2019 தேர்தல்: யாருக்கு வாக்களிப்பது?

கடந்த பல பத்தாண்டுகளாக தமிழ்நாட்டு அரசியலை வியாபித்திருக்கும் மொண்ணைத் தனத்தையும் தேக்கத்தையும் உடைத்தெறியக் கூடிய சாத்தியக் கூறுகளையும் இந்தத் தேர்தல் கொண்டிருக்கிறது… எந்த முறையும் இல்லாதவாறு இந்தத் தேர்ந்தலில் ஹிந்துக்களிடம் ஒரு கேள்வி எழுந்துள்ளது. ஏன் ஹிந்துக்களை மட்டும் மட்டம்தட்டிக் கேவலப்படுத்தும் ஒரு கட்சிக்கு ஹிந்துக்கள் வாக்களிக்கவேண்டும் என்பதே அது… திமுகவை தமிழக அரசியலில் அசைத்துப் பார்க்க கிடைத்திருக்கும் அரிய சந்தர்ப்பம் இது. கருணாநிதி இல்லாத நிலையில், ஸ்டாலின் மீது நடுநிலைப் பொதுமக்கள் எதிர்ப்புணர்வு கொண்டிருக்கும் நிலையில், திமுகவை ஆட்டம் காண வைப்பது எளிது…

View More 2019 தேர்தல்: யாருக்கு வாக்களிப்பது?

இன்று அண்ணல் அம்பேத்கர் யாருக்கு வாக்களித்திருப்பார்?

எனக்குத்தெரிந்து விலைவாசி உயர்ந்துவிட்டது, மக்கள் அவதிப்படுகிறார்கள் என்று பிரச்சாரம் செய்யாத தேர்தல் இதுவாகத்தான் இருக்கும். எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்றும் ஊழல் மலிந்துவிட்டது என்றும் பிரச்சாரங்கள் நடைபெறவில்லை. எம்பிக்கள் கொள்ளையடித்துவிட்டார்கள் என்று எங்கேயும் பிரச்சாரம் நடைபெறவில்லை. பொருளாதாரம் படுகுழியில் வீழ்ந்துவிட்டது என்று பேசுவதில்லை. அதாவது மக்களை நேரடியாக பாதிக்கிற பிரச்சினைகளைப் பற்றி யாரும் முக்கியப் பேசுபொருளாகப் பேசுவதில்லை. மதசார்பின்மைக்கு ஆபத்து வந்துவிட்டது. ஆகவே மதசார்பின்மையை காக்க மோடிக்கு வாக்களிக்க கூடாது. சிறுபான்மையினர் தாக்கப்படுகிறார்கள். பட்டியல் சமூதாயத்தினர் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்று முக்கியப் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இதுதான் இந்த தேர்தலில் மையப் பிரச்சாரம்… அண்ணல் அம்பேத்கர் தீர்க்கமான பார்வையுடையவர். இவற்றுக்கான தீர்வுகளை முன்வைத்தவர். அதனால் இவற்றைப்பற்றி இன்று பிரச்சாரம் மையம் கொண்டிருப்பதால் அண்ணல் அம்பேத்கர் இருந்திருந்தால் இன்று எந்தக் கட்சிக்கு வாக்களித்திருப்பார் என்பதை அலச வேண்டியுள்ளது…

View More இன்று அண்ணல் அம்பேத்கர் யாருக்கு வாக்களித்திருப்பார்?

இலங்கை: என்று தீரும் எம் சகோதரர்களின் சோகம்?

2009  ஏப்ரல், மே மாதங்களில் இலங்கையில் நிகழ்ந்த உள்நாட்டுப் போரின் போது ஏதோ வேற்றுக் கிரகத்தில் நடப்பது போல வேடிக்கை பார்த்திருந்த அதே தமிழகம், இப்போது குதித்துக் கொந்தளிக்கிறது…. தீர்மானத்தில் இலங்கையில் நடந்த இனப்படுகொலையை கண்டித்து எங்காவது ஒரு வார்த்தை இருக்கிறதா? அல்லது, இலங்கை  அரசின் போர்க் குற்றங்கள் குறித்த கண்டனங்கள் எதாவது இருக்கின்றனவா? இந்த அதிமேதாவித் தனமான தீர்மானத்தை ஆதரிக்கத் தான் இரண்டு வாரம் யோசித்தது நமது மத்திய அரசு. இந்தத் தீர்மானத்தால் புளகாங்கிதம் அடைத்து தான் நமது மாணவர்கள் தங்கள் படிப்பைத் துச்சமெனத் துறந்து தெருவில் இறங்கினார்கள். இதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா?….. இந்தியாவின் இறையாண்மையை உலக அரங்கில் உயர்த்தும் நோக்கத்துடனும், இந்திய வம்சாவழியினரின் நலனுக்காகப் பாடுபடும் திண்மையுடனும் மத்தியில் எப்போது நல்லரசு உருவாகும்? அப்போது தான் நமது சகோதரர்களின் சோகம் தீரும்….

View More இலங்கை: என்று தீரும் எம் சகோதரர்களின் சோகம்?