Posts Tagged ‘ நாட்டார் வழிபாடு ’

குற்றாலக் குறவஞ்சி: ஓர் இலக்கிய அறிமுகம்

November 21, 2018
By

காதல் நோயால் வருந்தும் தலைவியைத் தேடிக் கொண்டு குறத்தி வருகிறாள். தங்களது குற்றால மலையின் அழகையும் வளத்தையும் வர்ணித்து அவள் பாடும் பாடல்கள் அற்புதமானவை. இன்றைய பொதுப்பயன்பாட்டில் குறவன், குறத்தி ஆகிய சொற்களை நாகரீமில்லாத காட்டுமிராண்டி மக்களைக் குறிப்பது போலப் பயன்படுத்துகிறோம். ஆனால் 200 ஆண்டுகளுக்கு முன்பு கூட, மலைவாழ் சாதியினரான குறவர்கள் தங்களது குலத்தின் கீர்த்தியைப் பெருமிதத்துடன் எடுத்துரைப்பதை இந்த நூலில் காண முடிகிறது: "அருள் இலஞ்சி வேலர்தமக்கு ஒருபெண்ணைக் கொடுத்தோம் - ஆதினத்து மலைகளெல்லாம் சீதனமாக் கொடுத்தோம்"... குறி சொல்வதற்கு முன் தெய்வ வணக்கம் செய்கிறாள் குறத்தி. சிவபெருமான், உமையம்மை தொடங்கி... [மேலும்..»]

காஞ்சி காமாட்சியும் சங்கரரும்

April 11, 2018
By

காஞ்சியில் ஆதி சங்கரர் காமாட்சி தேவியின் வழிபாட்டை நிலைநிறுத்தினார் என்ற குறிப்பு மாதவீய சங்கர விஜயத்தில் (பொ.பி 14ம் நூற்.) உள்ளது. இந்தக் குறிப்பில் கூறப்பட்டுள்ள கோயில் காமக்கோட்டம் எனப்படும் ஸ்ரீகாமாக்ஷி ஆலயம் தான் என்று வரலாற்று அறிஞர் முனைவர் சங்கரநாராயணன் கருதுகிறார். பாரததேசத்தின் பல பிரதேசங்களில் உள்ள கோயில்களிலும், அங்குள்ள சிவ, விஷ்ணு, சக்தி மூர்த்திகளின் வழிபாடுகள் ஸ்ரீசங்கரரால் நிறுவப்பட்டன அல்லது சீரமைக்கப் பட்டன என்ற சம்பிரதாயத்தைப் பெருமிதமாகக் குறிப்பிடுகிறார்கள்... தமிழ்நாட்டில் கோயில் மரபுகளைப் பற்றிய எந்த வரலாறானாலும், எந்த ஆதாரமுமில்லாமல் அது தொடர்பாக பிராமண சதி (அல்லது ஸ்மார்த்தர் சதி, வைணவ... [மேலும்..»]

நான் ஏன் தலித்தும் அல்ல: புத்தக விமரிசனம் – 2

கொலை செய்த ஆதிக்க சாதியின் குற்ற உணர்ச்சியும் பயமுமே கொலையுண்ட சிறு தெய்வங்களை உருவாக்குகிறது என்பது அடக்கப்பட்ட மக்களின் பதிலடியை மலினப்படுத்திவிடுகிறது. கொன்றவர்களே தெய்வமாகவும் ஆக்கியிருக்கிறார்கள் என்பது அவர்களை சாதகமான கோணத்தில் பார்க்கும் அபாயத்தையே முன்னெடுக்கிறது. ஒரு சிறிய கேள்வியை இங்கு கேட்டுக்கொண்டாலே இந்தக் கூற்று எந்த அளவுக்குப் பிழை என்பது விளங்கிவிடும் - இளவரசனை வன்னியர்கள் தெய்வமாக்குவார்களா பறையர்கள் தெய்வமாக்குவார்களா?... தங்களுடைய சமரசமும் போர்க்குணமும் எப்படி விடலைத்தனமானதாக இருக்கிறதோ அதுபோலவேதான் திராவிடப் போர்வாள்களின் இத்தனை கால வீச்சுக்களும் இருந்திருக்கின்றது என்ற கண்டடைதல் உண்மையிலே மிகவும் அற்புதமானது. இதை விரிவாக வளர்த்தெடுத்துச் செல்லும் துணிச்சல் தர்மராஜ் போன்றவர்களுக்கு... [மேலும்..»]

வால்மீகி ராமாயணமும் “முன்னூறு ராமகதைகளும்”: ஓர் அலசல் – 4 [இறுதி]

பின்னால் எழுந்த நூல் காலத்தினாற் பின்பட்டது, அதன் நோக்கம் முந்தைய நூலினை ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக மறுதலிக்க விழைவது என்று தெரிந்தும், அவ்வாறு அடையாளப் படுத்தப்பட்ட பின்னரும், இரண்டையும் ஒரே தராசில் ஒருசேர நிறுப்பது மதிஹீனமல்லவா?... காளிதாஸர், பவபூதி, கம்பர் இவர்களெல்லோரும் வால்மீகி முனிவரை அடியொற்றுபவர்களாகப் பார்க்க வேண்டுமேயல்லாது அவருடைய போட்டியாளர்களாகப் பார்க்க விழைவது பிழையான புரிதல்... ஸ்ரீ ஏ.கே.ராமானுஜன் போன்ற ஒருவர் இவற்றைத் தொகுக்கும் காலத்தில், மூல வடிவத்திலான ராமாயணக்கதையுடன் சேர்த்து, உயர்வான, கோணலான மற்றும் வக்ரமான உள்ளூர் கற்பனைகளைக் கலந்து வடிக்கப்பட்ட ஒரு கலவையாகவே நாட்டார் வழக்கு வாய்வழி ராமாயணக் கதைகள் இருந்தன.... [மேலும்..»]

விநாயகர் நினைவுகள்

விநாயகர் நினைவுகள்

கொங்கதேச குடிகளின் மங்கள சடங்குகள் அனைத்துமே விநாயகரை தொழுதே செய்யப்படுகின்றன. கொங்கதேசத்தில் கிராமங்கள் நிர்மாணம் செய்யப்பட்டபோது மேற்கே அரசமரங்கள் நடப்பட்டதோடு அங்கு விநாயகர் நிறுவி வழிபடப்பட்டார். கொங்கதேசத்தின் ஏராளமான சிற்றிலக்கியங்கள் ஆவணங்கள் விநாயகர் வழிபாட்டோடுதான் துவங்குகின்றன. நிலத்தை உழத்துவங்கையிலும், விதை விதைக்க துவங்கையிலும், கதிரருக்கும்போதும் விநாயகர் வழிபாடு உண்டு. அதற்கான நாட்டுப்புறப் பாடல்கள் கூட பல கிராமங்களில் சேகரிக்கப்பட்டுள்ளது... பிள்ளையார் மிகவும் எளிமையான தெய்வம். மக்கள் மனதுக்கும் நெருக்கமான உறவானவர். டாம்பீகமற்றவர். எளிமையாக ஒரு பிடி களிமண்ணையோ, நாட்டு பசுவின் சாணத்தையோ அல்லது மஞ்சளையோ பிடித்துவைத்துவிட்டால் பிள்ளையார் வந்துவிடுவார்... பாலும், தேனும், பாகும், பருப்பும் படைத்து... [மேலும்..»]

மேட்டிமைவாதமும் மிருகபலியும்: ஒரு சிறுகதையை முன்வைத்து..

November 20, 2012
By

அவரது உணர்வுகளை அவர் பால்கனியிலிருந்து பார்க்கும் கோயில் மிருகபலிக் காட்சிகள் அதிர்ச்சிக்கு உள்ளாக்குகின்றன. வீட்டை மாற்றிவிடலாமா என்று கூட யோசிக்கிறார்.... மக்களது அப்பாவித்தனத்தையும், பக்தியையும் பயன்படுத்தி அவர்களை ஏய்ப்பதற்கும் ஒடுக்குவதற்கும் ஆன ஒரு யுக்தி சாதனமாகவே இருக்கிறார் பிள்ளையார். கதை எழுதப் பட்ட விதம், இந்த ஆன்மிகப் போலித் தனத்தை சுட்டவில்லை. அந்த விஷயம் கோடி காட்டப் படக் கூட இல்லை. இது அடிப்படையில் ஒரு மேட்டிமைவாத ஐயங்கார் பார்வை மட்டுமே. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்தக் கதையின் கண்ணோட்டம் இந்து மத அளவில் பொதுமைப்... [மேலும்..»]

களரி – தொல்கலைகள் & கலைஞர்கள் மேம்பாட்டு மையம்

இந்த மையம், கூத்து, பாவைக்கூத்து, சேவாட்டம் முதலிய நிகழ்த்துக் கலைகளை பயிற்றுவிக்கும் படியான பயிற்சிப் பள்ளியை சேலம் மாவட்டம் ஏர்வாடியில் தொடங்க இருக்கிறது. அதற்கான ஆரம்பகட்டப் பணிகள் ஏலவே செயலாக்கம் பெற்றுவிட்டன. பெரும் நிதி வேண்டும் இக்களப்பணிக்கு அன்பர்கள் உற்ற நிதியுதவி செய்து உதவ வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.. சமூகத்தின் கடை கோடியில் வாழ்ந்துவரும் விளிம்புநிலை நிகழ்த்துக் கலைஞர்கள் மீளமுடியாத வறுமையில் உழன்றபோதிலும் தம், உடல்,பொருள், ஆவி ஈந்து அந்த அரிய கலைகளுக்கு உயிரூட்டி வருகிறார்கள்... [மேலும்..»]

வீரத்தின் வித்தான வீரபத்திரர் வழிபாடு

முகலாயப் படையெடுப்பாளர் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் புகுந்தார்களாம். அங்கே தூணில் அமைந்திருக்கிற அஷ்புஜ அக்னி அகோர வீரபத்திரரின் வனப்பையும் நேர்த்தியான வேலைப்பாட்டையும் கண்டு... கர்நாடக நாட்டுப்புறவியலில் “வீரகசே” என்ற கூத்து மரபு உண்டு.. இலங்கையில் யாழ்ப்பாணத்து கட்டுவன் பகுதியில் வீரபத்திரக் கூத்து அப்பகுதியில் வதியும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரால் ஆடப்பட்டு... குளிர்ச்சியான இடத்தில் மட்டுமே வசிக்கும் தேள்கள் இவருக்கு மாலையாகின்றன. சிலந்திப்பூச்சி இவருடலில் விளையாடி மகிழ்கிறது... [மேலும்..»]

சுமைதாங்கி [சிறுகதை]

என் தீஸிஸை அந்த ப்ராஜக்ட்டுடன் இணைத்தால் டாக்டரேட்டுக்கு டாக்டரேட்டுடன் உபகாரத் தொகையும் டாலர்களில் கிடைக்கும். என் தீஸிஸ் தலைப்புமே கூட ஃபாதர் சொன்னதுதான். நாட்டார்த் தாய்தெய்வங்களின் மேல்நிலையாக்கம், கடந்த இருநூறு ஆண்டுகளில், மூன்று தென்மாவட்டங்களில்... நீங்க 'சுடலை மோட்சம்' சிறுகதை படிச்சிருக்கீங்கதானே?... ஒருவேளை இந்தப் பார்ப்பனர் அங்கிருந்த தலித் மக்களின் வழிபாட்டு முறையைச் சீண்டிப் பார்த்திருக்கலாம், அதனால் அவர்கள் இவருடைய பூணூலை அறுத்திருக்கலாம்... [மேலும்..»]

விருதுக் கொலை [சிறுகதை]

செல்வி ஏன் தூக்கில தொங்கினா… "இந்தச் சமுதாய மக்கள் தங்களைக் குறித்துக் கூறும் கருத்துகளை ஓர் ஆராய்ச்சியாளர் அப்படியே உண்மையென்று எடுத்துக்கொள்ள முடியாது. எனவே நான் இந்தச் சமுதாயத்தில் வெல்லம் அம்மனாக்கப்பட்ட ஒரு பெண்ணைக் கண்டுபிடிப்பது என முடிவு செய்தேன்"…. "எனவே ரீனா சிந்தாமணியை, பொய் ஆவணங்கள் உருவாக்கியது, தலித் சமுதாயத்தை மோசமாகச் சித்தரித்தது, எல்லாவற்றுக்கும் மேல் ஒரு பெண் குழந்தையை மன உளைச்சல் ஏற்படுத்தி தற்கொலைக்கு ஆளாக்கியது ஆகியவற்றுக்காக நடவடிக்கை எடுக்க வேண்டும்," என இந்த அறிக்கை கோருகிறது... [மேலும்..»]