக்களுக்கு அடைக்கலம் தந்த படியுள்ளது நந்தனார் மடம் . சுற்றிலும் ஆக்ரமிப்புகள், உள்ளே செல்ல வழியையும் அடைத்துவிட்டிருந்தனர். ஏற படியில்லை. குதித்து ஏறினாலும் நிற்க இடமில்லாதபடி தகர மடிப்புகளும், மூங்கில் கழிகளும் போட்டு வைத்திருந்தனர்… என்ன ஒரு காட்சியது. ஜடாமுடியும், நெற்றியில் இலங்கு திருநீரும், மார்பிலும் கழுத்திலும் ருத்ராக்‌ஷ மணிகளும், சிவப்பழமாய், தீயில் மூழ்கி யாகோற்பவமான நந்தனார் நம்முன் நின்றார்… எப்படி சீர் செய்வது? 20 சிவனடியார்கள், உழவாரப்படையினர் முயன்றால் இரண்டொரு நாளில் இந்நிலையை மாற்றலாம். அடைத்துக் கொண்டிருக்கும் குப்பையை வெளியேற்றி, இரண்டு வேளை தீபம் எரிய ஏற்பாடு செய்தாலும் போதும். இக்கோயில் தில்லைக்காளி கோயிலில் இருக்கும் அறநிலையத்துறையின் கட்டுபாட்டில் இருப்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை…

View More சிதம்பரம் நந்தனார் மடமும் அதன் தற்கால நிலையும்

சுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 3

அந்த ஆரம்ப சுகாதார மையத்தின் திறப்பு விழாவுக்கு சுவாமி அம்பேத்கரை அழைக்காமல் எம்.எல்.ஏ.வே வந்து திறந்துவைக்க முடிவெடுக்கிறார். ஆனால், திறப்பு விழா அன்று ஒட்டு மொத்த கிராமமும் எம்.எல்.ஏ.வை எதிர்த்து நிற்கிறது. சுவாமி அம்பேத்கர்தான் வந்து திறக்கவேண்டும் என்று குரல் எழுப்புகிறார்கள். எம்.எல்.ஏ. அதற்கு மறுப்பு தெரிவித்ததும் ஒட்டு மொத்த கிராமத்தினரும் அந்த விழாவைப் புறக்கணிக்கின்றனர். எம்.எல்.ஏ.வுக்கு பெருத்த அவமானமாகப் போகிறது… கோவிலில் கருவறைக்குள் சென்று வழிபடவேண்டும் என்று விரும்புபவர்கள் முன்கூட்டியே தமது பெயரை பதிவு செய்துகொள்ளவேண்டும். அவர்களுக்கு அனுமதி கிடைக்கும் நாளில் காலையில் கோவிலுக்கு வந்து கோவில் குளத்தில் குளித்து சிறிய யாகம் செய்து சமஷ்டி பூணுல் அணிந்துகொண்டு கருவறைக்குள் நுழைந்து இறைவனைக் கும்பிடலாம். இந்த பூணூல் வைபவம் நடத்த நபர் ஒன்றுக்கு 108 ரூபாய் கட்டணம் பூஜாரிக்குக் கொடுத்துவிடவேண்டும். சில பிராமண பூஜாரிகள் இதை உற்சகத்துடன் வரவேற்கிறார்கள். வேறு சிலரோ காலகாலமாக பின்பற்றப்பட்டுவரும் நடைமுறையை மாற்றக்கூடாதென்று சொல்கிறார்கள்… இறைவன் எங்கும் நிறைந்திருக்கும் நிலையில் எல்லா திசைகளுமே புனிதமானவைதானே என்கிறார் சுவாமி அம்பேத்கர். பக்தர்கள் அதை ஏற்றுக்கொள்கிறார்கள். நான்கு திசைகளில் சிலையை வைக்கலாம் அல்லது ஒரே தெய்வச் சிலையை சுழல் மேடையில் அமைத்து 360 டிகிரி சுற்றுவதுபோல் செய்தால் அனைத்து பக்கத்தில் அமரும் பக்தர்களும் ஒரே நேரத்தில் வழிபட வழி பிறக்கும் என்று முடிவு செய்கிறார்கள்….

View More சுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 3

சுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 2

ஆற்று நீரைக் குடித்துவிட்டுப் படுத்துக் கிடக்கும் நந்தனாரை ஒரு விவசாயி தனது வீட்டுக்கு வந்து உணவருந்தும்படி அழைக்கிறார். “அது சரிதான். ஆனா ஒரு மனுஷனை நேசிக்க எதுவுமே தடையா இருக்கக்கூடாது… இப்போ நான் ஒரு பறையனா இருந்தா என்ன செய்வீங்க”…பரிமாறுபவர் சட்டென்று நிறுத்திவிட்டு, “எழுந்திரிச்சு வெளிய போடான்னு சொல்லுவேன்”. பரதேசிக்குத் தூக்கிவாரிப்போடுகிறது… “உங்களுக்குத் தனிச் சுடுகாடு, அவங்களுக்குத் தனி சர்ச்சுன்னு எத்தனை இடத்துல இருக்கு. உங்க அனுபவமே இருக்குமே. உங்களை உங்க சபையில எப்படி நடத்தறாங்க?” தலித் பாதிரியார் கொஞ்சம் மென்று முழுங்குகிறார். “தப்புச் செய்யற குழந்தைகளை தாய் மன்னிச்சு ஏத்துக்க எப்பவுமே தயாரா இருப்பா… அது மாதிரி நம்ம தாய் மதமும் தயாராவே இருக்கு”.. மடத்துக்கு சொந்தமான நிலங்களை அறங்காவலர்கள் தம்முடைய பினாமிகளுக்குக் கொடுத்து அந்த நிலத்தின் வருவாயை அவர்களே அனுபவிப்பது தெரியவருகிறது…

View More சுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 2

சுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 1

இருளுக்குப் பழகிய கண்களும் நாற்றத்துக்குப் பழகிய நாசிகளும் கொண்டவர்கள் தத்தமது வளைகளுக்குள் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தனர். ஒளிக்கு ஏங்கிய கண்களும் தூய காற்றுக்கு ஏங்கிய நாசியும் கொண்ட நந்தன் ஊரைவிட உயரமாக, ஊரிலிருந்து சற்றே தொலைவில் இருந்த மலைக் கோவிலில் இருந்து தெரிந்த மெல்லிய பொன்னிற ஒளிப் புள்ளியை பார்த்தபடி நடக்கத் தொடங்கினான்… ஆச்சி வெளியே வந்து அரிசியைக் கொடுக்க முற்படுகிறார். நந்தனார் ஏந்திய திருவோட்டை மூடியபடியே, இன்று நான் பட்டினி கிடக்கவேண்டும் என்பது உங்கள் மருமகளின் விருப்பம் போலிருக்கிறது என்று சொல்லிச் சிரித்தபடியே வந்த வழியே திரும்புகிறார். ஆச்சி பின்னால் ஓடி வந்தபடியே கெஞ்சுகிறார். சாமி வாசல் தேடி வந்த தெய்வத்துக்கு ஒரு வாய் சாப்பாடு போடாம அனுப்பின பாவம் வேண்டாம் சாமி… பிடிவாதம் பிடிக்காதிங்க… வாங்கிக்கோங்க… எத்தனி ஜென்மம் எடுத்தாலும் என் குடும்பம் இந்த பாவத்தை போக்க முடியாம போயிரும்…

View More சுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 1

மார்கழிமாதத் திருவாதிரை நாள் வரப் போகுதையே

பெரியோர்கள் பிறவாமையை வேண்ட, அப்பர் பெருமான் பிறப்புக்கு அஞ்சாமல், தில்லைத் திருக்கூத்தினைக் காணும் பேறு கிட்டுமாயின் மனித்தப் பிறவியும் வேண்டுவதே என்றார். இடையில் அப்பர் பெருமானுக்கு ஒரு ஐயம் வந்தது. தில்லைத் தரிசனம் பிறவியைக் கொடுக்குமோ? தில்லைச் சிற்றம்பலம் இப்பிறவியில் உலக வாழ்க்கைக்கு இன்றியமையாது வேண்டிய அன்னம் (சோறு) முதலிய பொருள்களைக் கொடுக்கும். மறுமையில் பொன்னுலகு (சுவர்க்கம்) முதலிய பதங்களையும் மீட்டும் பிறவி எடுக்காத வீட்டுலகையும் தரும். என்றாலும், இந்தப் பூவுலகில் என் அன்பு மேலும் மேலும் பெருகி இன்புறுவதற்கு ஏதுவாகத் தில்லையம்பலக் கூத்தினைத் தரிசிப்பதற்குப் பிறவியைத் தருமோ? எனக் கேட்கின்றார்…

View More மார்கழிமாதத் திருவாதிரை நாள் வரப் போகுதையே

மறக்கொணா இருவர்

திருவாதவூரடிகள் எம்பெருமானது ஐந்தொழிற்கூத்து நிகழ்வதற்கு உரிமையுடைய திருத்தலமாகத் தில்லையை, “தில்லை மூதூர் ஆடிய திருவடி”, என்றும்,”தில்லையுட் கூத்தனே” என்றும் கூறியருளினார். தில்லை என்பது சிதம்பரம். அது, சித்+அம்பரம் என்னும் தொகைச்சொல். ‘சித்’ என்றால் ,‘ஞானம்’ என்று பொருள்; ‘அம்பரம்’ என்றால் ‘ஆகாசம்’ என்று பொருள். எனவே, சிதம்பரம் ‘ஞானாகாசம்’ஆகும். அந்த ஞானாகாசம் அண்டத்திலும் உண்டு; பிண்டமாகிய உடலிலும் உண்டு. அண்டத்திலுள்ளது, பராகாசம் என்றும் பிண்டத்திலுள்ளது , ‘தகராகாசம்’ எனவும் வழங்கப்படும்…

View More மறக்கொணா இருவர்

ஒரு தாழ்த்தப்பட்ட இந்துவின் இந்துத்துவக் குரல்

இருபதாம் நூற்றாண்டிலும், தாழ்த்தப் பட்டவர்களிடையே ஆன்மீக ஞானிகள் உருவாக முடியும் என்பதை உலகிற்கு காட்டியவர் சுவாமி சகஜானந்தர். உயர்சாதி இந்துக்களும் வெள்ளையர்களும் தாழ்த்தப்பட்டவர்களின் மனதில் பதியும் அளவுக்கு எதிர் பிரச்சாரத்தை செய்த சூழலிலும், அவர்கள் இந்துக்களே என்பதை ஆணித்தரமாக நிரூபித்தவர்… எட்டாம் வகுப்பை தாண்டாத சுவாமிகள் தமிழிலும், வடமொழியிலும் மிக்க புலமை பெற்றிருந்தார்… 1959 வரை சிதம்பரம் தனித் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டப்பேரவை உறுப்பினராகவும் செயல்பட்டார்…. கோயில் நிலங்களை ஏழைகளுக்குக் கொடுப்பது குறித்தும், தாழ்த்தப் பட்டவர்கள் பெயரால் கிறிஸ்தவ மிஷன்களுக்கு அரசு எந்த நிதி உதவியும் வழங்கக் கூடாது என்றும் சட்டமன்றத்தில் அவர் ஆற்றிய உரைகள் புரட்சிகரமானவை… தமிழகத்தின் மாபெரும் தலித் இயக்க முன்னோடி, இந்து சமுதாய சிற்பி சுவாமி சகஜானந்தர் குறித்த விரிவான கட்டுரை இது…

View More ஒரு தாழ்த்தப்பட்ட இந்துவின் இந்துத்துவக் குரல்

தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 1

இது பற்றியெல்லாம் சிந்தித்தவர்கள், சுய விமரிசனம் செய்தவர்கள், அவர்கள் செயல்படவும் செய்தார்கள் என்பதைத் தான், சிவனோ பெருமாளோ அவர்களுக்காக மனமிரங்கி அவர்களைக் காப்பாற்றியதாக இலக்கியங்களும் கலைகளும் சொல்கின்றன. அதைத் தான் அவர்கள் வரலாற்றிலும் இலக்கியத்திலும் எழுதி அவற்றிற்கு ஒரு அழியா வாழ்வு கொடுத்திருக்கின்றனர்… இவர்கள் பாதுகாத்தும் சிறப்பித்தும் வாழ்வு தந்ததால் தானே அவை இன்றைய பிரசாரகர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பிராமணர்களைப் பழிக்க ஏதுவாயிருக்கிறது!

View More தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 1

கவிபாடிய கன்னட நந்தனார்: கனகதாசர்

தண்ணீரே அனைத்துக் குலங்களுக்கும் தாயல்லவோ? தண்ணீரின் குலம் என்ன என்று தெரியுமோ?… பகவான் தரிசனம் தந்து விட்டார். ஆனால் தன் வாழ்நாளின் கடைசிவரை கனகதாசர் கோயிலுக்குள் நுழையவே இல்லை. உடுப்பியில் அவர் நின்று பாடிய வீதியில் கோயிலுக்கு வெளியே அவருக்கு ஒரு சிறு நினைவு மண்டபம் உள்ளது. அதில் கனகதாசரின் திருவுருவச் சிலைக்கு மாலை போட்டு வைத்திருக்கிறார்கள்…

View More கவிபாடிய கன்னட நந்தனார்: கனகதாசர்

மெய்கோவில்பட்டி தீண்டாமை நிகழ்வு: ஒரு கள ஆய்வு ரிப்போர்ட்

விசாரிக்க சென்ற குழுவிடம் ஆற்றாமல் அழுதபடி நடந்த சம்பவத்தை விவரித்தார் சடையாண்டியின் மனைவி. கையில் மூன்று மாதக் குழந்தை… இந்த தாக்குதல்களில் சாதியத்தின் கொடிய கரத்தை நாம் தெளிவாக காண முடிகிறது. ஆனால் இதில் ஒளிந்திருக்கும் மற்றொரு உண்மை நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.. றிஸ்தவ கத்தோலிக்க சபை இரண்டு விதங்களில் தலித்துகளுக்கு எதிராகச் செயல்பட்டிருக்கிறார்கள்.. (விரிவான வீடியோ நேர்காணல்கள்)

View More மெய்கோவில்பட்டி தீண்டாமை நிகழ்வு: ஒரு கள ஆய்வு ரிப்போர்ட்