Posts Tagged ‘ நவீன சிந்தனை ’

அஞ்சலி, இலக்கியம், வழிகாட்டிகள்

பாரதி மரபில் ஜெயகாந்தன்

பாரதி மரபில் ஜெயகாந்தன்

பாரதியை முழுமையாய் உள்வாங்கி வாய்ப்புக் கிடைக்கிறபோதெல்லாம் மேற்கோளாக்கி அவர் கருத்துக்களை படைப்பிலும், வாழ்க்கையிலும் நடைமுறைப் படுத்திய மிகச் சிலரில் ஒருவராக ஜெயகாந்தன் விளங்குகிறார். பாரதியின் கவிதைகளோடும், வாழ்வு நிகழ்வுகளோடும் கொண்டிருந்த உறவு ஜெயகாந்தனின் புதுமை ,புரட்சி படைப்புகளுக்கு வித்தாகிறது. பாரதியின் ’ கனகலிங்கத் ’ தொடர்புதான் பிரமோபதேசம் உருவாகக் காரணமானது... பாரதிக்கு சரியான அங்கீகாரம் தரப் படவில்லை என்ற ஆழமான குறையும் ஜெயகாந்தனுக்கு உண்டு. சோவியத் பயணத்தின் போது மகாகவி புஷ்கினை ரஷ்ய மக்கள் போற்றும் நிலையை ஜெயகாந்தன் பார்க்க நேரிடுகிறது. புஷ்கினை அறியாத வர்களோ, புரிந்து கொள்ளாதவர்களோ அங்கில்லை. ஆனால் பாரதியை நாம் உலகத்திற்குக் காடடுகிற... [மேலும்..»]

சமூகம், பொது, வழிகாட்டிகள்

காந்தியின் (கி)ராம தரிசனம்

January 30, 2012
-
காந்தியின் (கி)ராம தரிசனம்

குண்டு பாய்ந்தவுடனேயே காந்தியின் உயிர் பிரிந்து விட்டது. அவர் வாயிலிருந்து சொற்கள் எவையும் வெளிவரவில்லை... நோயாளிகளுக்கு ராம நாமத்தையும், சில இயற்கை வைத்திய முறைகளையுமே மருந்தாக மருந்துச் சீட்டில் எழுதிக் கொடுத்திருக்கிறார்.. சத்தியத்தின், அகிம்சையின் தரிசனத்தை நாம் கிராமங்களின் எளிமையில் மட்டுமே காண முடியும்... இந்தியாவில் நகரங்களின் வல்லாதிக்கம் நிகழ்கிறது. கிராமங்கள் நொறுக்கி உண்ணப்படுகின்றன. கிராமங்களை உறிஞ்சி நகரங்களை வலுப்படுத்தும் ஓர் அரசியல் இங்கே அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கிராமியமனநிலை என்பதே பிற்போக்குத்தனம்... [மேலும்..»]

இந்து மத விளக்கங்கள், கேள்வி-பதில்

மதமெனும் பேய்

November 10, 2010
-
மதமெனும் பேய்

”நம் வள்ளலாரோ ஒரு படி மேலே சென்று மதம் ஒரு பேய் என்றே எடுத்துரைத்திருக்கிறார். என்னே வள்ளலாரின் பகுத்தறிவுப் பாங்கு!..”... காலனிய காலகட்டத்தில் மேற்கத்தியர்கள் தங்கள் மதமான கிறிஸ்தவம் இயற்கையிலேயே புனிதமானது, தெய்வீக ஆணையுடையது என்றும், மற்ற மதங்கள் வெறும் கருத்துக் குவியல்கள் என்றும் கருதினார்கள். ஆனால் இந்திய மரபில் மதம் வெறும் நம்பிக்கையை அல்ல, அறிவுபூர்வமாக விவாதித்து பின் உட்கிரகிக்கப் பட்ட கொள்கை என்பதையே குறித்தது என்று அந்தச் சொல்லின் உருவாக்கம் மூலமே புரிந்து கொள்ள முடியும்... [மேலும்..»]

அனுபவம், இலக்கியம், கவிதை

ஊட்டி இலக்கிய சந்திப்பு: ஒரு அனுபவம்

August 31, 2010
-
ஊட்டி இலக்கிய சந்திப்பு: ஒரு அனுபவம்

இந்த இரண்டரை நாட்களில் இரண்டாயிரம் ஆண்டுக்கால தமிழ்க் கவிதையின் பல வீச்சுக்களையும், பரிமாணங்களையும் வண்ணத் தீற்றல்களாக அனுபவிக்க முடிந்தது... விவாதம் சூடாகி, உரத்த குரல்கள், கூச்சல்கள் ஒருசில சமயங்கள் எழுந்த போதும்... சில இலக்கிய விவாதங்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும், இதுவும் ஒரு நல்ல திகில் அனுபவமாகவே இருந்தது... இந்தக் கருத்துக்களை ஏற்கனவே பலமுறை ஜெ.மோவே எழுதியுள்ளார் என்றாலும், இத்தகைய தொகுப்பு நோக்கில் நேரடியாக, வாய்மொழியாக அதனை விளக்கியது சிறப்பாக இருந்தது... [மேலும்..»]

ஆன்மிகம், புத்தகம்

ஆண்டவன் மறுப்பும் ஆன்மிகமே: புத்தக விமர்சனம்

ஆண்டவன் மறுப்பும் ஆன்மிகமே: புத்தக விமர்சனம்

போலிப்பகுத்தறிவு பேசிய இனவாதிகள் ஆபிரகாமிய மத நம்பிக்கையை ஆதர்ச மத நம்பிக்கையாக நம் மக்கள் முன் வைத்தனர். இந்துக்களும் தமது இறைக் கோட்பாடுகளை ஆபிரகாமிய சட்டகத்தில் பிரதி எடுக்க ஆரம்பித்தனர். "நான் முருகனை நம்புகிறேன். நீ ஏசுவை/அல்லாவை நம்புகிறாய்" என மத-ஒப்புமை பேச ஆரம்பித்தனர். ஆனால் உண்மை வேறுவிதமானது; ... ஒரு தொடக்க அறிதல் முறையாக சிருஷ்டியை ஒரு தேவன் செய்தான் என்கிற கோட்பாட்டை வைத்து விளையாடிவிட்டு அதனை வளரும் குழந்தை பொம்மைகளை உதறுவது போல உதறியிருக்கிறார்கள்... [மேலும்..»]

அனுபவம், இலக்கியம், பொது

இந்துத்துவ முத்திரை

July 12, 2010
-
இந்துத்துவ முத்திரை

‘உழைக்கும் மக்களை அடிமைப் படுத்தி, அவர்கள் முதுகெலும்பை உடைத்து, அதன்மீது அவன் கட்டியவை இந்தக் கோயில் கோபுரங்கள்’... சாரு நிவேதிதா அப்போது முற்போக்கு முகாம்களால் இந்துத்துவ வாதி என்று வசைபாடப் பட்டார். காந்தி முதல் கண்ணதாசன் வரை எல்லாரும் கீதையைப் பற்றி எழுதியிருக்காங்களே? அவங்க எல்லாம் பார்ப்பனீயத்தின் பாதுகை தாங்கிகள்.. இந்துத்துவ முத்திரை என்பது ஒரு சர்வப்ரஹரண ஆயுதம் - இந்த அஸ்திரத்தால் குத்துப் படாத ஆளே இல்லை, அதை அவ்வப்போது எடுத்துப் பிரயோகிப்பவர்கள் உட்பட! [மேலும்..»]

சமூகம், தத்துவம், வரலாறு

சுய அறிதலும் வரலாற்று அறிதலும்

சுய அறிதலும் வரலாற்று அறிதலும்

புனிதமற்ற வாழ்க்கைதான் மானுடருக்கு லபித்திருக்கிறது. புனிதம் என்பதே ஒரு ஆதர்சம். இல்லாதது என்பதால்தான் அத்தனை கவர்ச்சியாக அது தெரிகிறது...நம் தனிவாழ்வின் வரலாற்றுச் சிறையில் இருந்தே நாம் ஒவ்வொருவரும் உலகை நோக்குகிறோம் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்... சமத்துவம் என்ற பெயரில் நிறையப் புரட்டு வேலைகள் செய்து பதவிக்கு வந்து வேறொரு அடுக்கு முறையை மக்கள் மீது திணித்த பல சர்வாதிகாரிகளை நாம் மார்க்சியம், நாசியிசம், ஃபாசிஸம், கிருஸ்தவம், இஸ்லாம் என்ற செமித்தியச் சிந்தனையின் பல வடிவங்களில் உலகில் பார்க்கிறோம்... [மேலும்..»]

கலைகள், வரலாறு

சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 4

சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 4

அந்த முக, நேத்ர அபிநயங்களில் தான் கதகளி தன் அடையாளத்தைப் பதிப்பித்திருக்கிறது. அது தான் கதகளி. கதகளி மாத்திரமே. கதகளியைத் தவிர வேறு எதாகவும் அது இருக்கமுடியாது. இத்தகைய ஓர் அனுபவம் எனக்கு பின் வருடங்களில், கதா நிகழ்த்திய விழா ஒன்றில்.... ....பத்மா அத்வைதத்திற்கு அளித்த ஒற்றை விரல் நீட்டும் அபிநயத்தைப் பற்றி காலம் சென்ற சுப்புடு, அவருக்கே உரிய பாஷையில், "பத்மா சுப்ரமண்யத்திற்கு அது அத்வைதத்தைக் குறிப்பதாக இருக்கலாம். அதே அபிநயம் நம்மூர் ஒண்ணாங்களாஸ் பையனுக்கு 'சார் ஒண்ணுக்கு!' என்று அனுமதி கேட்பதாக இருக்கும்," என்று எழுதியிருந்தார். [மேலும்..»]