Posts Tagged ‘ நாதுராம் கோட்சே ’

காந்தி, கோட்சே, ஹிந்துமதம்: கமல்ஹாசன் கருத்துக்கள் – ஒரு பார்வை

May 21, 2019
By

துரதிர்ஷ்டவசமாக, தமிழ்நாட்டின் பெரும்பான்மை மக்களுடைய பண்பாட்டு, வரலாற்று அறிவும் கூட கமல்ஹாசன் அளவுக்கோ, அல்லது அதைவிட சிறிதே சற்று மேலாகவோ தான் இருக்கிறது என்று தோன்றுகிறது. அதனால் தான், அவரது கேள்வி அடிப்படையிலேயே அபத்தமானது என்பதைக் கூட அழுத்தமாகக் கூறி அதை நிராகரிக்காமல் அதைவைத்து மாய்ந்து மாய்ந்து முட்டாள்தனமான "விவாதங்களை" நடத்திக் கொண்டிருக்கிறார்கள். விநோதமான மீம்கள் வந்து கொண்டிருக்கின்றன. இது குறித்து ஆதாரபூர்வமான தரவுகளுடன் நான் எழுதிய ஹிந்து என்னும் சொல் என்ற எனது கட்டுரையிலிருந்து ஒரு பகுதியைக் கீழே தருகிறேன்... அதிகாரபூர்வ பாஜக, ஆர் எஸ் எஸ் தரப்புகள் கமலுடைய ஹிந்து மத அவதூறுக்கு கண்டனம்... [மேலும்..»]

நாதுராம் கோட்சே இஸ்மாயில் என்று பச்சைக் குத்திக் கொண்டிருந்தாரா?

கோட்சே நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்தபோது, “காந்தி சுயநலம் இல்லாதவர். நாட்டுக்காகத் துன்பங்களை ஏற்றவர். சொந்த ஆதாயத்துக்காக எதுவும் செய்யவில்லை. மக்கள் மனதில் விழிப்புணர்வைக் கொண்டுவந்தவர்” என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். எல்லோருமே காந்திஜி கொலையில் தனக்கு சம்பந்தமில்லை என்று வாதாடியபோது, கோட்சே மட்டும்தான் கடைசிவரை உறுதியாக, தான் மட்டும்தான் தன்னிச்சையாக அரசியல் காரணங்களுக்காக காந்தியைக் கொன்றதாகவும், இதில் எந்தவித அமைப்போ அல்லது குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களுக்கோ எந்த ரீதியிலும் சம்பந்தமில்லை என்றும், தான் நல்ல திட சிந்தனையில் காந்தியைக் கொல்ல வேண்டும் என்ற சரியான எண்ணத்துடன்தான் கொலை செய்ததாகவும் கூறினார். கோட்சேவுக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டும் அதை எதிர்த்து மேல்முறையீடு... [மேலும்..»]

சாக்‌ஷி மஹராஜ் விவகாரம்: நடப்பது என்ன?

சாக்‌ஷி மஹராஜ் விவகாரம்: நடப்பது என்ன?

அண்மைக்காலமாக, பாஜகவில் சில தலைவர்களின் பேச்சுக்கள் சர்ச்சைக்குரியதாகி வருகின்றன. சாக்‌ஷி மஹராஜ், சாத்வி நிரஞ்சன் ஜோதி, யோகி ஆதித்யநாத் போன்ற இரண்டாம் நிலைத் தலைவர்கள் சிலரின் எக்குத்தப்பான பேச்சுக்களால், நரேந்திர மோடியின் வளர்ச்சிக்கான ஆட்சி என்ற பிம்பம் குலைகிறது. சாக்‌ஷி மஹராஜுக்கு பாஜக அளித்துள்ள எச்சரிக்கை நோட்டீஸ், அதன் தீவிரத்தை கட்சி உணர்ந்திருப்பதை வெளிக்காட்டுகிறது. பாரதீய ஜனதா கட்சியின் வேர்கள் ஹிந்துத்துவத்தில் தான் நிலைகொண்டுள்ளன. ஹிந்து என்பதில் பெருமிதமும், தேசிய உணர்வில் தெளிவான கண்ணோட்டமும் தான் பாஜகவின் அடிப்படை. இதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து கிடையாது. ஆனால், ஆட்சியில் இருக்கும்போது பாஜகவின் நிலைப்பாடுகள் தேசத்தின் ஒட்டுமொத்த மக்களையும்... [மேலும்..»]