திருச்சியில் நரேந்திர மோதி உரை: ஒரு பார்வை

”தமிழ் மண்ணிற்கு வருகை தருவதை மதிப்புக்குரிய விஷயமாகக் கருதுகிறேன். தமிழ் மக்களிடம் மூன்று நல்ல குணங்கள் உண்டு – கடும் உழைப்பு, சிரத்தை, ராஜகம்பீரம் & விசுவாசம் (royal & loyal). தமிழகத்தின் பொருட்கள் தேசிய, உலக சந்தைகளில் தரம் வாய்ந்தவையாக உள்ளன. … ” இது ஒரு சாதாரண அரசியல்வாதி பேசும் பேச்சல்ல. இந்த தேசத்தின் மீது, மண்ணின் மீது, காலகாலமாக இருந்து வரும் அதன் சமூக, கலாசார பந்தங்களின் மீது ஆழமான பிடிப்பும், அன்பும் கொண்ட ஒருவரின் பேச்சு. எண்ணமும், செயலும் எல்லாம் இந்த தேசத்தை ஒற்றுமைப் படுத்துவதற்காகவே, இந்த தேசமக்களின் நல்வாழ்விற்காகவே இயங்கும் ஒரு தேசபக்தனின் பேச்சு… “இலங்கை அரசு தமிழக மீனவர்களைக் கொல்கிறது. பாகிஸ்தானிய ராணுவம் நமது ராணுவ வீரர்களைக் கொல்கிறது.. பயங்கரவாதம் அபபவியான பொதுமக்களைக் கொல்கிறது, பூடான், இலங்கை, நேபாளம் போன்ற சிறிய நாடுகள் கூட இந்தியாவை மதிப்பதில்லை. இதற்கெல்லாம் காரணமான அந்த பலவீனமான அரசை அகற்ற வேண்டும் நீங்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள், அந்த நம்பிக்கையை ஒருபோதும் உடைக்க மாட்டோம் என்று உறுதியளிக்கிறேன். எங்களது சக்தி அனைத்தையும் உங்களது முன்னேற்றத்திற்காக, நாட்டின் வளர்ச்சிக்காக பயன்படுத்துவோம். சிறப்பான மிகழ்ச்சி. மிக அருமையான உரை. தனிப்பட்ட அளவில், மோதி இன்னும் சில விஷயங்களையும் பேசியிருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது…

View More திருச்சியில் நரேந்திர மோதி உரை: ஒரு பார்வை

நரேந்திர மோடியை ஆதரிக்கிறேன்: வி.ஆர்.கிருஷ்ணய்யர்

நான் அறியவந்தபடி, குஜராத்தில் பொதுவாழ்வில் ஊழல் என்பது முற்றிலுமாகக் களையப் பட்டு விட்டது. ஒரு தனிமனிதராக, நரேந்திர மோடி அவர்களது நேர்மை பெரும் போற்றுதலுக்குரியது. ஒட்டுமொத்தமாக, அவரது நிர்வாகத் திறன் தேசிய அளவில் ஆதரிக்கப் படவேண்டியது. அவர் சுயராஜ்ய கொள்கைகளை முழுமையாக நடைமுறைப் படுத்துவார். வறுமையை ஒழிப்பார். எனவே, இந்தியாவின் பிரதமாக ஆவதற்கான அபூர்வமான வாய்ப்பை அவர் அடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்… தேசிய சிந்தனை மற்றும் உலகனத்தையும் அரவணைக்கும் அளவு நட்புணர்வு ஆகிய நேர்மறைப் பண்புகளின் உறைவிடமாக அவர் உள்ளார் என்று கருதுகிறேன்…

View More நரேந்திர மோடியை ஆதரிக்கிறேன்: வி.ஆர்.கிருஷ்ணய்யர்