Posts Tagged ‘ நவீன் பட்நாயக் ’

கருப்புப்பண ஒழிப்பு: யாருக்கு நெருக்கடி?

November 20, 2016
By
கருப்புப்பண ஒழிப்பு: யாருக்கு நெருக்கடி?

உயர் மதிப்புள்ள ரூ. 500, ரூ. 1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் அறிவித்த நவ. 8-ஆம் தேதி இரவிலிருந்தே நாட்டில் பல அரசியல் தலைவர்களுக்கு தூக்கம் பறிபோய்விட்டது. அவர்களில் பலர் தற்போது என்ன பேசுகிறோம் என்பதே தெரியாமல் பிதற்றத் துவங்கிவிட்டனர். கருப்புப் பணத்தைப் பதுக்கியவர்கள் மீதான அரசின் நடவடிக்கைக்கு எதிராகக் கூப்பாடு போடும் இந்த எதிர்க்கட்சித் தலைவர்களின் நடவடிக்கையிலிருந்தே, மோடி கொடுத்த அடி இவர்களை எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது என்பதை உணர முடிகிறது. இவர்களில் தலையாயவர், தில்லி மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால். இந்திய வருவாய்த் துறை பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று அரசியலுக்கு வந்த... [மேலும்..»]

பாஜக சாதிக்க இயலாத மாநிலங்கள்- ஒரு மதிப்பீடு

பாரதப் பிரதமராக மோடியை ஏகோபித்த ஆதரவுடன் இந்தியா தேர்ந்தெடுத்துவிட்டது. இதுவரை காணாத வகையில் பாஜக மட்டுமே தனித்து 282 இடங்களில் வென்றதுடன், மொத்தத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 336 இடங்களில் வென்றுள்ளது. அதேசமயம், தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களில் மட்டும் பாஜகவால் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியவில்லை. இம்மாநிலங்களின் அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்க வேண்டிய தருணம் இது. இம்முறை நாடு முழுவதுமே பாஜக வலுவாகக் காலூன்றி உள்ளது. மோடியே சொன்னது போல, இது காங்கிரஸுக்கு எதிரான அலை மட்டுமல்ல, பாஜகவுக்கு ஆதரவான அலையும் கூட. அதனால் தான் இதுவரை கணக்கைத் துவங்காத பல... [மேலும்..»]

மாபெரும் வெற்றியின் மகத்தான விளைவுகள்…

1984-க்குப் பிறகு இந்திய அரசியலில் நிலவிய குழப்பமான, அரசியல் எண்ணிக்கை விளையாட்டுக்கு வழிவகுத்த சூழல் இத்தேர்தலில் காணாமல் போயிருக்கிறது. அரசின் கொள்கை முடிவுகளில் சிறு கட்சிகள் கூட ஆதிக்கம் செலுத்தும் நிலையையும், பாஜகவின் மகத்தான வெற்றி மாற்றி அமைத்திருக்கிறது.... மக்களிடம் காங்கிரஸுக்கு எதிராக பிரசாரம் செய்து வென்று, பிறகு மக்கள் முதுகில் குத்துவது போல காங்கிரஸை ஆதரித்துவந்த பல கட்சிகளுக்கும் இத்தேர்தல் ஆப்பு வைத்துவிட்டது... இஸ்லாமியர்களும் கூட குறிப்பிடத்தக்க அளவில் பாஜகவுக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் வாக்களித்து, தங்கள் மீதான அபவாதத்தைப் போக்கிக் கொண்டிருக்கிறார்கள். சிறுபான்மையினரை தாஜா செய்யும் போக்கிற்கு இத்தேர்தல் முடிவு கண்டிருக்கிறது... [மேலும்..»]