Posts Tagged ‘ நற்குணங்கள் ’

ஸீதையின் மஹாசரித்ரமும் அஷ்டாக்ஷரத்தின் பொருளும் – 2

பாரதந்த்ர்யம் என்றால் எம்பெருமானுக்கோ அல்லது அடியாருக்கோ அல்லது ஆசார்யனுக்கோ வசப்பட்டிருத்தல் ஆகும். நமது உடலில், மனஸ் அல்லது அந்தகரணம் என்று ஒரு உள்-புலனுண்டு. அதற்கு சிந்தித்தல் (சித்தம்) , தேர்வு செய்தல் (புத்தி) மற்றும் “தன்னை இன்னது என்று அடையாளம் செய்வது” (அபிமாநம்) என்னும் 3 பணிகளுண்டு. அந்த மூன்று பணிகளையும், பரமனின் திருவுள்ள உகப்பிற்காக அர்பணிப்பது பாரதந்த்ர்யம் ஆகும்... பிறப்பே இல்லாத பகவான் ,தன் பக்தர்களிடம் தானும் பாரதந்த்ர்யமாய் (அடிமையாய்) நடந்து, விளையாட வேண்டி, தன் இச்சைக்கு ஏற்றபடி உடலெடுத்துப் பிறக்கிறான் என்கிறது வேதம். அதைத்தான் “மன பரிப்போடு அழுக்கு மானிட சாதியில் தான் பிறந்து,... [மேலும்..»]

ஸீதையின் மஹாசரித்ரமும் அஷ்டாக்ஷரத்தின் பொருளும் – 1

க்ருபையாவது பிறர் படும் துன்பத்தைக் கண்டு பொறுக்கமாட்டாமை. ஜீவர்கள் ஸம்ஸாரத்தில் படும் துக்கத்தைக் கண்டு பொறுக்கமாட்டாமல் எம்பெருமானோடு இவர்களை சேர்ப்பதற்கு உறுப்பான முயற்சி செய்வதற்கு க்ருபை வேணும். பிராட்டி ஜனகராஜன் திருமகளாராய்த் தோன்றி அப்பெருமாளை மூன்றுதரம் பிரிந்து இம்மூன்று குணங்களை வெளிப்படுத்தினாள். நாம் அதுகொண்டு அறியலாம்... இந்தத் தேவியின் மனம் ராமனிடத்திலும், ராமனின் மனம் இந்த தேவியிடத்திலும் நிலைத்திருக்கின்றது. அதனால்தான் இந்த தேவியும், தர்மாத்மாவான ராமரும், இதுநாள் வரையிலும் உயிரோடு இருக்கின்றனர் என்கிறான் அனுமன். குளிர்ந்த பெரிய மலர் உந்தி வீட்டை உண்டாக்கி, அதில் உலகங்களை படையென்று நான்முகன் முதலியவர்களை உண்டாக்கியவன். அதையே திருவிளையாடல்களாகச் செய்யும் மாசற்றவனைக்... [மேலும்..»]

பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – 8

December 24, 2012
By

விஷ்ணுவால் அதிகம் விரும்பப்படும் எட்டு மலர்கள் யாவை? அவற்றை நாம் தேடி விலை கொடுத்து வாங்க வேண்டுமா? இல்லை! அகத்திலேயே அவற்றை நீரூற்றி வளர்க்கலாம் என்பது பெரியோர்களின் கொள்கை. அஹிம்ஸா ப்ரதமம் புஷ்பம்.... திருமாலின் இயல்பு, மேன்மை, நீர்மை ஆகியவற்றைக் காட்டும் ‘ஸ்வரூப-குணங்களை’ விவரிக்கும் பல பகுதிகள் சங்க இலக்கியத்தில் அடங்கியுள்ளன...”நின் வெம்மையும் விளக்கமும் ஞாயிற்று உள, நின் தண்மையும் சாயலும் திங்கள் உள” - சூரியனின் வெம்மை, சந்திரனின் குளுமை இரண்டும் பூமிக்கு இன்றியமையாதது போல, சர்வேசுவரனாகிய வாசுதேவன் உயிர்களிடத்துக் காட்டும் அன்பு, வன்மை இரண்டுமே உலக நடப்புக்கும் அவ்வுயிர்களின் ஆன்ம வளர்ச்சிக்கும்... [மேலும்..»]

இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 24

November 23, 2012
By

"எவர் என்னை அண்டி வருகிறார்களோ அவர்களுக்கு நான் அபயம் அளிப்பேன். என்னை அடைந்தபின் அவர்களுக்கு எந்த வித பயமும் வேண்டாம். இது என்னுடைய கொள்கை" - இந்த வரிகள் மூலம் இராமரின் தெய்வீக அம்சத்தை வால்மீகி எல்லோருக்கும் உணரவைக்கிறார். இது இறைவனால் அனைவருக்குமே கொடுக்கப்பட்டுள்ள உறுதி.... எப்படி ராமராஜ்யத்தில் எல்லாமே உண்மை என்பதால் பொய் என்பதே இல்லாது போகிறதோ, அதேபோல ஆனந்த நிலையில் எந்தப் பொருளும் பரம்பொருள் ஆகிவிடுவதால், வேறு என்பதே இல்லாததாகி அச்சம் என்பதும் இல்லாது போகிறது.... சான்றோரின் குணங்களான மனவடக்கம், பொறுமை, எளிமை, இனிமையான பேச்சு, இவை அனைத்தும் நற்குணம் இல்லாதவர்களிடம்... [மேலும்..»]