தேவிக்குகந்த நவராத்திரி — 2

மீனாட்சி அம்மை திக்விஜயம் புறப்பட்டுச் சென்று கொண்டிருக்கிறாள். எல்லா மன்னர்களையும் வென்றவள் இப்போது இமயமலையை அடைந்து அங்கிருக்கும் சிவகணங்களின் தலைவனைப் போருக்கழைக்கிறாள். தனது மணாளாகப் போகிறவர் அவரே என்பதை அவள் அறிந்திலள். அவளைத் தடுத்து நிறுத்த இயலாத நந்தி தேவர் சென்று சிவபிரானிடம் முறையீடு செய்ய, அவர் பொருள் செறிந்த சிறுமுறுவல் கொண்டு தாமே எழுந்து மீனாட்சியை எதிர் கொள்ள வருகிறார்.

View More தேவிக்குகந்த நவராத்திரி — 2

தலபுராணம் என்னும் கருவூலம் – 3

விசுவநாதர் சந்நிதியில் நின்று வியாசர், “நாரணனே பரப்பிரமம்,” என்றபோது, எல்லாப் பெயரும் ‘தன்பெயர் எனும் மறை வழக்கால்’ விசுவநாதன் வெகுளாமல் வெறிமலர்க்குழல் உமையொடும் மகிழ்ந்து வீற்றிருந்தனன் என்று பாடுகின்றார்… இறைவனுடைய பேரருளே அம்பிகை எனப்படுகின்றது. சிவனையும் சத்தியையும் சேர்த்துத் துதித்தபோது இறைவன் அம்மையப்பராய்த் தோன்றிப் பிரமன் விரும்பியவாறு ஆண்மை பெண்மைகளைப் படைக்கும் ஆற்றல் பெற்றான்..

View More தலபுராணம் என்னும் கருவூலம் – 3